- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபண வரவை அதிகரிக்கும் சூட்சும தீபம்

பண வரவை அதிகரிக்கும் சூட்சும தீபம்

- Advertisement -

ஒவ்வொரு மாதத்திலும் அமாவாசை பௌர்ணமி என்று இரண்டு திதிகள் வரும். இந்த திதிகளை நாம் முறையாக பயன்படுத்தி வழிபாடு செய்தோம் என்றால் நம் வாழ்வில் நிறைவான செல்வத்தை நம்மால் பெற முடியும். இந்த இரண்டு தினங்களிலும் கண்டிப்பான முறையில் நாம் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்ய வேண்டும். அப்படி செய்வதன் மூலம் நமக்கு பணவரவு உண்டாகும் என்பது உறுதி. அந்த வகையில் பங்குனி மாதத்தின் அமாவாசை என்பது வெள்ளிக்கிழமை இரவு 7:25 மணிக்கு தொடங்குகிறது. அதனால் இந்த ஒரு சூட்சுவமான தீபத்தை வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் ஏற்றுவதன் மூலம் மகாலட்சுமியின் பரிபூரண அருள் கிடைக்கும். அந்த தீபத்தை எப்படி ஏற்றுவது என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

பொதுவாக சந்திரனின் ஆதிக்கம் நிறைந்த நாட்களில் மகாலட்சுமி பூஜை செய்வது என்பது மிகவும் சிறப்பு. அதனால் தான் அமாவாசை தினத்தில் மகாலட்சுமி பூஜை செய்ய வேண்டும். இதைத்தான் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் பின்பற்றி செல்வவளத்துடன் வாழ்கிறார்கள். பொதுவாக நாம் ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை தினத்தில் தான் மகாலட்சுமி பூஜையை செய்வோம். ஆனால் ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய அமாவாசை திதி அன்று மகாலட்சுமி பூஜை செய்பவர்களுக்கு மகாலட்சுமி தாயாரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

- Advertisement -

பங்குனி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை என்பது ஒரு வெள்ளிக்கிழமையோடு வருவதால் கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக திகழ்கிறது. அதனால் வெள்ளிக்கிழமை அன்று இரவு வரக்கூடிய சுக்கிர ஹோரயான 8 மணியில் இருந்து 9 மணிக்குள் இந்த தீபத்தை வீட்டில் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை வீட்டு பூஜை அறையில் தான் ஏற்ற வேண்டும். அதிலும் குறிப்பாக பெண்கள் ஏற்றுவது மிகவும் சிறப்பு. அன்றைய தினம் முழுவதும் அசைவத்தை தவிர்ப்பது மிகவும் நல்லது. இரவு 8 மணியில் இருந்து 9 மணிக்குள் ஒரு சிறிய தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள்.

அதில் இரண்டு கைப்பிடி அளவு மகாலட்சுமிக்கு உகந்த மருதாணி இலையை பரப்பிக் கொள்ளுங்கள். இந்த மருதாணி இலைக்கு மேல் புதிதாக வாங்கிய இரண்டு அகல் விளக்குகளில் சந்தனம் குங்குமம் வைத்து வைக்க வேண்டும். பிறகு இதில் சுத்தமான பசு நெய்யை ஊற்றி பஞ்சு திரி போட்டு கிழக்கு பார்த்தவாறு தீபம் ஏற்ற வேண்டும். அன்றைய தினத்தில் பசும்பால், கற்கண்டு, கற்கண்டு பொங்கல் போன்ற ஏதாவது வெள்ளை நிறத்திலான பொருட்களை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். இவை எதுவுமே இல்லை என்னும் பட்சத்தில் சர்க்கரையை கூட நாம் நெய்வேத்தியமாக வைக்கலாம்.

- Advertisement -

தீபம் ஏற்றி வைத்த பிறகு உங்களுக்கு தெரிந்த மகாலட்சுமியின் போற்றிக்களையோ மந்திரத்தையோ கூறி மகாலட்சுமி தாயாரிடம் பணவரவு அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க வேண்டும். இந்த தீபம் குறைந்தது ஒரு மணி நேரம் எரிய வேண்டும். பிறகு இந்த தீபத்தை நாம் குளிர வைத்துவிடலாம். மறுநாள் காலையில் தீபம் ஏற்றும் பொழுது இந்த அகல் விளக்கிற்கு கீழே இருக்கக்கூடிய மருதாணி இலைகளை மஞ்சள், சிவப்பு அல்லது பச்சை நிற துணியில் வைத்து மூட்டையாக கட்டி நாம் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். இந்த மூட்டை 48 நாட்கள் அப்படியே இருக்கட்டும். 49 வது நாள் அதை எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே:சனிப்பெயர்ச்சி அன்று செய்ய வேண்டிய வழிபாடு

மகாலட்சுமி தாயாருக்கு உகந்த வெள்ளிக்கிழமை அன்று அமாவாசை திதியும் சேர்ந்து வருவதால் இந்த தீபத்தை முழுமனதோடு ஏற்றி மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்பவர்களுக்கு செல்வ செழிப்பு அதிகரிக்கும். பணவரவில் எந்த வித குறையும் இருக்காது என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்