- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடன் பிரச்சினையை தீர்க்கும் வழிபாடு

கடன் பிரச்சினையை தீர்க்கும் வழிபாடு

- Advertisement -

பொதுவாகவே செவ்வாய்க்கிழமை என்பது முருகப் பெருமானுக்குரிய கிழமையாக கருதப்படுகிறது. அன்றைய நாளில் நாம் முருகப்பெருமானை வழிபாடு செய்யும்பொழுது செவ்வாய் பகவானால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக செவ்வாய் பகவானால் ஏற்படக்கூடிய கடன் தொடர்பான பிரச்சனைகள் தீர்வதற்கும், சொந்தமாக வீடு கட்டுவது, இடம் வாங்குவது போன்ற பிரச்சனைக்கும் ஒரு தீர்வு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த முறை சித்திரை மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமை விசாக நட்சத்திரத்துடன் வருகிறது. அன்றைய நாளில் முருகப்பெருமானை கடன் பிரச்சினை தீர்வதற்கு வழிபாடு செய்யும் முறையைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

கடன் பிரச்சினை தீர வழிபாடு

முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரங்களில் மிகவும் குறிப்பிடத்தக்க நட்சத்திரமாக திகழ்வதுதான் விசாக நட்சத்திரம். பொதுவாகவே விசாக நட்சத்திரம், கிருத்திகை நட்சத்திரம் போன்ற நாட்களில் முருகப்பெருமானை நாம் வழிபாடு செய்யும் பொழுது முருகப்பெருமானின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. சூரிய உதயம் ஆகும்பொழுது இருக்கக்கூடிய நட்சத்திரம் அன்றைய நாள் முழுவதும் இருந்தால் அந்த நட்சத்திரத்திற்குரிய பலன் என்பது மிகவும் அதிகமாக இருக்கும் என்று ஜோதிடரீதியாக கூறுவார்கள். அந்த வகையில் விசாக நட்சத்திரம் ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி முழுவதுமே இருக்கிறது. அன்றைய தினம் செவ்வாய்க்கிழமை என்பதால் முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளாக திகழ்கிறது.

- Advertisement -

இந்த நாளில் அருகில் இருக்கக்கூடிய முருகன் ஆலயத்திற்கு சென்று முருகப்பெருமானுக்கு தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு. ஒரு வேளை ஆலயத்திற்கு செல்ல இயலவில்லை என்பவர்கள் வீட்டிலேயே முருகப்பெருமானை நினைத்து வழிபாடு செய்யலாம். முருகப்பெருமானுக்குரிய பாடல்களை பாடுவது போன்ற விஷயங்களை மேற்கொள்ளலாம். இதோடு சேர்த்து நம்முடைய கடன் பிரச்சினை தீருவதற்காக ஒரு மந்திரத்தை நாம் கூற வேண்டும்.

இந்த மந்திரத்தை செவ்வாய்க்கிழமை அன்று ராகு காலம், எமகண்ட நேரத்தை தவிர்த்து மீதம் இருக்கக்கூடிய எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கூறலாம். வீட்டு பூஜை அறையில் முருகப்பெருமானுக்கு முன்பாக ஒரு அகல் விளக்கில் நெய் ஊற்றி சிவப்பு நிற திரி போட்டு தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள். இந்த தீபம் கிழக்கு அல்லது வடக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும். முருகப்பெருமானுக்கு செவ்வரளி மலர்களால் மாலை கட்டி போட்டுக் கொள்ளுங்கள். பிறகு முருகப்பெருமானுக்கு கற்கண்டு, பேரிச்சம்பழம், தேன் போன்ற ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைத்துவிட்டு வடக்கு திசை பார்த்து தரையில் ஒரு விரிப்பை விரித்து அமர்ந்து கொள்ள வேண்டும். பிறகு முருகப்பெருமானின் இந்த ஒரு மந்திரத்தை 111 முறை கூறி முருகப்பெருமானிடம் கடன் பிரச்சினை தீர வேண்டும் என்ற வேண்டுதலை முன்வைக்க வேண்டும்.

- Advertisement -

மந்திரம்

“ஓம் விசாகா போற்றி ஓம்”

இதையும் படிக்கலாமே: விசுவாவசு வருடம் சிறப்பாக அமைய

விசாக நட்சத்திரமும் செவ்வாய்க்கிழமையும் ஒன்று சேர்ந்து வரக்கூடிய இந்த அற்புதமான நாளை தவறவிடாமல் முழுமையாக முருகப்பெருமானை நினைத்து வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் வாழ்வில் இருக்கக் கூடிய கடன் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்