- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval25-4-2025 வானில் தோன்றும் சிரித்த நிலா

25-4-2025 வானில் தோன்றும் சிரித்த நிலா

- Advertisement -

நாளைய தினம் 25-4-2025 வானத்தில் நடக்கவிருக்கும் ஒரு அரிய காட்சியை பற்றி தான் இன்று தெரிந்து கொள்ளப் போகின்றோம். நாளைய தினம் வெள்ளிக்கிழமை, அதிகாலை வேலையில் சிரித்த நிலா வானில் தோன்றவிருக்கிறது. இந்த அரிய காட்சியை வெறும் கண்களால் நாம் காண முடியும். இந்த காட்சிக்கு பின்பு மறைந்திருக்கும் அறிவியல் என்ன.

எந்தெந்த கிரகங்கள் ஒன்றாக நமக்கு காட்சியளிக்க போகின்றது, இந்த நேரத்தில் நாம் செய்ய வேண்டிய வழிபாடு என்ன. ஆன்மீகம் சார்ந்த சில தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். நாளைய தினம் வெள்ளிக்கிழமை அதிகாலை 5:30 மணிக்கு இந்த அரிய காட்சி தோன்றவிருக்கிறது. தேய்பிறை நிலவுக்கு வலது பக்கத்தில், சுக்கிரனும், இடது பக்கத்தில் சனிபகவானும் காட்சி தரப் போகிறார்கள்.

- Advertisement -

இந்த இரண்டு நட்சத்திரங்களுக்கு நடுவே தேய்பிறை நிலா இருக்கப் போகிறது. இது கிட்டத்தட்ட smiley உருவத்தைக் கொண்டிருப்பதால், இதற்கு smiley நிலா என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது முக்கோண வடிவத்தில் நமக்கு காட்சி தரும். நம்முடைய விஞ்ஞானிகள் இதற்கு dancing of the solar system என்று பெயர் வைத்துள்ளார்கள். இந்த காட்சி உலகம் முழுவதும் தெரியும் எல்லோருமே இதை வெறும் கண்களால் பார்க்கலாம்.

பல வருடங்களுக்கு ஒரு முறை தான் விண்ணுலகத்தில் இப்படிப்பட்ட ஒரு அரிய காட்சி நடக்கும். இப்படிப்பட்ட அதிசயங்களும், அரிய காட்சிகளும் விண்ணுலகத்தில் தோன்றும் போது இந்த பூலோகத்தில் நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும். ஆகவே இந்த நேரத்தையும், இந்த காட்சியையும் நாம் தவறவிடலாமா.

- Advertisement -

நாளை 25-4 -2025 வெள்ளிக்கிழமை அதிகாலை 5:00 டு 5:30 மணிக்கு இந்த சிரித்த நிலாவை தரிசனம் செய்ய நீங்க தவற விட்டுராதீங்க. இந்த நேரத்தில் பிரபஞ்சத்திடம் என்ன வேண்டுதல் வைத்தாலும் அது அப்படியே பலிக்கும். நீங்க இந்த நேரத்தை தவறவிட்டால் இவங்க விடிஞ்ச பிறகு மறைஞ்சிடுவாங்க. நம்முடைய வேண்டுதலையும் வைக்க முடியாது.

இதையும் படிக்கலாமே: வெற்றிக்கு மேல் வெற்றி கிடைக்க மந்திரம்

இந்த அரிய காட்சியை பார்த்து என்ன வரம் கேட்க வேண்டும் என்று தோன்றுகிறதோ, நீங்கள் அந்த வரத்தை இந்த பிரபஞ்சத்திடம் கேளுங்கள். நிச்சயம் நீங்கள்  வேண்டியது பலிக்கும். சிரித்த நிலாவைப் போல உங்களுடைய வாழ்க்கையிலும் சிரிப்பு நிரந்தரமாக இருக்கும். வாய்ப்பை நழுவ விடாதீர்கள். இந்த தகவலை உங்களோடு பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சியுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்