நாளைய தினம் ஏப்ரல் 14ஆம் தேதி, விசுவாவசு வருடம், தமிழ் புத்தாண்டு பிறக்கவிருக்கிறது. இந்த தமிழ் புத்தாண்டு அனைவருக்கும் நன்மை தரக்கூடிய வகையில் அமையும். அவரவருக்கு இருக்கக்கூடிய தீராத துன்பங்கள் எல்லாம் விலகி செல்லும். பணக்கஷ்டம் தீரும். கடன் சுமை குறையும். இந்த தமிழ் புத்தாண்டில் இருந்து உங்களுடைய குடும்பம் சந்தோஷமாக இருக்க அந்த இறைவனை பிரார்த்தனை செய்து, இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவிற்குள் பயணம் செய்வோம்.
இன்றைய சூழ்நிலையில் அனைவருக்கும் இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனை பண பிரச்சனை. இந்த கலியுகத்தில் பணம் என்னும் மாயையில் அனைவரும் சிக்கித் தவிக்கின்றோம். பணத்தை சம்பாதிப்பது பெரும் பாடாக இருக்கிறது. இந்த பணத்தை நாம் வசியம் செய்ய வேண்டும். நிறைய பணத்தை சம்பாதிக்க வேண்டும்.
பணம் சேமிக்க வேண்டும் என்றால் பணத்தை எப்படி கையாளுவது. ஒரு சூட்சம முறையைத்தான் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த தமிழ் புது வருட பிறப்பிலிருந்து இந்த முறையை நீங்களும் பின்பற்றி பாருங்கள். உங்களுக்கு விரயங்கள் எவ்வளவு குறைகிறது, லாபங்கள் எவ்வளவு உயர்கிறது என்பதை நீங்களே உணரலாம்.
பொதுவாகவே வலது கை சேமிப்பு என்று சொல்லுவார்கள். இடது கை விரயம் என்று சொல்லுவார்கள். அடுத்தவர்களுக்கு நீங்கள் பணத்தை கொடுக்கும் போது எப்போதுமே பணத்தை உங்கள் கையால் கொடுப்பதை தவிர்த்து விடுவது நல்லது. பணத்தை ஒரு டேபிளின் மீதோ, அல்லது நாற்காலியின் மீது வைக்கலாம். ஒரு மளிகை கடைக்கு போறீங்க அல்லது வேறு ஏதாவது பொருட்கள் வாங்க போறீங்கன்னா, அங்க ஒரு மேடை போல அமைத்திருப்பார்கள்.
அந்த மேடையின் மீது பணத்தை வைத்தால் கடைக்காரர்கள் எடுத்துக் கொள்வார்கள். பணத்தை அடுத்தவர்களுக்கு கொடுக்கும்போது, இதுபோல பணத்தை கீழே வைப்பது சிறப்பான பலனை தரும். அப்படி பணத்தை கீழே வைக்கும் போது இடது கையால் வைக்கலாம் தவறு ஒன்றும் கிடையாது. எதிரில் இருப்பவர்கள், பார்ப்பவர்கள் என்ன நினைத்துக் கொள்வார்களோ என்று கவலைப்படாதீங்க.
அடுத்தவர்கள் உங்களிடம் பணத்தை கொடுக்கும் போதும், நீங்கள் கையில வாங்க வேண்டாம். அங்க வச்சிடுங்க நான் எடுத்துக்கொள்கிறேன். அப்படி என்றும் சொல்லலாம். தவறு கிடையாது. பணத்தை எடுக்கும் போது வலது கையில் எடுக்க வேண்டும். பணத்தை அடுத்தவர்களுக்கும் கொடுக்கும் போது இடது கையில் கொடுக்க வேண்டும். பிரபல ஜோதிடரால் சொல்லப்பட்ட ஒரு டிப்ஸ் தான் இது. உங்களுக்கும் தேவைப்பட்டால் பின்பற்றி பாருங்கள். வருமானம் அதிகரித்தால் இதையே பின்பற்றிக் கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே: கஷ்டம் தீர்க்கும் முருகன் வழிபாடு
அதன் பிறகு நீங்கள் நாளை முதல் பணத்திற்கு நன்றி சொல்லத் துவங்குங்கள். உங்களுக்கு ஒவ்வொரு ரூபாய் வருமானமாக சேமிப்பு வந்தாலும் சரி, அந்த பணத்தை பார்த்து நன்றி நன்றி என்று சொல்லிக் கொண்டே இருங்கள். பணம் பல மடங்கு பெருகும். இதையும் ட்ரை பண்ணி பாருங்க. இந்த தமிழ் புத்தாண்டு அனைவருக்கும் செல்வ செழிப்பு வாய்ந்த புத்தாண்டாக அமைய வேண்டும் என்று இறைவனை பிரார்த்தனை செய்து இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.