- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalமுருகன் பாதங்களைச் சரணடைய எளிமையான பாடல் வரி

முருகன் பாதங்களைச் சரணடைய எளிமையான பாடல் வரி

- Advertisement -

அனு தினமும் முருகனை வழிபாடு செய்வது எதற்காக. அந்த தாமரைப் பொற்பாதங்களில் ஒரு சின்ன இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக. முருகனை நீங்கள் ஒவ்வொரு நாளும் நெருங்க வேண்டுமா. முருகன் வழிபாட்டில் இனிமேல் இந்த பாடல் வரிகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

தினமும் முருகனை வழிபாடு செய்யும்போது இப்படி முருகனிடம் வேண்டிக் கொண்டாலே போதும். நீங்கள் கேட்டதையும் தாண்டி அவரது 12 கரங்களால் வரங்களை வாரி வாரி கொடுக்கும் வல்லமை கொண்டவர் தான் நம்முடைய முருகப் பெருமான்.

- Advertisement -

தினமும் உங்களுடைய வீட்டில் இருந்தபடியே பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, முருகா முருகா முருகா என்று மூன்று முறை முருகனது பெயரை உச்சரித்து விட்டு, பின் சொல்லக் கூடிய வரிகளையும் ஒரு முறை படிக்கலாம்.

முருகன் வேண்டுதல் பாடல்

அப்பனே முருகா நீ மட்டும் போதும்
நீ பார்த்து கொடுப்பதே எனக்கு சிறப்பானது
என்னை உன் தொண்டனாக ஏற்றுக் கொள்
உன் திருவடி நிழலில் எனக்கும் கொஞ்சம் இடம் கொடு.

- Advertisement -

பட்டது போதும் இனி துயரம் வேண்டாம்.
என் வாழ்க்கையை நல்லபடியாக மாற்று
எல்லா நலன்களும் கிடைக்க வேண்டும்
தீயவற்றை நீக்கி நல்ல தகுதியை கொடு
சகல யோகத்தோடு வாழவை முருகா
முருகன் பாதங்கள் மட்டுமே துணை.

இவ்வளவுதான். இந்த பாடல் வரிகளை தினமும் படிக்கும்போது முருகனிடம் நெருங்குவது போல ஒரு உணர்வு நமக்கு ஏற்படும். முருகன் நம்மை நெருங்குவது போல ஒரு உணர்வு ஏற்படும். வாழ்வில் இருக்கும் கஷ்டங்கள் படிப்படியாக குறையும். வேண்டிய வரங்களை கொடுக்க முருகப்பெருமான் நம்மோடு கலந்து, நம் உணர்வோடு இணைந்து, முயற்சிகளை மேற்கொள்ள செய்வான்.

இதையும் படிக்கலாமே: மாதத்தின் முதல் நாள் விநாயகர் வழிபாடு

உங்களுக்கு வாழ்வில் எந்த துன்பம் இருந்தாலும் சரி, அது ஒரு நொடிப் பொழுதில் விலக வேண்டும் என்று, மேல் சொன்ன முறையில் முருகனை வழிபாடு செய்யுங்கள். முருகனை வழிபாடு செய்ய பலவிதமான வழிகள், பலவிதமான சான்றோர்கள், ஆன்றோர்கள் சொல்லியது இருந்தாலும், பலவிதமான பக்தி பாடல்கள் இருந்தாலும், இந்த எளிமையான வழியும் முருகனோடு உங்களை சீக்கிரம் நெறுங்க வைக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்