பணம் எல்லோரிடமும் இருந்தாலும், அது தேவையான அளவிற்கு எல்லோரிடமும் இருப்பதில்லை! மகாலட்சுமியின் அருள் பெற்றவர்கள் மட்டுமே அதை தேவைக்கு அதிகமாக வைத்திருப்பார்கள். இந்த பணம் உங்களிடம் சேராமல் போவதற்கு பணத்துடன் இந்த சில பொருட்களை வைத்துள்ளீர்களா? என்று பரிசோதித்து பாருங்கள். பர்ஸில் பணத்துடன் வைக்க வேண்டிய சில பொருட்கள், வைக்கவே கூடாத சில பொருட்கள் பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலை தொடர்ந்து அறிவோம் வாருங்கள்.
பணத்தை எப்பொழுதும் ஒரு மணி பர்ஸ் அல்லது துணி பையில் போட்டு கையோடு வைத்திருக்க வேண்டும். இப்படி பணம் வைத்திருக்கும் பையில் மங்கிப் போன காகிதங்கள் இருக்கக் கூடாது. பழைய காகிதங்கள் மங்கி போய் அப்படியே வைத்திருந்தால் அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும், இதனால் பணம் சேராமல் போகும்.
நமக்குப் பிடித்தவர்கள் நமக்காக எழுதிய ஏதாவது ஒரு பழைய கடிதங்கள், ரசீதுகள், மருந்து சீட்டுகள் இது போல ஏதோ ஒன்று மங்கிப்போன காகிதம், பணத்துடன் சேர்ந்து இருந்தால், அது பணத்தடையை உண்டாக்கும். சனிபகவான் இரும்புக்கு சொந்தக்காரர். இரும்பு சார்ந்த பொருட்களும் பணத்துடன் இருக்கக் கூடாது. ஸ்லைட் பின், ஊக்கு, கீ செயின், சாவி போன்ற இரும்பு சார்ந்த பொருட்களை பர்சில் வைக்காதீர்கள். கிழிந்து போன பர்சுகளை பயன்படுத்தக் கூடாது. பர்ஸ் துர்நாற்றம் வீசும் படியாக வைத்திருக்கக் கூடாது.
எப்போதும் சுத்தமுடன் விபூதி மணம் கமலும் படியாக உங்களுடைய பர்ஸை வைத்துக் கொள்ளுங்கள். கோவிலில் கொடுக்கப்படும் குங்குமம், விபூதி அல்லது எலுமிச்சை, வேப்பிலை, துளசி, வில்வம் போன்ற தெய்வ சக்தி உள்ள பொருட்களை எப்போதும் பணத்துடன் வைத்திருக்க, பணம் இரட்டிப்பாக பெருகும். இவை காய்ந்து போனாலும் அவற்றுக்கு தனி மதிப்பு உண்டு.
சுகபோக வாழ்க்கையை கொடுக்கக் கூடியவர் சுக்கிரன். எப்பொழுதும் வெள்ளி நாணயம் அல்லது வெள்ளியால் ஆன ஏதாவது ஒரு பொருட்கள், கீ செயின், டாலர், ரிங் போன்ற ஏதோ ஒன்றை பணத்துடன் சேர்த்து பர்சில் வைத்துக் கொள்ளுங்கள். சந்தனம் மற்றும் செந்தூரம் தைரியத்தை கொடுக்கக் கூடியது. மனதை சாந்தப்படுத்தக் கூடியது. இவற்றை எப்பொழுதும் பர்சில் வைத்திருந்தால் பணம் பெருகும். பர்சில் மட்டும் அல்லாமல் பணம் வைத்திருக்கக்கூடிய எந்த இடத்திலும், பணத்துடன் சேர்த்து மேற்கூறிய பொருட்களை வைக்கக்கூடாது. இது பணத்தை சேரவிடாமல் தடையை ஏற்படுத்தும் பொருட்கள் ஆகும்.
உடைந்த கண்ணாடி துண்டுகள் அல்லது வேறு ஏதேனும் உடைந்த பொருட்களையும் பணத்துடன் சேர்த்து வைக்காதீர்கள். உடைந்தவை எப்பொழுதும் எதிர்மறை அதிர்வலைகளை உண்டு பண்ணும். பணம் வைக்கும் பெட்டியை பூட்டுவதற்கு சாவி வைத்திருந்தால், அதை வெள்ளிக்கொத்தில் கோர்த்து வையுங்கள். வெள்ளி, சுக்கிர அம்சம் என்பதால் உங்களுக்கு மென்மேலும் பணத்தை சேர வைத்து, சுகபோக வாழ்க்கையை கொடுக்கும். பணத்தை கண்ணாடி பெட்டியில் கண்டிப்பாக வைக்கக் கூடாது. கண்ணாடி பெட்டி விரிசல் விழுந்திருந்தால், பணம் சேராது. கைக்கு கைமாறும் இந்த பணத்தை, ரூபாய் நோட்டுகளை பூஜை அறையில் வைக்காதீர்கள்.
இதையும் படிக்கலாமே:
வருமான தடையை சரி செய்யும் அருகம்புல் பரிகாரம்
பணத்துடன் மஞ்சள் கிழங்கு ஒன்றை வையுங்கள். மஞ்சள் கிழங்கு பணத்தை ஈர்க்கும், தெய்வீக சக்தி வாய்ந்த மூலிகை. பணத்துடன் கிராம்பு, ஏலக்காய், பச்சை கற்பூரம் எப்போதும் மணக்க மணக்க போட்டு வையுங்கள், நிச்சயம் பணம் சேர்ந்து கொண்டே போகும், வீண்விரயம் ஆகாது தடுக்கும். கடைசியாக நீங்கள் உங்கள் பர்சிலிருந்து ஒரு ரூபாயாவது தினமும் மற்றவர்களுக்கு ஏதாவது செலவு செய்தது உண்டா என்று யோசியுங்கள்? அப்படி இதுவரை செய்யவில்லை என்றால், இனி செய்து பாருங்கள். சின்ன சின்ன விஷயங்களில் கூட பணம் நம்மை தேடி வரும். அதில் மிக முக்கியமானது தானம்! கஷ்டப்படும் குழந்தைகளுக்கு ஒரு பிஸ்கட் பாக்கெட் வாங்கி கொடுத்தால் கூட, அதுவும் தானம் தான். தெருவில் திரியும் நாய்களுக்கு பொரையோ, பிஸ்கட்டோ வாங்கி போட்டாலும் தானத்தின் புண்ணியம் உங்களிடம் பணத்தை சேர்க்க வைக்கும் எனவே பர்ஸில் இருக்கும் பணத்தை உங்களுக்காக மட்டும் சுயநலமாக செலவு செய்யாதீர்கள்.