படிக்கும் பிள்ளைகளிடத்தில் இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனை என்ன. அந்த பிள்ளைகள் படிக்கக்கூடிய பாடத்தை புரிந்து படிப்பது கிடையாது. சில பாடங்களை எத்தனை முறை தான் படித்தாலும் அவர்களுக்கு அது புரிவதில்லை. உதாரணத்திற்கு கணக்கு பாடம் பிள்ளைகளுக்கு படிப்பதில் சிரமம் இருக்கும். ஆங்கிலத்தில் கிராமர் படிக்க கொஞ்சம் சிரமப்படுவார்கள். இன்னும் சில பேருக்கு சில விஷயங்களை எத்தனை முறை படித்தாலும் அந்த பாடம் புரியாது.
அப்படியே புரிந்தாலும் ஒரு சில நாட்களில் அந்த விஷயங்களை அவர்கள் மறந்து விடுவார்கள். புரியாத பாடங்களை எளிமையாக புரிந்து கொண்டு படிக்க வேண்டும் என்றால் என்ன செய்வது. இதற்கு ஆன்மீக ரீதியாக ஏதேனும் ஐடியா இருக்கிறதா, என்று கேட்டால் பெற்றோர்களை இது உங்களுக்கான டிப்ஸ். இதை பிள்ளைகளுக்கு சொல்லி கொடுங்க. அவர்களுக்கு புரியாத பாடங்களை எளிதில் புரிய வைக்க இந்த ஐடியா நிச்சயம் ஒர்க்கவுட் ஆகும்.
புரியாத பாடம் எளிமையாக புரிய டிப்ஸ்
மஞ்சள் நிறத்தில் இருக்கும் பேப்பரை வாங்கி அவர்களுடைய கையில் கொடுத்து விடுங்கள். இப்போது கலர் கலராக பேப்பர் நமக்கு சுலபமாக கடைகளில் கிடைக்கிறது. கொஞ்சம் நிறையவே மஞ்சள் நிற பேப்பர் வாங்கி அவர்களுடைய கையில் கொடுத்து விடுங்கள். சிவப்பு நிறத்தில் எழுதும் பேனா ஒன்று தேவை. பொதுவாக பிள்ளைகள் பாடம் படிப்பது, பள்ளிக்கூடத்தில் கொடுத்த புத்தகம், நோட்டுப் புத்தகத்தில் தான்.
புரியாத பாடத்தை புத்தகத்தைப் பார்த்து இந்த மஞ்சள் நிற பேப்பரில், சிவப்பு நிற பேனாவில் எழுதி படித்தால் அவர்களுக்கு கஷ்டமான பாடங்கள் கூட சுலபமாக புரியும். உதாரணத்திற்கு ஒரு கணக்கு எத்தனை முறை படித்தாலும் ஒரு மாணவனுக்கு புரியவில்லை. அந்த கணக்கை ஒரு முறை நோட்டுப் புத்தகத்தையோ அல்லது புத்தகத்தையோ பார்த்து மஞ்சள் நிற பேப்பரில், சிவப்பு நிற பேனாவில் எழுத வேண்டும்.
பிறகு அந்த கணக்கை மீண்டும் மீண்டும் பார்த்து புரிய வைக்க முயற்சி செய்தால், அந்த கணக்கு மாணவனுக்கு சுலபமாக புரிந்துவிடும். அந்த கணக்கு பரிட்சை எழுதும் போது கூட அவர்களுக்கு மறக்கவே மறக்காது. இதுதான் இந்த பரிகாரத்திற்கு பின்னால் இருக்கும் சூட்சமம். மிக மிக எளிமையான பரிகாரம் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் இதை ட்ரை பண்ணி பாருங்க.
ஒரு சின்ன பிள்ளைக்கு பாடத்தை சொல்லித் தரும்போதும், பெற்றவர்கள் மஞ்சள் நிற பேப்பரில், சிவப்பு நிற பேனாவில் எழுதி அதை கற்றுக் கொடுக்கலாம் சின்ன சின்ன பிள்ளைகளும் பாடத்தை சுலபமாக படிக்கும். சின்ன சின்ன பிள்ளைகள் முதல் பெரிய படிப்பு படிப்பவர்கள் வரை இந்த மெத்தெட் கட்டாயம் வேலை செய்யும்.
அதே போல உங்களுடைய வீட்டில் வடமேற்கு மூலையில் ஏதேனும் அறைகள் இருந்தால், அந்த இடத்தை படிக்கும் அறையாக பயன்படுத்துங்கள். அப்படி இல்லையா வரவேற்பு அறையிலேயே வடமேற்கு மூலையில் ஒரு விரிப்பு விரித்தோ அல்லது நாற்காலியின் மீது பிள்ளைகளை அமர வைத்து படிக்க வைத்தால், அவர்களுடைய படிப்பில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே: வாஸ்து நாள் அன்று சொல்ல வேண்டிய மந்திரம்
இந்த எளிமையான ஆன்மீகம் சார்ந்த குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாம். உங்களுடைய பிள்ளைகள் கஷ்டப்படாமல் படிப்பதற்கு ஆன்மீகம் சொல்லும் எளிமையான ஒரு வழி. இந்த வழியை உங்களோடு பகிர்ந்து கொண்டதில் மன மகிழ்ச்சியுடன் இன்றைய ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.