ஜோதிடத்தின்படி ஒரு ஜாதகருக்கு செவ்வாய் கிரகத்தால் தான் கடன்கள் அதிகரிக்கிறது. ஒரு விஷயத்திற்காக கடன் வாங்க போய் பின் தொடர்ந்து கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள். எவ்வளவு கடன் இருந்தாலும், அவற்றை விரைவில் கொடுத்து தீர்ப்பதற்கு ஜோதிடத்தில் இருக்கும் வழிமுறைகள் என்ன? என்னும் ரகசியத்தை தான் இந்த ஜோதிடம் சார்ந்த பதிவில் அறிந்து கொள்ள இருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.
ஜோதிடத்தின் படி செவ்வாய் பகவான் ரொம்பவும் பரபரப்பான மற்றும் சுறுசுறுப்பான கிரகமாக இருக்கிறது. வேகமும், விவேகமும், ஆற்றலும் அதிகமாக இருக்கும் இந்த செவ்வாய் பகவான் அருள் இருந்தால் தீராத உங்கள் கடன் பிரச்சனைகள் விரைவிலேயே தீர்ந்துவிடும். செவ்வாய்க்கிழமையில் செவ்வாய் பகவானை நினைத்து இப்படி செய்யுங்கள்.
பொதுவாகவே குளிகை நேரத்தில் ஒரு விஷயத்தை செய்தால் அது திரும்பத் திரும்ப நடக்கும் என்பது ஐதீகம். வேகத்தையும், விவேகத்தையும் கொண்ட செவ்வாய் கிழமையில் வரக்கூடிய குளிகை நேரம் ரொம்பவும் விசேஷமானது. குளிகையில் கடன் தொகை கொடுத்தால் விரைவில் கடன் அடையும். செவ்வாய்க்கிழமையில் வரக்கூடிய இந்த குளிகை நேரத்தில் கடன் தொகையை செலுத்தினால் வேகமாக கடன் அடையும் என்பது ஜோதிட ரகசியமாகும்.
கஷ்டப்பட்டு கடனை அடைத்து விட வேண்டும் என்று நீங்கள் போராடிக் கொண்டிருந்தால், உங்கள் கடன் தொகையிலிருந்து ஒரு சிறு தொகையை ஆவது செவ்வாய் கிழமையில் வரக்கூடிய குளிகை நேரத்தில் கொண்டு போய் கொடுங்கள். செவ்வாய்க்கிழமையில் 12 முதல் 11/2 மணி வரையிலான இந்த ஒன்றரை மணி நேரம் குளிகை நேரம் ஆகும். இந்த நேரத்தில் ஒருவருக்கு கொடுக்க வேண்டிய கடனை நீங்கள் கொடுத்துவிட்டு வந்தால் வேகமாகவும், சீக்கிரமாகவும் கடன் தொகையை அடைத்து விடலாம்.
ஒவ்வொருவரும் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை கடனுக்கே வட்டி என கட்டிக் கொண்டிருந்தால் எப்படி உங்கள் கனவுகளை நிறைவேற்றுவீர்கள்? கடன் தொகையை முழுதாக பாடுபட்டு அடைத்துவிட்டால், அதன் பிறகு வரக்கூடிய பிரச்சனைகளை நீங்கள் எளிதாக சமாளிப்பீர்கள். கடன் அடைவதற்கு இதைவிட நல்ல நேரம் இருக்க முடியாது. இந்த ரகசியத்தை தெரிந்து கொண்டு கடைபிடித்து வாருங்கள் உங்கள் கடனும் விரைவில் அடையும்.
மேலும் முருகப்பெருமானை வழிபடுபவர்களுக்கு கடன் தொல்லையிலிருந்து விமோசனம் கிடைக்கும். முருகனுக்கு உகந்ததும் செவ்வாய்க்கிழமை தான். செவ்வாய்க்கிழமையில் முருகன் கோவிலுக்கு சென்று அவரை தரிசனம் செய்துவிட்டு ஒவ்வொரு வாரமும் ஆறு ரூபாயை கோவில் உண்டியலில் போட்டுவிட்டு வாருங்கள். ஆறுமுகனுக்கு ஆறு ரூபாய்களை போட்டு கடனடைய பிரார்த்தனை செய்தால், விரைவில் கடன் அடையும் என்பது நம்பிக்கை.
இதையும் படிக்கலாமே:
ஆறு பேருக்கு அன்றைய தினம் உணவு பொட்டலங்களை தானம் கொடுக்க வேண்டும். தயிர் சாதமோ, சாம்பார் சாதமோ ஏதோ ஒன்று உங்களால் முடிந்த அன்னதானத்தை செய்யும் பொழுது அதற்குரிய பலன்கள் ரொம்பவும் அதிகமாக அனுபவிக்க வாய்ப்புகள் கிடைக்கும். உணவு பொட்டலங்களுடன், ஒரு தண்ணீர் பாட்டிலை வாங்கி கொடுத்துவிட்டு வாருங்கள். தொடர்ந்து ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் இந்த நேரத்தில் இப்படி செய்தால் கடன் தொல்லை தீரும், முயற்சி செய்து பாருங்கள்.