- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசனிப்பெயர்ச்சி அன்று செய்யக்கூடாதவை

சனிப்பெயர்ச்சி அன்று செய்யக்கூடாதவை

- Advertisement -

ஒரு வாரத்தில் ஏழு நாட்கள் இருக்கின்றன. ஒவ்வொரு நாட்களுக்கும் ஒவ்வொரு விதமான கிரகம் உகந்ததாக திகழும். அப்படிப்பட்ட நாட்களில் அந்த கிரகத்திற்கு உகந்த செயல்களை மட்டும் தான் செய்ய வேண்டும் என்றும் அதற்கு எதிர்மறையாக இருக்கக்கூடிய செயல்களை செய்யக்கூடாது என்றும் ஜோதிட ரீதியாக பலவிதமான கருத்துக்கள் இருக்கின்றன. அவற்றை பின்பற்றுவதன் மூலம் நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும், படிப்படியான முன்னேற்றமும் உண்டாகும். அந்த வகையில் சனிப்பெயர்ச்சி நாளன்று செய்யக்கூடாத செயல்களை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

சனிப்பெயர்ச்சி அன்று செய்யக்கூடாதவை

சனீஸ்வர பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்வதை தான் சனிப்பெயர்ச்சி என்று கூறுகிறோம். இரண்டரை வருடத்திற்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு அவர் மாறுவார் என்பதும் பலரும் அறிந்ததே. அப்படிப்பட்ட சனிப்பெயர்ச்சி என்பது சனீஸ்வர பகவானுக்குரிய சனிக்கிழமை அன்றே வருவது கூடுதல் சிறப்பு வாய்ந்ததாக திகழ்கிறது. அதனால் அன்றைய நாளில் நாம் சில விஷயங்களை செய்யாமல் தவித்தோம் என்றால் சனீஸ்வர பகவானின் தாக்கம் குறையும்.

- Advertisement -

அந்த வகையில் சனிக்கிழமையோடு சேர்ந்து வரும் சனிப்பெயர்ச்சி நாளன்று நாம் கண்டிப்பான முறையில் கருப்பு மற்றும் கரு நீல ஆடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக மஞ்சள் பச்சை நிறத்திலான ஆடைகளை அணிந்து கொள்ளலாம். அதேபோல் அன்றைய தினத்தில் பகல் நேரத்தில் தூங்கக்கூடாது. மேலும் பிரம்ம முகூர்த்த நேரத்திலும் மாலை நேரத்திலும் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். வழிபாடு செய்கிறோமோ இல்லையோ தீபம் கண்டிப்பான முறையில் ஏற்ற வேண்டும்.

அன்றைய நாளில் அசைவத்தை தவிர்ப்பது மிகவும் நல்லது. அதே போல் பிறரிடம் இருந்து கடன் வாங்குவது, நகையை அடமானத்தில் வைப்பது போன்ற செயல்களை செய்யக்கூடாது மீறி செய்தால் அந்த கடனை அடைக்க முடியாத சூழ்நிலை உண்டாகும், அடமானத்தில் இருக்கக்கூடிய நகைகளையும் திருப்ப முடியாமல் போய்விடும். யாரிடமும் எந்த வித வாக்குவாதத்திலும் ஈடுபடக் கூடாது. எதிர்மறையான வார்த்தைகளை உபயோகப்படுத்தக் கூடாது. முடிந்த அளவிற்கு நேர்மறையாகவும் நல்ல விதமாகவுமே பிறரிடம் பேச வேண்டும்.

- Advertisement -

அன்றைய தினம் சனிக்கிழமை என்பதாலும் சனிப்பெயர்ச்சி என்பதாலும் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை புதிதாக வாங்கவும் கூடாது, வீட்டில் இருக்கக் கூடிய இரும்பு சம்பந்தமான பொருட்களை பிறரிடம் தரவும் கூடாது. பலரும் சனிப்பெயர்ச்சி நாளன்று அருகில் இருக்கக்கூடிய நவகிரக ஆலயத்திற்கு சென்று சனீஸ்வர பகவானுக்கு தங்களின் பெயர்களை கூறி அர்ச்சனை செய்வார்கள். அவ்வாறு அர்ச்சனை செய்யும் பொழுது அர்ச்சனை செய்வதற்காக கொடுக்கக்கூடிய தேங்காய் வெற்றிலை பாக்கு வாழைப்பழம் இவை எதையும் திருப்பி வீட்டிற்கு எடுத்து வரக்கூடாது. முடிந்தவரை அன்றைய தினம் அன்னதானம் செய்வது நல்ல பலனை தரும்.

இதையும் படிக்கலாமே:வாழ்க்கையை மாற்றும் தீபம்

இந்த விஷயங்களை சனிப்பெயர்ச்சி நாளன்று கடைபிடிப்பவர்களுக்கு சனிபகவானால் ஏற்படக்கூடிய தாக்கம் குறையும் மேலும் சனீஸ்வர பகவானின் அருளையும் பெற முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்