நாம் ஒவ்வொருவருக்கு நம்முடைய வாழ்நாளில் இலட்சியம் என்று நினைக்கக் கூடியது அதிகளவில் பணத்தை சம்பாதிக்க வேண்டும், பிறருக்கு முன்பாக தலை நிமிர்ந்து நடக்க வேண்டும், பேருடனும் புகழுடனும் வாழ வேண்டும் என்பதுதான். அப்படி இவை அனைத்தும் நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் நாம் செய்யக்கூடிய முயற்சிகளில் நமக்கு வெற்றிக்கு மேல் வெற்றி கிடைக்க வேண்டும். அப்பொழுதுதான் இவை அனைத்தும் தானாக நம்மை தேடி வரும். அப்படி நாம் செய்யக்கூடிய செயல்களில் நமக்கு வெற்றிக்கு மேல் வெற்றி கிடைப்பதற்கு சில மந்திரங்கள் உதவி செய்யும். அந்த மந்திரங்களில் ஒரு மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
வெற்றிக்கு மேல் வெற்றி கிடைக்க மந்திரம்
செல்வத்திற்கும், பெயர், புகழிற்கும், பணத்திற்கும் அதிபதியாக திகழக்கூடியவர் மகாலட்சுமி தாயார் என்று நம் அனைவருக்கும் தெரியும். ஒருவருடைய வீட்டில் மகாலட்சுமி தாயாரின் பரிபூரணமான அருள் இருந்து விட்டால் அவர் தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். பணத்தை சம்பாதிப்பதற்குரிய வழிகள் கிடைக்கும். அந்த வழிகளின் மூலம் பணத்தை அதிக அளவில் சம்பாதிக்க முடியும். வேலையில் இருப்பவர்களுக்கு உயர் பதவிகள் கிடைக்கும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும் என்று கூறிக்கொண்டு செல்லலாம்.
அப்படி மகாலட்சுமி தாயாரின் அம்சம் பொருந்திய மற்றொரு தெய்வமாக திகழக்கூடியவள் தான் பத்மாவதி தாயார். திருப்பதி ஏழுமலையானின் துணைவியாக திகழக்கூடிய பத்மாவதி தாயாரை நாம் அனுதினமும் வழிபாடு செய்யும்பொழுது பத்மாவதி தாயாரின் அருளோடு திருப்பதி பெருமாளின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். அப்படி பத்மாவதி தாயாரை நாம் வழிபாடு செய்வதற்கு திருப்பதிக்கு தான் செல்ல வேண்டும் என்று இல்லை. முழு மனதோடு நாம் நினைக்கும் பொழுதெல்லாம் அந்த தாயாரை நாம் வழிபாடு செய்யலாம். இதற்கு பத்மாவதி தாயாருக்கு என்று ஒரு மந்திரம் இருக்கிறது.
இந்த மந்திரத்தை தொடர்ச்சியாக 5 வாரங்கள் இந்த நேரம் என்று இல்லாமல் எந்த நேரத்தில் வேண்டுமானலும் நமக்கு எப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்பொழுதெல்லாம் நாம் உச்சரித்துக் கொண்டே வரவேண்டும். தொடர்ச்சியாக நாம் உச்சரித்துக் கொண்டே வருவதன் மூலம் பத்மாவதி தாயாரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். இதன் மூலம் நம்முடைய வாழ்க்கையே முற்றிலுமாக மாறும் என்று கூட கூறலாம். நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பணத்தை சம்பாதித்து பெயருடனும் புகழுடனும் வாழ முடியும்.
மந்திரம்
“ஓம் ஹ்ரீம் பத்மாவத்யை வசக்”
இதையும் படிக்கலாமே:வறுமை நீங்கி பணம் குவிய கூற வேண்டிய மந்திரம்
திருப்பதி ஏழுமலையானை எந்த அளவிற்கு நாம் வழிபாடு செய்யும்பொழுது பணவரவு ஏற்படுகிறதோ அதே அளவிற்கு பத்மாவதி தாயாரையும் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வாழ்க்கையில் நல்ல மாற்றம் என்பது உண்டாகும். முழு மனதுடன் இந்த மந்திரத்தை கூறி வழிபாடு செய்து வெற்றிக்கு மேல் வெற்றியை பெறுவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.