விசுவாவசு வருடம் பிறந்த பிறகு, வந்திருக்கும் முதல் செவ்வாய்க்கிழமை இன்று. இந்த நாளில் முருகனை வழிபாடு செய்யாமல் இருந்தால் அது நல்லதா. இந்த வருடம் முழுவதும் வெற்றி மேல் வெற்றி குவிய, வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகள் விலக, இன்றைய தினம் செய்ய வேண்டிய ஒரு எளிமையான வழிபாடு.
இப்போது பரிகாரத்தைச் சொல்லி, இன்றைய தினம் பரிகாரத்தை நிறைவேற்றுவது சாத்தியமா? நிச்சயம் சாத்தியம்தான். நீங்கள் பேருந்தில் பயணம் செய்தாலும் சரி அல்லது வேறு ஏதாவது அலுவலகத்தில் இருந்தாலும் சரி, இருந்த இடத்திலிருந்து ஒரு பேப்பர் பேனாவை எடுத்து கடகடன்னு இந்த பெயரை மட்டும் எழுதி விடுங்கள்.
அந்த வேலவன் நீங்கள் செய்யக்கூடிய வேலையில் உங்களுக்கு வெற்றி மேல் வெற்றிகளை வாரி வாரி வழங்குவான். இன்றைக்கான வேலையில் மட்டுமல்ல, இந்த வருடம் முழுவதும் நீங்கள் துவங்கக்கூடிய முயற்சிகளில் உங்களுக்கு வெற்றி கிடைக்க, தவறாமல் இன்றைய தினம் செய்ய வேண்டிய பரிகாரம் இது.
வெற்றி தரும் முருகர் நாமம்
நீங்கள் இன்று வீட்டில் தான் இருக்கிறீர்கள் என்றால், இன்று செவ்வாய்க்கிழமை இரவு 8 டு 9, செவ்வாய் ஹோரை வருகிறது. இந்த நேரத்தில் முருகன் கோவிலிலோ அல்லது வீட்டில் இருக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தால், முருகனுக்கு ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, ஒரு வெள்ளை பேப்பரை எடுத்து, நான்கு பக்கமும் மஞ்சள் தடவிக் கொள்ளுங்கள். பிறகு உங்களுக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்று, மனம் உருக முருகப்பெருமானை வேண்டிக் கொள்ளுங்கள். பிறகு அந்த பேப்பரில் “வேலவா வேலவா” என்று 108 முறை எழுத வேண்டும்.
இந்த பெயருக்கு அர்த்தம் என்ன தெரியுமா. வெற்றி கிடைக்கும். நீங்கள் எதைத் தொட்டாலும் அது சுபிட்சம் அடையும். தோல்வி என்பதே உங்களுடைய வாழ்க்கையில் வராது. அப்படியே தோல்வி வந்தாலும் நீங்கள் துவண்டு போக மாட்டீங்க. உங்களை தூக்கிவிட முருகப்பெருமான் ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து கை கொடுப்பான். வேலையில் இருப்பவர்கள், வெளியில் இருப்பவர்கள் மட்டும் இந்த மந்திரத்தை ஒரு காகிதத்தில் 6 முறை எழுதுங்கள் போதும். ஏனென்றால் வெளியில் இருந்தால் மந்திரத்தை எழுதுவதற்கு அத்தனை சௌகரியம் இருக்காது. வெறும் ஆறு முறை மட்டும் எழுதினாலே முருகன் உங்களுக்கான அருளை கொடுத்து விடுவான்.
வீட்டில் இருப்பவர்கள் கட்டாயம் இந்த மந்திரத்தை 108 முறை எழுதி முருகப்பெருமானிடம் வேண்டுதல் வைத்தால் நிச்சயமாக உங்களுடைய வேண்டுதல் பலிக்கும் என்பது நம்பிக்கை. சரி எழுத படிக்கத் தெரியாதவர்களுக்கு இந்த விஷயத்தை நீங்க சொல்றீங்க. உங்க சொந்த பந்தங்கள் யாரோ ஒருவர் ரொம்பவும் உழைக்கிறார்.
ஆனால் அவருக்கு வெற்றி கிடைக்கவே இல்லை, அவர் எப்படி இதன் மூலம் பலனை அடைவது. இந்த மந்திரத்தை அவர் இன்றைய தினம் செவ்வாய் ஹோரையில் 108 முறை சொன்னாலே போதும். அவர்களுக்கு உண்டான பலன் நிச்சயம் கிடைத்துவிடும். ஆமாங்க நம்பிக்கை தான் முதலீடு. மற்றபடி மற்ற பரிகாரங்கள் எல்லாம் நம்முடைய மனதுருப்திக்காக செய்வதுதான்.
இதையும் படிக்கலாமே: அபரிவிதமான சக்தி தரும் மந்திரம்
அதற்காக பரிகாரமே செய்ய வேண்டாம் என்று சொல்ல வரவில்லை. ஆத்மார்த்தமாக நம்பி நாம் ஒரு வேலையை செய்யும்போது அது நமக்கு அபரிவிதமான பலனை கொடுக்கும். வெற்றி கிடைக்கும் என்று நம்பி இந்த பரிகாரத்தை நீங்கள் இன்று செய்து பாருங்கள். உங்களுக்கான வெற்றி தேடி ஓடோடி வந்து உங்கள் கையில் அமர்ந்து கொள்ளும். முருக பக்தர்களுக்கு இந்த வழிபாடு பிரம்மாண்ட வெற்றியை கொடுக்கும் என்ற இந்த தகவலுடன், இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.