குரு பார்க்க கோடி நன்மை என்று கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். பணம் என்றதும் பலருக்கும் சுக்கிர பகவான் தான் ஞாபகத்திற்கு வருவார். சுக்கிர பகவான் என்பவர் அனுதினமும் நாம் நிம்மதியாக வாழ்வதற்கு உதவி செய்பவர். ஆனால் குரு பகவானோ பெரும் பணத்திற்கு அதிபதியாக திகழக்கூடியவர். ஒருவருக்கு திடீரென்று அதிர்ஷ்டம் உண்டாகி அதிக அளவில் பணம் வரவை பெறுகிறார் என்றால் அவருக்கு குருபகவானின் அருள் இருக்கிறது என்று அர்த்தம். அப்படிப்பட்ட குரு பகவானின் அருளைப் பெற்று பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைவதற்கு செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பொருளாதார வளர்ச்சி உண்டாக
ஒருவருடைய வாழ்க்கையில் எந்த ஒரு சுபகாரியம் நடைபெறுவதாக இருந்தாலும் அதற்கு குருவின் பங்கு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. அப்படிப்பட்ட குரு பகவானை ஒவ்வொரு வாரமும் வரக்கூடிய வியாழக்கிழமை அன்று நாம் வழிபாடு செய்ய வேண்டும் என்றும், அப்படி வழிபாடு செய்வதன் மூலம் குருவின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. குருவின் பார்வை நம் மீது விழுவதன் மூலம் நம் வாழ்க்கையில் அனைத்து விதமான சுப நிகழ்ச்சிகளும் நடைபெறுவதோடு பண வரவு உண்டாவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும்.
அந்த வகையில் பொருளாதாரத்தில் படிப்படியாக வளர்ச்சி ஏற்பட்டு ஒரு உயரிய நிலையை அடைவதற்கு குரு பகவானுக்குரிய ஒரு பரிகாரம் இருக்கிறது. இந்த பரிகாரத்தை ஒவ்வொரு வாரமும் வரக்கூடிய குரு பகவானுக்குரிய கிழமையான வியாழக்கிழமை அன்று செய்ய வேண்டும். குரு பகவானுக்குரிய கிழமையான வியாழக்கிழமை அன்று முடிந்த அளவிற்கு மஞ்சள் நிற ஆடையை அணிவதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். மேலும் அன்றைய தினத்தில் அருகில் இருக்கக்கூடிய நவகிரக ஆலயத்திற்கு சென்று குருபகவானுக்கு மஞ்சள் நிற மலர்களை சாற்றி வழிபாடு செய்வதோடு குரு பகவானுக்குரிய தானியமான கொண்டைக்கடலையையும் வைத்து அதற்கு மேல் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது என்பது குரு பகவானின் அருளை பெறுவதற்கு உதவும். இதோடு ஒரு எளிமையான ஒரு பரிகாரமும் இருக்கிறது.
இந்த பரிகாரத்திற்கு குரு பகவானுக்குரிய மஞ்சள் வேண்டும். இந்த மஞ்சள் விரலி மஞ்சள் ஆகவும் இருக்கலாம் அல்லது குண்டு மஞ்சளாகவும் இருக்கலாம். அதை பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை காய்ந்த மஞ்சள் கிடைக்கவில்லை எனில் பச்சை மஞ்சளை கூட நாம் இதற்கு உபயோகப்படுத்தலாம். இப்படி பொடி செய்து வைத்த மஞ்சளை ஒரு சிட்டிகை அளவு மட்டும் எடுத்து நம்முடைய உள்ளங்கையில் வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு இதில் சுத்தமான பன்னீரை ஊற்றி குழைத்து அதை முழுமனதோடு குருபகவானை நினைத்து நம்முடைய நெற்றியில் வைத்துக்கொள்ள வேண்டும். இப்படி ஒவ்வொரு வியாழக்கிழமையும் மஞ்சளை குழைத்து நெற்றியில் வைத்துக் கொள்பவர்களுக்கு குரு பகவானின் பரிபூரணமான அருள் கிடைக்கும். அதன் மூலம் பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும்.
இதையும் படிக்கலாமே:செல்வம் நிலைக்க செந்தூர பரிகாரம்
குரு பகவானின் பரிபூரணமான அருளை பெறுவதற்கு இந்த ஒரு எளிமையான மஞ்சள் பரிகாரத்தை வியாழக்கிழமை தோறும் முழு நம்பிக்கையுடன் செய்து முழுமையான பலனை பெறலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.