- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகஷ்டங்களை நீக்கும் நரசிம்மர் வழிபாடு

கஷ்டங்களை நீக்கும் நரசிம்மர் வழிபாடு

- Advertisement -

உக்கிர தெய்வங்களில் ஒருவராக திகழக்கூடியவர் நரசிம்மர் என்று நம் அனைவருக்கும் தெரியும். கோபம் மிகுந்தவராக திகழக்கூடிய நரசிம்மர் உண்மையான பக்திக்கும் அன்பிற்கும் அடிமையானவர் என்றும் நம் அனைவருக்குமே தெரியும். அப்படிப்பட்ட நரசிம்மரை முழுமனதோடும் பக்தியோடும் நாம் வழிபாடு செய்யும்பொழுது நம் வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் காணாமல் போகும். அந்த வகையில் நரசிம்மரை எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

நரசிம்மர் வழிபாடு என்பது மிகவும் சிறப்பு மிகுந்த வழிபாடாக கருதப்படுகிறது. நரசிம்மரை நாம் வழிபாடு செய்வதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய எதிரிகளின் தொல்லை நீங்கும். கடன் பிரச்சனை விலகும். வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் காணாமல் போகும் என்று கூறிக் கொண்டே செல்லலாம். அப்படிப்பட்ட நரசிம்மரை பல விதங்களில் வழிபாடு செய்யலாம். மிகவும் எளிமையான முறையில் வீட்டிலேயே வழிபாடு செய்யும் முறையும் இருக்கிறது. அந்த முறையை பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை சுவாதி நட்சத்திரம் வரக்கூடிய நாட்களில் செய்ய ஆரம்பிக்கலாம் அல்லது வியாழக்கிழமை, சனிக்கிழமை போன்ற கிழமைகளில் ஆரம்பிப்பது என்பது மிகவும் சிறப்பு மிகுந்ததாக கருதப்படுகிறது. இதற்கு வீட்டு பூஜை அறையில் லட்சுமி நரசிம்மரின் படம் இருக்கும் பட்சத்தில் அந்த படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வேளை நரசிம்மரின் படம் இல்லை என்பவர்கள் பெருமாளின் படத்திற்கு முன்பாக கூட இந்த வழிபாட்டை செய்யலாம். ஒரு சிறிய தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு அகல் விளக்கை வைத்து சுத்தமான பசு நெய்யை ஊற்றி தாமரை தண்டு திரியைப் போட்டு தீபம் ஏற்ற வேண்டும். கண்டிப்பான முறையில் நரசிம்மருக்கு பானகத்தை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும்.

பிறகு நரசிம்மரின் இந்த ஒரு மந்திரத்தை 21 முறை கூற வேண்டும். இந்த வழிபாட்டை காலையிலும் செய்யலாம் மாலையிலும் செய்யலாம் என்பதால் தங்களுக்கு எந்த நேரம் வசதியாக இருக்குமோ அந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட கஷ்டம் விலக வேண்டும் என்று சங்கல்பம் செய்து கொண்டு 21 நாட்கள் இந்த மந்திரத்தை 21 முறை கூறுவதன் மூலம் அந்த கஷ்டங்கள் விலகுவதற்குரிய வழிகளை நரசிம்மர் அருள்வார். மந்திர உச்சாடல் செய்யக்கூடிய நாட்களில் சுத்தமாக இருக்க வேண்டும். அசைவத்தை தவிர்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மந்திரம்

“உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் சர்வதோமுகம் நரசிம்மம் பீஷ்னம் பத்ரம் ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யகம்”

இதையும் படிக்கலாமே:அடமானத்தில் இருக்கும் நகையை திருப்ப

உண்மையான பக்திக்கும் அன்பிற்கும் கட்டுப்பட்டவராக திகழக்கூடிய நரசிம்மரை நாமும் முழு மனதுடன் நம்பி இந்த முறையில் வழிபாடு செய்ய கஷ்டங்கள் அனைத்தையும் தீர்த்து வைப்பார் நரசிம்மர் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்