- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகஷ்டம் தீர்க்கும் முருகன் வழிபாடு

கஷ்டம் தீர்க்கும் முருகன் வழிபாடு

- Advertisement -

இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் ஏதாவது ரூபத்தில் கஷ்டம் என்பது இருக்கத்தான் செய்யும். நம்மால் இயன்ற முயற்சிகளை செய்தும் அந்த கஷ்டத்தில் இருந்து வெளியில் வர முடியவில்லை என்னும் பட்சத்தில் நாம் இறைவனை சரணாகதி அடைவோம். அப்படி சரணாகதி அடைந்து நம்முடைய கஷ்டங்கள் தீரவில்லை என்று நினைப்பவர்களும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்து வெளியே வரவேண்டும் என்று நினைப்பவர்களும் சரி முருகப்பெருமானை இந்த முறையில் வழிபாடு செய்தால் போதும். முருகனின் அருளால் கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும். அந்த முருகனின் வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கஷ்டம் தீர்க்கும் வழிபாடு

நம்மை அறியாமலேயே நம்முடைய கஷ்ட காலத்தில் நம்முடைய ஆழ் மனதில் இருந்து வெளிப்படக்கூடிய வார்த்தையாகத்தான் முருகா என்ற வார்த்தை திகழ்கிறது. பலரும் தங்களுக்கு வலிக்கும் பொழுது அம்மா என்று அழைப்பார்கள் அல்லவா? அதே போல் தான் நமக்கு கஷ்டங்கள் ஏற்படும் பொழுது முருகா என்று கூப்பிட்டோம் என்றால் நாம் கூப்பிட்டதற்கு குரல் கொடுக்கும் வகையில் முருகன் ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து நம்முடைய கஷ்டத்தை தீர்த்து வைப்பார் என்று பலரும் அனுபவபூர்வமாக கூறுவார்கள். அப்படிப்பட்ட முருகப்பெருமானை கஷ்டம் தீருவதற்கு வழிப்பட வேண்டிய ஒரு முறையை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை இந்த நாளில் தான் செய்ய வேண்டும், இந்த நேரத்தில் தான் செய்ய வேண்டும் என்று எந்தவித நிபந்தனையும் கிடையாது. நமக்கு எப்பொழுது கஷ்டம் ஏற்படுகிறதோ அப்பொழுது அமைதியாக முருகப்பெருமானை நினைத்து இந்த ஒரு வழிபாட்டை செய்தால் போதும். விரைவிலேயே நம்முடைய கஷ்டம் காணாமல் போய்விடும். இந்த வழிப்பாட்டிற்கு என்று நமக்கு பெரியதாக எதுவும் தேவைப்படாது.

ஒரு வெள்ளை நிற பேப்பரை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த பேப்பரின் நான்கு மூலைகளிலும் மஞ்சளை தடவி கொள்ளுங்கள். பேப்பரின் மேலே சரவணபவ என்று எழுதிக் கொள்ளுங்கள். பிறகு அந்த பேப்பருக்கு நடுவில் நட்சத்திர கோலத்தை வரைய வேண்டும். அந்த நட்சத்திர கோலத்தில் ஆறு முக்கோணங்கள் இருக்கும் அல்லவா? அந்த ஆறு முக்கோணங்களிலும் உங்களுடைய கஷ்டம் தீர்வதற்கு என்ன வேண்டுமோ அதை எழுத வேண்டும். நேர்மறை வார்த்தைகளை மட்டும் தான் எழுத வேண்டும். எதிர்மறை வார்த்தைகளை எழுதக்கூடாது.

- Advertisement -

உதாரணமாக கடன் தீர வேண்டும் என்று எழுதுவதற்கு பதிலாக பணவரவு அதிகரிக்க வேண்டும் என்று எழுத வேண்டும். நோய் தீர வேண்டும் என்பதற்கு பதிலாக ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று எழுத வேண்டும். இப்படி நேர்மறையான வார்த்தைகளை பயன்படுத்தி அந்த ஆறு முக்கோணங்களிலும் உங்களுடைய கஷ்டம் தீர்வதற்குரிய வேண்டுதலை எழுதுங்கள். பிறகு அந்த நட்சத்திர கோலத்திற்கு நடுவே ஓம் என்று எழுதிக் கொள்ளுங்கள். இவை அனைத்தையும் எழுதி முடித்த பிறகு அதை நன்றாக சுருட்டி ஒரு மஞ்சள் நிற நூலில் கட்ட வேண்டும். கட்டிய இந்த பேப்பரை நம்முடைய வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய முருகப்பெருமானின் படத்திற்கு போட வேண்டும்.

இந்த பேப்பர் முருகப் பெருமானின் பாதத்தில் இருப்பது போல் நூலை நன்றாக விட்டு மாலை போல் கட்டி விடுங்கள். முருகனின் பாதத்தில் தான் இந்த பேப்பர் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்த வேண்டுதல் விரைவில் நிறைவேறும். பேப்பரை மாலையாக கட்டிய பிறகு செவ்வரளி மலர்களை முருகப்பெருமானுக்கு சூட்டில் திரும்பவும் உங்களுடைய வேண்டுதலை கூறி முழு மனதோடு முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். உங்களுடைய வேண்டுதல் எப்பொழுது நிறைவேறுகிறதோஅப்போது இந்த பேப்பரை அந்த மஞ்சள் நிற நூலோடு எடுத்துக்கொண்டு அருகில் இருக்கக்கூடிய முருகன் ஆலயத்திற்கு சென்று அங்கு இருக்கக்கூடிய மரத்தில் கட்டி விட வேண்டும். அந்த சமயம் உங்களுடைய பெயரில் முருகப் பெருமானுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே:பாவங்களை நீக்கும் இராம நவமி வழிபாடு

எப்பேர்ப்பட்ட கஷ்டமான சூழ்நிலையில் இருக்கக்கூடியவர்கள் கூட இந்த ஒரு எளிமையான முருக வழிபாட்டை முழுமனதோடு செய்யும் பட்சத்தில் அந்த கஷ்டங்கள் அனைத்தையும் தீர்ப்பதற்குரிய நல்ல வழியை முருகப்பெருமான் அருள்வார் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்