வளர்பிறை அஷ்டமி நாளில் கால பைரவரை வழிபாடு செய்பவர்களுக்கு அஷ்ட லட்சுமிகளின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்று ஆன்மீக ரீதியாக கூறப்படுகிறது. அப்படி நாம் பைரவரை வழிபாடு செய்வதோடு வீட்டில் செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரம் நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய தரித்திரத்தை நீக்கி லட்சுமி கடாட்சத்தை நிரந்தரமாக தக்க வைத்துக்கொள்ள உதவும். அப்படிப்பட்ட ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
லட்சுமி கடாட்சம் பெற பரிகாரம்
அஷ்டலட்சுமிகளுக்கு செல்வத்தை வாரி வழங்கக்கூடிய தெய்வமாக தான் ஸ்வர்ண ஆகர்ஷன பைரவர் திகழ்கிறார். மேலும் நம்முடைய கஷ்டங்களை தீர்த்து, கடன் பிரச்சினையை தீர்த்து, செல்வ வளத்தை வாரி வழங்கக் கூடிய தெய்வமாகவும் பைரவர் திகழ்கிறார். அப்படிப்பட்ட பைரவருக்கு உகந்த திதியான வளர்பிறை அஷ்டமி திதி அன்று வீட்டில் சில பொருட்களை எரிப்பதன் மூலம் பைரவரின் அருளால் வீட்டில் இருக்கக்கூடிய தரித்திரம் முற்றிலும் நீங்கும் என்று கூறப்படுகிறது.
தரித்திரத்தை நீக்கி செல்வ வளத்தை அதிகரிக்க கூடிய இந்த பரிகாரத்தை இன்று இரவு ஒரு மணிக்குள் செய்ய வேண்டும். காலபைரவர் என்பவர் உக்கிரமான தெய்வமாக திகழ்கிறார். அவரை எந்த அளவிற்கு இரவு நேரத்தில் வணங்குகிறோமோ அந்த அளவிற்கு பலன் நமக்கு அதிகமாக கிடைக்கும். அதனால் இன்று இரவு ஒரு மணிக்குள் இந்த பரிகாரத்தை நாம் செய்ய வேண்டும். இதற்கு நமக்கு எட்டு மிளகு, எட்டு முனை உடையாத கிராம்பு, ஒரு சிறிய துண்டு பட்டை, சுத்தமான பசுமை மற்றும் கற்பூரம் இவை அனைத்தும் வேண்டும்.
ஒரு அகல் விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள். முதலில் பட்டையில் ஏதாவது ஒரு ஸ்கெட்ச் பயன்படுத்தி “ஸ்ரீம் பைரவா” என்னும் பைரவரின் மந்திரத்தை எழுத வேண்டும். எழுதிய இந்த பட்டையை அகல் விளக்கில் வைத்து விடுங்கள். அதன் மேல் சிறிதளவு நெய்யை ஊற்றிக் கொள்ளுங்கள். அந்த பட்டைக்கு மேல் எட்டு மிளகு, எட்டு கிராம்பை வைத்து அதன் மேல் மறுபடியும் சிறிதளவு மட்டும் நெய்யை ஊற்றி அதற்கு மேல் கற்பூரத்தை வைத்து ஏற்றி விட வேண்டும். இந்த பட்டை, கிராம்பு, மிளகு மூன்றும் கற்பூரம் மற்றும் நெய்யின் உதவியுடன் எரியும்.
இப்படி எரியும் பொழுது இந்த புகையானது வீடு முழுவதும் பரவும். இந்த புகை வீடு முழுவதும் பரவுவதால் வீட்டில் இருக்கக்கூடிய தரித்திரம் முற்றிலும் நீங்கி லட்சுமி கடாட்சத்தை ஏற்படுத்தும். இதனால் நமக்கு பணவரவில் இருக்கக்கூடிய தடைகள் முற்றிலும் நீங்கும் என்று கூறப்படுகிறது. இவை முற்றிலும் எரிந்து முடித்த பிறகு அந்த அகல் விளக்கை ஓரமாக வைத்து விடுங்கள். மறுநாள் காலையில் இதில் இருக்கக்கூடிய சாம்பலை கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். இதை நாம் நம்முடைய வீட்டில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் வைத்து எரிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே:பணவரவு உண்டாக ஏற்ற வேண்டிய தீபம்
பைரவரை முழுமனதோடு நினைத்து இந்த முறையில் பரிகாரம் செய்பவர்களுக்கு அவர்கள் வீட்டில் இருக்கக்கூடிய தரித்திர நிலை முற்றிலும் நீங்குவதோடு செல்வ வளத்துடன் வாழ முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.