- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalமுருகனின் அருளை பெற உதவும் தீபம்

முருகனின் அருளை பெற உதவும் தீபம்

- Advertisement -

இன்றைய காலத்தில் பலரும் தங்களுடைய இஷ்ட தெய்வமாக நினைத்து வழிபாடு செய்யக்கூடிய தெய்வங்களுள் ஒருவராக திகழ்ந்தவர் தான் முருகப்பெருமான். அப்படிப்பட்ட முருக பெருமானை நினைத்து அவருடைய பக்தர்கள் ஒவ்வொரு வாரத்திலும் வரக்கூடிய செவ்வாய்க்கிழமை அன்று விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள் அல்லது ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்வார்கள். அதே போல் ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய வளர்பிறை மற்றும் தேய்பிறை சஷ்டியிலும் விரதம் இருந்து வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்திருப்பார்கள். இதே போல் தான் முருகப்பெருமானுக்கு உகந்த கிருத்திகை நட்சத்திர நாளன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்யும் வழிமுறையையும் பின்பற்றி வருவார்கள்.

இப்படி முருகப்பெருமானுக்கு உகந்த நாட்களில் முருகப்பெருமானை வழிபாடு செய்வதன் மூலம் அவரின் அருளை பெற முடியும். அந்த வகையில் ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து கிருத்திகை நட்சத்திரம் வருவதால் அன்றைய தினத்தில் முருகப்பெருமானை நாம் வழிபாடு செய்யும்பொழுது நமக்கு இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்று கூறலாம். அப்படிப்பட்ட முருக வழிபாட்டில் நாம் ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

முருகனின் அருளை பெற வழிபாடு

பொதுவாகவே முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளும் பொழுது கண்டிப்பான முறையில் முருகப் பெருமானுக்காக ஒரு தீபத்தை ஏற்றி வைத்து வழிபாடு செய்வோம். அதிலும் முருக பெருமானுக்கு ஏற்றக்கூடிய தீபமென்றால் அது ஆறு தீபங்களாகவே இருக்கும் இதற்கு முருகப்பெருமான் ஆறுமுகனாக அவதரித்தது தான் காரணமாக திகழ்கிறது. அப்படிப்பட்ட தீபத்தை நாம் ஏற்றும் பொழுது ஒரு எளிமையான தாந்திரீக பரிகாரத்தை செய்தோம் என்றால் கண்டிப்பான முறையில் அந்த தீபத்தை ஏற்றுவதன் பலனால் முருகப்பெருமானின் அருளால் செல்வ வளம் உயரும் என்றே கூறலாம்.

இந்த தீபத்தை வீட்டிலும் ஏற்றலாம் முருகப்பெருமானின் ஆலயத்திலும் ஏற்றலாம். இந்த தீபத்தை மாலை ஆறு மணிக்கு மேல் ஏற்றுவது என்பது சிறப்பு. ஏன் என்றால் மாலை 6 மணிக்கு மேல் மூன்றாம் பிறையும் தோன்றும் என்பதால் அந்த நேரத்தில் நாம் தீபம் ஏற்று வழிபாடு செய்யும்பொழுது மும்மடங்கு பலனை பெற முடியும். முதலில் இதற்கு ஒரு தாம்பாளத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தாம்பாளத்திற்கு மஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக அந்த தாம்பாளத்தில் தங்களால் இயன்ற அளவு துவரம் பருப்பைக் கொட்டி பரப்பிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அடுத்ததாக இந்த தீபத்தை ஏற்றுவதற்கு நமக்கு ஆறு வெற்றிலைகள் வேண்டும். கிழியாத நல்ல வெற்றிலையாக பார்த்து அதை தண்ணீரில் கழுவி ஈரமில்லாமல் துடைத்துக் கொள்ளுங்கள். அதன் காம்பை நீக்கிவிட்டு தாம்பாள தட்டில் வட்ட வடிவில் சுற்றி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு சந்தனத்தில் பன்னீரை ஊற்றி குழைத்து நம்முடைய மோதிர விரலால் ஒவ்வொரு வெற்றிலையின் மீதும் சரவணபவ என்று எழுத வேண்டும். அடுத்ததாக வெற்றிலையின் நுனியிலும் காம்பு பகுதி இருக்கக்கூடிய இடத்திலும் சந்தனம் குங்குமத்தை வைத்து செவ்வரளி மலர்களை அந்த வெற்றிலைக்கு வைக்க வேண்டும். ஆறு தீபங்கள் ஏற்றும் வழக்கம் இருப்பவர்கள் இந்த ஆறு வெற்றிலைகளின் மீதும் தீபத்தை ஏற்றலாம். ஒரு தீபத்தை மட்டும் ஏற்றும் வழக்கம் இருப்பவர்கள் அந்த ஆறு வெற்றிலைக்கு நடுவில் ஒரு அகல் விளக்கை வைத்து தீபம் ஏற்றலாம்.

இந்த தீபத்தை ஏற்றுவதற்கு நெய்யை பயன்படுத்த வேண்டும். அதே போல் சிவப்பு நிற திரியையும் பயன்படுத்த வேண்டும். இதோடு மட்டுமல்லாமல் இந்த ஆறு வெற்றிலைகளின் மீது நாம் முருகப்பெருமானின் சரவணபவ என்னும் மந்திரத்தை எழுதி இருக்கிறோம் அல்லவா? அதற்கு மேல் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து அந்த நாணயத்திற்கும் சந்தன குங்குமம் வைத்து தீபம் ஏற்றினோம் என்றால் நம் வாழ்வில் இதுவரை இருந்த வந்த பணத்தடைகள் அனைத்தும் நீங்கி செல்வநிலை உயர ஆரம்பிக்கும். பிறகு முருகப்பெருமானை மனதார நினைத்துக் கொண்டு முருகப் பெருமானுக்கு தேனை நெய்வேத்தியமாக வைத்து நமக்கு தெரிந்த முருகப்பெருமானின் மந்திரங்களையோ அல்லது கவசத்தையோ பாடி கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே:கேட்டது கிடைக்க சந்திர தரிசனம் செய்யும் முறை

முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளான ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி இந்த முறையில் முருகப் பெருமானுக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்வதன் மூலம் அவரின் அருளை பரிபூரணமாக பெற்று செல்வ செழிப்பில் உயர முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்