- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவீட்டில் கெட்ட சக்தி விலக வியாழக்கிழமை சாம்பிராணி தூப பரிகாரம்

வீட்டில் கெட்ட சக்தி விலக வியாழக்கிழமை சாம்பிராணி தூப பரிகாரம்

- Advertisement -

பொதுவாகவே வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமை தானே சாம்பிராணி தூபம் போட்டு விளக்கு ஏற்ற வேண்டும் என்று சொல்லுவார்கள். இது என்ன வியாழக்கிழமை அன்று சாம்பிராணி தூபம் போட வேண்டும் சொல்கிறீர்களே. இவ்வாறு, நிறைய பேர் சிந்திக்கலாம். வீட்டில் தேவையற்ற எதிர்மறை ஆற்றல் தங்கி இருந்தால், மகாலட்சுமி கடாட்சம் வீட்டிற்குள் நுழையாது, லட்சுமி கடாட்சம் நிலையாக தாங்காது.

வியாழக்கிழமை இரவே இந்த சாம்பிராணி தூபத்தை போட்டு உங்கள் வீட்டை சுத்தம் செய்து வைத்துவிட்டு, வெள்ளிக்கிழமை காலை பூஜையறையில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யும்போது, மகாலட்சுமி வருகைக்கு ஒரு தடையும் இருக்காது. வியாழக்கிழமை இரவு வீட்டில் போட வேண்டிய தூபம் என்ன. மகாலட்சுமி வருகைக்கு வீட்டில் என்ன விஷயத்தை முக்கியமாக செய்ய வேண்டும், எந்தெந்த விஷயத்தை முக்கியமாக செய்யக்கூடாது. ஆன்மீகம் சார்ந்த சில தகவல்களை இந்த பதிவின் மூலம் படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

கெட்ட சக்தி விலக சாம்பிராணி தூபம் போடும் முறை

வியாழக்கிழமை இரவு 8 டு 9 அடுப்புக் கரியில் நெருப்பு மூட்டி, வெள்ளை குங்கிலியம் சேர்த்த சாம்பிராணி தூபம் போட்டு, இந்த புகையை வீடு முழுவதும் காண்பித்தால், வீட்டில் தங்கியிருக்கும் கெட்ட சக்தி முழுமையாக உடனடியாக வெளியேறிவிடும். முயற்சி செய்து பாருங்கள். வாரம் தோறும் வரக்கூடிய வியாழக்கிழமை, வீட்டில் சாம்பிராணி புகை போட்டுவிட்டு, வெள்ளிக்கிழமை காலை மஹாலட்சுமிக்கு பூஜை செய்தால், மகாலட்சுமி வருகையில் எந்த தடையும் இருக்காது. இது முதல் விஷயம்.

நிலைவாசல் படிக்கு பக்கத்திலேயே செருப்பு போட்டு வைத்திருந்தால் மகாலட்சுமி வீட்டிற்குள் நுழைய மாட்டாள். இந்த தவறை திருத்திக் கொள்ளுங்கள். நிலை வாசல் காலுக்கு கட்டாயம் மஞ்சள் குங்குமம் போட்டு வைக்க வேண்டும். அதிலும் மாதத்தில் ஒரு நாளோ அல்லது இரண்டு நாளோ வாஸ்து நாள் என்று ஒன்று வரும். அது கேலண்டரில் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த வாஸ்து நாள் அன்று, வாஸ்து பகவானை நினைத்து நிலை வாசலில் பொட்டு வைத்தால் துஷ்ட சக்திகள் வீட்டிற்குள் நுழையவே நுழையாது. லட்சுமி கடாட்சம் வீட்டில் நிறைவாக இருக்கும்.

- Advertisement -

உங்களுடைய வீட்டில் பெரிய அளவில் பணகஷ்டம் இருக்கிறது. பரிகாரம் எதுவுமே உங்களால் செய்ய முடியாது என்றால், உடனடியாக ஒரு நெல்லி மரத்தை வளர்க்கத் தொடங்குங்கள். சின்ன தொட்டியில் நெல்லி செடி வைத்து வளர்த்தாலும் சரிதான். நெல்லி செடிக்கு தண்ணீர் ஊற்றி அந்த நெல்லி செடியிடம் உங்களுடைய பண பிரச்சனைகளை சொல்லி, பணவரவு அதிகரிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டால், நிச்சயமாக வறுமை நீங்கும். வருமானம் பெருகும்.

வீட்டில் நெல்லி செடி வைக்க வாய்ப்பே இல்லையா. ஏதாவது ஒரு கோவிலிலோ ஒரு பொது இடத்திலோ, நெல்லி செடியை நட்டு வைத்து தினமும் அந்த நெல்லி செடிக்கு தண்ணீர் ஊற்றி வளர்த்து வர, உங்களுடைய பண கஷ்டம் தீரும். வீட்டில் இருக்கும் பெண்கள் ஸ்டிக்கர் பொட்டு வைத்தாலும் சரி, அதனோடு கொஞ்சம் குங்குமத்தையும் நெற்றியில் வைக்க, வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைக்கும்.

இதையும் படிக்கலாமே: வெள்ளிக்கிழமை 1 டு 2 மகாலட்சுமி வழிபாடு

நெற்றியில் வைத்த ஸ்டிக்கர் பொட்டை எடுத்து முகம் பார்க்கும் கண்ணாடியில் ஒட்டும் பழக்கம் உங்களிடத்தில் இருந்தால், அதை கொஞ்சம் தவிர்த்துக் கொள்ளுங்கள். முகம் பார்க்கும் கண்ணாடியில், நீங்கள் நெற்றியில் வைத்த பொட்டை ஒட்டி வைக்காதீங்க. இது சில பல கஷ்டங்களை கொடுப்பதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது. மேல் சொன்ன விஷயங்களை நம்பிக்கையுடன் பின்பற்றும்போது நிச்சயமாக உங்கள் வீட்டில் மகாலட்சுமியின் வருகை இருக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்