இன்றைய சூழ்நிலையில் பல பேர் வீடுகளில் சுப காரியத்தடை ஏற்படுவதற்கு காரணமாக இருப்பது பித்ரு சாபமும், பித்ரு தோஷமும் தான். மறைந்த முன்னோர்களுக்கு அறிந்தோ அறியாமலோ நாம் செய்த தீங்கு தான், நம்முடைய குடும்பத்தை இன்று கஷ்டப்படுத்திக் கொண்டிருக்கிறது. மறைந்த முன்னோர்களுக்கு ஒரு சில வீடுகளில் திதி தர்ப்பண காரியங்களை சரியாக செய்து வருவார்கள்.
ஒரு சில வீடுகளில் அந்த திதி தர்ப்பண காரியங்களை செய்வதற்கான சூழ்நிலை சரியாக அமையாது. முன்னோர்களுடைய வழிபாடு தடைப்படும். முன்னோர்களின் வழிபாடு தடைபட்டால் வீட்டில் சுப காரிய தடை இருக்கும். தேவையில்லாத பிரச்சனைகள் குடும்பத்தில் இருக்கும். குடும்பத்தில் நிம்மதி இருக்காது. இப்படி உங்களுடைய வீட்டில் எந்த பிரச்சனை இருந்தாலும் சரி, அந்த பிரச்சனைகள் சரியாக, பித்ரு தோஷம் பித்ரு சாபம் விலக செய்ய வேண்டிய ஒரு எளிமையான வழிபாட்டை தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாளை தெரிந்து கொள்ள போகின்றோம்.
சித்திரை அமாவாசை பரிகாரம்
நாளைய தினம் சித்திரை மாதம் அமாவாசை. இந்த அமாவாசையில் நாம் செய்யக்கூடிய முன்னோர்கள் வழிபாடு நமக்கு பரிபூரண அருள் ஆசியை பெற்று கொடுக்கும். மற்ற அமாவாசை தினத்தில் முன்னோர்கள் வழிபாடு செய்ய தவறி இருந்தாலும் சரி, நாளை வரவிருக்கும் அமாவாசை நாளில் பித்ருக்கள் வழிபாட்டை தவறாமல் செய்து விடுங்கள். நாளை காலை எழுந்த உடனேயே சுத்தபத்தமாக குளித்துவிட்டு, கொஞ்சமாக பச்சரிசியை எடுத்து தண்ணீரில் போட்டு ஊற வைத்து வேக வைத்துக் கொள்ளுங்கள். சாதத்தை வடிக்கக்கூடாது.
கஞ்சியோடு தான் சாதம் இருக்க வேண்டும். வேக வைத்த சாதத்தில் கொஞ்சமாக வெல்லம், கொஞ்சமாக வாழைப்பழம், கொஞ்சம் தேன், ஒரு சொட்டு மட்டும் நெய் இந்த பொருட்களை எல்லாம் விட்டு நன்றாக கலந்து இதை பசு மாட்டிற்கு தானமாக கொடுக்க வேண்டும்.
வீட்டில் இருக்கும் குடும்பத் தலைவி இந்த பிரசாதத்தை தயார் செய்யுங்கள். கணவன் மனைவி இரண்டு பேரும் ஒன்றாக சேர்ந்து இந்த பிரசாதத்தை கொண்டுபோய் மதியம் 12 மணிக்கு முன்பாக ஏதாவது ஒரு பசு மாட்டிற்கு தானமாக கொடுத்து விட்டு வர வேண்டும். மதிய நேரத்திற்கு முன்பு இந்த பரிகாரத்தை செய்ய முடியவில்லை என்றால் மாலை 6 மணிக்கு முன்பு இந்த பரிகாரத்தை செய்து விடுங்கள்.
பிரசாதத்தை பசுவிற்கு கொடுக்கும் போது தம்பதி சரீரமாக கோமாதாவிடம் நமஸ்காரம் வாங்கி, மனதார முன்னோர்களின் நினைத்து வேண்டிக்கொண்டு, நாங்கள் அறியாமல் செய்த பாவத்திற்கு மன்னிப்பு கொடுத்து விடுங்கள். எங்களுடைய குடும்பத்தில் சுப காரிய தடைகள் விலக வேண்டும், மறைந்து முன்னோர்கள் தான் எங்களுடைய குடும்பத்திற்கு பாதுகாப்பு கவசமாக இருக்க வேண்டும், என்று மனதார சொல்லிக் கொண்டே, அந்த பச்சரிசி பொங்கலை பசு மாட்டிற்கு உங்கள் கையால் சாப்பிட கொடுத்து விடுங்கள்.
வீதியில் வரும் பசு, கோசாலையில் இருக்கும் பசு அல்லது யாராவது வீட்டு பக்கத்தில் பசு மாடு வளர்ப்பார்கள், இப்படி எந்த பசுவிற்கு வேண்டும் என்றாலும் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யலாம். இந்த பரிகாரத்தை செய்த நாள் முதல் உங்கள் குடும்பத்திற்கு இருக்கும் பித்ரு தோஷம், பித்ரு சாபம் விலகும் என்பது நம்பிக்கை.
இதையும் படிக்கலாமே: சித்திரை அமாவாசை வழிபாடு
இந்த பரிகாரத்தோடு சேர்த்து கட்டாயம் நாளை நீங்கள் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணங்களை தவறாமல் கொடுக்க வேண்டும். வீட்டில் படையல் போட்டு முன்னோர்களுக்கு வழிபாடு செய்யும் வழக்கம் இருந்தால், அந்த வழிபாட்டையும் தவறாமல் செய்து விடுங்கள். குடும்பத்தில் நல்லதே நடக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.