- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசித்திரை அமாவாசை இரவு கடன் தீர்க்கும் பரிகாரம்

சித்திரை அமாவாசை இரவு கடன் தீர்க்கும் பரிகாரம்

- Advertisement -

இன்று சித்திரை மாதத்தில் வந்திருக்கும் சக்தி வாய்ந்த அமாவாசை. ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து இந்த அம்மாவாசை வந்திருப்பது இரட்டிப்பு சிறப்பு. சூரிய பகவானை தான் பித்ரு காரகன் என்று சொல்லுவார்கள். சூரிய பகவானுக்கே உரிய ஞாயிற்றுக்கிழமையோடு இந்த அமாவாசை திதி வந்திருப்பது அதிசக்தி வாய்ந்தது. ஆகவே இந்த நாளில் நாம் செய்யக்கூடிய பிரார்த்தனைகள், வேண்டுதல்கள் எல்லாம் கூடிய விரைவில் நிறைவேறும் என்பதும் நம்பிக்கை.

இன்று காலை அனைவரும் முன்னோர்களது வழிபாடு, குலதெய்வ வழிபாடு, பூஜை புனஸ்காரங்களை இந்த அமாவாசை திதியில் நிறைவு செய்திருப்போம். இன்று இரவு தூங்க செல்வதற்கு முன்பாக இந்த ஒரு பரிகாரத்தையும் செய்து விடுங்கள். விடியும் பொழுது உங்கள் கஷ்டங்கள் காணாமல் போக இந்த பரிகாரம் நிச்சயம் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

- Advertisement -

அமாவாசை நிலை வாசல் பரிகாரம்

இன்று இரவு உங்கள் வீட்டில் அனைவரும் தூங்க சென்றதற்கு பிறகு இந்த பரிகாரத்தை செய்யலாம். கொஞ்சமாக வெல்லம் எடுத்துக் கொள்ளுங்கள். அதோடு கொஞ்சம் பொட்டுக்கடலை இருந்தால் சேர்த்துக் கொள்ளலாம். இந்த இரண்டு பொருட்களையும் கையில் வைத்துக் கொண்டு மறைந்த முன்னோர்களையும் குலதெய்வத்தையும் ஒரு முறை நினைத்து வேண்டிக் கொள்ளுங்கள் என்னுடைய குடும்ப கஷ்டமும் துன்பமும் இன்றோடு என்னை விட்டு விலகி விட வேண்டும் என்று பிராத்தனை வையுங்கள்.

வெல்லத்தையும் பொட்டுக்கடலையும் தூள் செய்து கலந்து கொள்ளவும். இந்த இரண்டு பொருட்களையும் லேசாக ஒரு இடி கல்லில் போட்டு இடித்துக் கொள்ளுங்கள் போதும். இந்த இரண்டு பொருட்களையும் நிலைவாசல் படிக்கு வெளியில் ஓரமாக தூவி விடுங்கள்.

- Advertisement -

உங்கள் வீட்டின் வெளியில் மண் பாங்கான இடம் இருக்கிறது என்றால் அந்த இடத்தில் மரம் செடி கொடிகள் இருக்கிறது என்றால் அந்த இடத்தில் கூட இன்று இரவு இந்த இனிப்பு பொருளை தூவி விடுவது மிகவும் நல்லது. உங்களுடைய நிலை வாசலுக்கு வெளிப்பக்கத்திலேயே இடம் இருக்கிறது என்றாலும் இந்த பொருளை நிலை வாசலுக்கு வெளியில் கொஞ்சமாக தூவி விடுங்கள்.

இன்று இரவு உணவு தேடிவரும் எறும்புகள் சின்ன சின்ன பூச்சிகள் எல்லாம் இதை வந்து உங்களுடைய வீட்டு நிலை வாசலில் சாப்பிட்டு, உங்கள் குடும்பத்தை வாழ்த்தி விட்டுச் செல்லும். அது மட்டுமில்லாமல் இந்த இனிப்பு பொருட்களை கொண்டு போய் அந்த வாயில்லா ஜீவன்கள் தங்களுடைய இருப்பிடத்தில், சேகரித்தும் வைத்துக் கொள்ளும்.

- Advertisement -

இந்த பரிகாரம் உங்களுடைய கர்ம வினைகளை குறைப்பதற்கு உதவி செய்யும். கர்ம வினைகள் குறைந்தால் கட்டாயம் நம்முடைய கஷ்டம் குறையும். கஷ்டங்கள் குறையும் போது கடன் சுமையும் தானாக குறைய துவங்கும். மிக மிக எளிமையான பரிகாரம் தான். அமாவாசை தினமான இன்று இரவு தூவி விட்ட இந்த வெல்லக்கட்டியும், பொட்டுக்கல்லையும் மறுநாள் காணாமல் போயிருந்தால், உங்களுடைய கடன் சுமை விரைவில் காணாமல் போகும் என்பதே அர்த்தம்.

உங்களுடைய கர்ம வினைகள் தீருவதற்கு இன்னும் நேரம் காலம் வரவில்லை எனும் பட்சத்தில் நிலை வாசலில் நீங்கள் தூவி விட்டு அந்த பொருட்கள் அப்படியே இருக்கும். அதற்காக கவலைப்பட வேண்டாம். மறுநாள் காலை எழுந்து வாசலை கூட்டும் போது அந்த பொருட்களையும் கூட்டி எடுத்து அப்புறப்படுத்தி விடுங்கள். ஆனால் நம்பிக்கையை கைவிடக்கூடாது. தினமும் கோவிலுக்கு சென்று கோவில் மரத்தடியை சுற்றி இந்த வெல்லம், பொட்டுக்கடலை, அரிசி மாவு இது போல பொருட்களை தூவி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: பண வரவை அதிகரிக்கும் பரிகாரம்

நிச்சயமாக உங்களுடைய கர்ம வினைகள் குறைந்து உங்கள் நிலை வாசலில் தூவி விட்ட பொருளை சாப்பிடவும் எறும்புகள் தேடி வரும். மாதம் தோறும் அமாவாசை இரவு இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வர முன்னோர்களின் ஆசி கிடைக்கும். கர்ம வினைகள் குறைய கடவுள் ஒரு நல்ல வழியை காட்டிக் கொடுப்பான் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்