- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஅங்காரகச் சதுர்த்தி அன்று ஏற்ற வேண்டிய தீபம்

அங்காரகச் சதுர்த்தி அன்று ஏற்ற வேண்டிய தீபம்

- Advertisement -

பங்குனி மாதம் என்பது சிறப்புக்குரிய மாதம். அந்த மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு திதிக்கும் ஒவ்வொரு விதமான சிறப்புகள் இருக்கும். அந்த வகையில் விநாயகர் பெருமானுக்கு உகந்த திதியான தேய்பிறை சதுர்த்தியான சங்கடஹர சதுர்த்தி என்பது செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வருகிறது. முருகப்பெருமானுக்கும் விநாயகர் பெருமாளுக்கும் உகந்த இந்த தினத்தில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் நாம் செய்யக்கூடிய இந்த ஒரு வழிப்பாடானது நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கும். அந்த வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

அங்காரகச் சதுர்த்தி தீபம்

செவ்வாய் பகவானால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் நீங்கவும் கஷ்டங்கள் விலகவும் செவ்வாய்க்கிழமை தோறும் நம் முருகப்பெருமானை வழிபாடு செய்வோம். அப்படிப்பட்ட செவ்வாய்க்கிழமை அன்று விநாயகப் பெருமானுக்கு உகந்த சங்கடஹர சதுர்த்தி நாள் வரும் பொழுது நாம் விநாயகர் பெருமானையும் முருகப்பெருமானையும் ஒருசேர வழிபட நம் வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக கடன் தொடர்பான பிரச்சனைகள் நீங்குவதற்கு இந்த நாள் நமக்கு உறுதுணையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட நாளில் செய்ய வேண்டிய வழிபாட்டு முறையைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

மார்ச் மாதம் 18ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய விநாயகர் பெருமானின் படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். அதேபோல் முருகப்பெருமானின் படத்தையும் சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். இருவருக்கும் சிவப்பு நிற மலர்களாலும் வாசனை மிகுந்த மலர்களாலும் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். விநாயகப் பெருமானுக்கு கூடுதலாக அருகம்புல் மாலையை சாற்றி தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். தங்களால் இயன்ற ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். அது இனிப்பாக இருந்தால் மிகவும் சிறப்பு.

பிறகு விநாயகப் பெருமானுக்கு முன்பாக மூன்று அகல் விளக்குகளை வைத்து அதில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுத் திரி போட்டு கிழக்கு பார்த்தவாறு தீபம் ஏற்ற வேண்டும். பிறகு ஒரு விரிப்பை விரித்து அதன் மேல் அமர்ந்து பின்வரும் விநாயகர் பெருமானின் இந்த மந்திரத்தை 111 முறை கூறி விநாயகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த அர்ச்சனையானது அருகம்புல்லாலும் செய்யலாம் அல்லது வாசனை மிகுந்த மலர்களாலும் செய்யலாம். அர்ச்சனை செய்து முடித்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி உங்கள் வாழ்வில் இதுவரை இருந்து வந்த கஷ்டங்கள் அனைத்தும் நீங்க வேண்டும் என்று முழு மனதோடு விநாயகப் பெருமானையும் முருகக் கடவுளையும் வேண்டி வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும்.

- Advertisement -

மந்திரம்

“ஓம் விக்ன விநாயகா போற்றி ஓம்”

இதையும் படிக்கலாமே:குடும்பத்தில் மகிழ்ச்சி திரும்ப
செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வரும் சங்கடஹர சதுர்த்தி நாளன்று பிரம்ம முகூர்த்த நேரத்தில் இந்த முறையில் விநாயகப் பெருமானையும் முருகக் கடவுளையும் வழிபாடு செய்பவர்களுடைய வாழ்க்கையில் இருந்து வந்த கஷ்டங்கள் அனைத்தும் காணாமல் போகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்