- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவாழ்க்கையை மாற்றும் தீபம்

வாழ்க்கையை மாற்றும் தீபம்

- Advertisement -

ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய வாழ்க்கை என்பது சிறப்பாக அமைய வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். ஆனால் ஏதோ ஒரு சூழ்நிலையில் அவர்களுடைய வாழ்க்கை கஷ்டமான ஒன்றாக இருக்க நேரிடும். அப்படி அவர்கள் கஷ்டத்தை மட்டுமே சந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்றாலும், எந்த முயற்சிகளும் வெற்றியடையவில்லை என்றாலும் அவர்கள் அமாவாசை தினத்தன்று அம்மனை நினைத்து இந்த ஒரு தீபத்தை ஏற்றினால் போதும். அவர்கள் வாழ்க்கையே தலைகீழாக மாறும். அந்த தீபத்தை எப்படி ஏற்றுவது என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

வாழ்க்கையை மாற்றும் தீபம்

சந்திரனின் ஆதிக்கம் நிறைந்த நாளாக திகழ்வதுதான் அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்கள். இந்த தினங்களில் பெண் தெய்வ வழிபாடு அதிலும் குறிப்பாக அம்மன் மற்றும் மகாலட்சுமியின் வழிபாட்டை செய்பவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றம் உண்டாகும் என்றே கூற வேண்டும். அப்படிப்பட்ட அமாவாசை என்பது சனிக்கிழமையில் வருவதால் அன்றைய தினத்தில் நாம் இந்த ஒரு தீபத்தை ஏற்ற நம் வாழ்க்கையில் இருக்க கூடிய கஷ்டங்கள் அனைத்தும் காணாமல் போகும்.

- Advertisement -

இந்த தீப வழிபாட்டை மதியம் இரண்டு மணிக்கு முன்பாகவே செய்து விட வேண்டும். ஏனென்றால் அமாவாசை திதி என்பது மாலை 5 12 மணி வரை இருக்கிறது ஆனால் சூரிய கிரகணம் மதியம் 2:20 மணிக்கு ஆரம்பம் ஆகிறது என்பதாலும் சூரிய கிரகண சமயத்தில் எந்தவித தெய்வ வழிபாட்டையும் மேற்கொள்ளக்கூடாது என்பதாலும் நாம் அதற்கு முன்பாகவே இந்த தீப வழிபாட்டை செய்து விட வேண்டும். ராகு காலம் எமகண்ட நேரத்தை தவிர்த்து மீதம் இருக்கக்கூடிய நேரத்தில் இந்த தீப வழிபாட்டை செய்யலாம்.

இதற்கு ஒரு தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு மேல் அம்மனுக்கு உகந்த வேப்ப இலை மற்றும் வேப்பம் பூவை போட்டு பரப்பிக் கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக மலைவேம்பு கிடைத்தால் அது கூடுதல் சிறப்பை தரும் என்று கூறப்படுகிறது. இந்த இலை மற்றும் பூவிற்கு மேலாக ஒரு அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபமேற்றி நம்முடைய குலதெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் வழிபாடு செய்வதோடு மாரியம்மன், துர்க்கை அம்மன் போன்ற அம்மனையும் வழிபாடு செய்தோம் என்றால் அவர்கள் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கசப்புகள் அனைத்தையும் நீக்கி இனிமையான வாழ்க்கையை அமைத்து தருவார்கள். இந்த தீபம் குறைந்தது ஒரு மணி நேரமாவது எரிய வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து தீபத்தை குளிர வைத்து விடு வேண்டும். மறுநாள் காலையில் இந்த இலை மற்றும் பூவே கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:அமாவாசை அன்று செய்ய வேண்டிய வெண் பூசணி பரிகாரம்

அமாவாசை திதி அன்று இந்த முறையில் அம்மனை நினைத்து தீபமேற்றி வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி நல்ல வாழ்க்கை அமையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்