- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஅமாவாசை அன்று செய்ய வேண்டிய வெண் பூசணி பரிகாரம்

அமாவாசை அன்று செய்ய வேண்டிய வெண் பூசணி பரிகாரம்

- Advertisement -

நாளைய தினம் 29-03-2025 அதிசக்தி வாய்ந்த அமாவாசை. சனிக்கிழமை அன்று இந்த அமாவாசை திதி வந்திருக்கிறது, அது மட்டுமல்ல இந்த நாளில் உத்திரட்டாதி நட்சத்திரமும் சேர்ந்து இருக்கிறது, சனிபகவானுடைய நட்சத்திரங்களில் இந்த உத்திரட்டாதி நட்சத்திரமும் ஒன்று. அது மட்டுமல்லாமல் இந்த அமாவாசை திதி அன்று, சூரிய கிரகணமும் நடைபெறவிருக்கிறது. சனிப்பெயர்ச்சியும் நடைபெறவிருக்கிறது. இந்த நாளில் நாம் செய்யக்கூடிய பரிகாரம் பல வருட பிரச்சனைக்கு தீர்வு கொடுக்கும்.

அமாவாசை பரிகாரம்

நாளை சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து குளிக்க வேண்டும். வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு கைப்பிடி கல்லுப்பு, ஒரு சிட்டிகை விபூதி போட்டு, குலதெய்வத்தின் பெயரைச் சொல்லி குளித்து விடுங்கள். உங்களுக்கு தாய் தந்தையர் இல்லை என்றால், திதி தர்ப்பணம் காரியங்களை எல்லாம் முறையாக செய்து விடுங்கள். அமாவாசை வழிபாட்டை தவறவிடாமல் செய்ய வேண்டும். இது முதல் விஷயம்.

- Advertisement -

அமாவாசை அன்று காலை எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, ஒரு பெரிய வெண்பூசணி ஒன்று வாங்கிக் கொள்ளுங்கள். பேரம் பேச வேண்டாம். பூசணிக்காய் தரமானதாக இருக்க வேண்டும். வாங்கி வந்த பூசணிக்காயை மஞ்சள் தண்ணீரில் கழுவி, இரண்டாக வெட்டி, ஒரு தாம்பூல தட்டிலோ அல்லது ஒரு வாழை இலையின் மீதோ வைத்து உங்கள் வீட்டில் ஈசானிய மூலையில் இந்த வெட்டிய பூசணிக்காயை வைக்க வேண்டும். அவ்வளவுதான் பரிகாரம்.

நாளை காலையில் எழுந்து குளித்துவிட்டு காலை 8 மணிக்கு முன்பாக இதை வாங்கி வந்து உங்கள் வீட்டு ஈசானிய மூலையில் வைக்க வேண்டும். (தாய் தந்தை உள்ளவர்கள் தாய் தந்தை இல்லாதவர்கள் யார் வேண்டுமானாலும் இந்த பரிகாரத்தை). ஈசானிய மூலையை சனி மூலை என்றும் சொல்லுவார்கள். வடக்கும் கிழக்கும் சந்திக்கும் இடம், வடக்கிழக்கு மூலை தான் ஈசானிய மூலை என்று சொல்லுவார்கள். தரைப்பகுதியில் தான் இந்த வெட்டிய பூசணிக்காய வைக்க வேண்டும். டேபிளின் மீதும் வைக்காதீங்க.

- Advertisement -

இந்த அமாவாசை தினம் முழுவதும் அந்த பூசணிக்காய் உங்களுடைய வீட்டிலேயே இருக்கட்டும். அமாவாசை இரவு 9 மணிக்கு மேல் அந்த வெட்டி வைத்த பூசணிக்காய் துண்டுகளை எடுத்து ஒரு கேரிபேகல் போட்டு கட்டி, வீட்டிற்கு ஒதுக்குப்புறமாக கொண்டு போய் போட்டு விட்டு வர வேண்டும். குப்பை தொட்டியில் தான் போட முடியும் என்றால், குப்பை தொட்டியில் பூசணிக்காயை போட்டு வீட்டிற்கு வெளியில் கொண்டு போய் வைத்து விடுங்கள். வீட்டிற்குள்ளேயே வைக்க வேண்டாம்.

இந்த அமாவாசை திதியில் வெட்டிய வெள்ளை நிற பூசணிக்காய் உங்கள் வீட்டில் இருந்தால், உங்கள் வீட்டில் இருக்கும் அத்தனை எதிர்மறை ஆற்றலையும் அது தன்னகத்தே ஈர்த்ததுக் கொள்ளும். உங்கள் வீட்டில் பிரச்சனைக்கு காரணமாக எந்த ஒரு விஷயம் இருக்கிறது. அந்த ஒரு விஷயத்தை சரி செய்ய இந்த பூசணிக்காய் பரிகாரம் உங்களுக்கு பயனுள்ளபடி அமையும்.

- Advertisement -

உதாரணத்திற்கு வீட்டில் கண் திருஷ்டி இருக்கும், எதிர்மறை ஆற்றல் இருக்கு, யாரோ ஒரு நபர் எங்களுடைய வீட்டுக்கு ஏவல் பில்லி சூனியம் வச்சிட்டாங்க, வீட்டில் இருப்பவர்களுக்குள் சண்டை சச்சரவு, மன நிம்மதி இல்லை, வீட்டில் சுபகாரியை தடை என்று பல வருடங்களாக உங்களைத் துருத்தி வரும் அந்த ஒரு பெரும் கஷ்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நாளை தினம் செய்யும் இந்த எளிய பரிகாரம், உங்களுக்கு நல்லதொரு வழியை காட்டும். இந்த பரிகாரத்திற்கான பலனை அடுத்த 15 நாட்களில் நீங்கள் உணருவீர்கள். நம்பிக்கை இருந்தால் இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.

இதையும் படிக்கலாமே: 29-03-2025 நாளை சூரிய கிரகண நேரத்தில் சொல்ல வேண்டிய மந்திரம்

அதிசக்தி வாய்ந்த நாளைய தினத்தை யாரும் தவற விடாதீர்கள் இந்த பரிகாரத்தை மற்ற அமாவாசை நாளில் செய்வதை காட்டிலும் நாளைய தினம் செய்வது மிக மிக சிறப்பு என்ற தகவலுடன் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்