- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval12-05-2025 இன்று சித்ரா பௌர்ணமி. அதிசக்தி வாய்ந்த 44 நிமிட வழிபாடு.

12-05-2025 இன்று சித்ரா பௌர்ணமி. அதிசக்தி வாய்ந்த 44 நிமிட வழிபாடு.

- Advertisement -

இன்று சித்ரா பௌர்ணமி. சித்திரகுப்தர் வழிபாடு, குலதெய்வ வழிபாடு, முழு நிலவை தரிசனம் செய்வது, சிவன் பார்வதி வழிபாடு செய்வது, திருவண்ணாமலை கிரிவலம் செல்வது, திருச்செந்தூர் முருகனை தரிசிப்பது, இதுபோல பல இறை வழிபாட்டிற்கு இந்த நாள் உகந்தது. இத்தனை அதிசக்தி வாய்ந்த நாளில் இன்னொரு சிறப்பான வழிபாட்டையும் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

இந்த பவுர்ணமி நாளில், இந்த குறிப்பிட்ட 44 நிமிடத்தில், இந்த பிரபஞ்சத்திடம் வேண்டுதல் வைத்தால், நாம் வேண்டிய வரங்கள் எல்லாம் உடனே கிடைக்குமாம். அந்த 44 நிமிடங்கள் எப்போது வருகிறது. அந்த நேரத்தில் நாம் என்ன வழிபாடு செய்ய வேண்டும் ஆன்மீகம் சார்ந்த பதிவுகளை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

குரு பார்க்க கோடி நன்மை என்று சொல்லுவார்கள். அந்த குரு ஹோரையில், இந்த சித்ரா பௌர்ணமி நிறைவடையக்கூடிய ஒரு அதிசக்தி வாய்ந்த நேரத்தை பற்றி தான் இப்போது நாம் பார்க்க போகின்றோம். நீங்கள் நினைத்தால் உங்கள் தலையெழுத்தை மாற்றி கோடீஸ்வர யோகத்தை கூட பெறலாம், இந்த 44 நிமிடத்தில் பிரபஞ்சத்திடம் வேண்டிக் கொண்டால் எதுவும் நடக்கும்.

சித்ரா பௌர்ணமி அதிசக்தி வாய்ந்த பரிகாரம்

நேற்றைய தினம், மே 11ம் தேதி இரவு 08.48 மணிக்கு பௌர்ணமி திதியானது துவங்கி விட்டது. இன்று மே 12ம் தேதி இரவு 10.44 வரை பெளர்ணமி திதி உள்ளது. இதில் இன்று இரவு 10 மணிக்கு குரு ஓரையும் நமக்கு இருக்கிறது. ஆகவே இந்த சித்ரா பௌர்ணமி திதி முடியும் சமயத்தில், குரு ஹோரை துவங்கும் நேரத்தில், இறை வழிபாடு செய்தால் நம்முடைய பண கஷ்டம் தீரும். செல்வ வளம் அதிகரிக்கும்.

- Advertisement -

அதாவது மே 12ஆம் தேதி திங்கட்கிழமை இன்று இரவு 10:00 மணியிலிருந்து 10:44 மணிக்குள் இந்த வழிபாட்டை நீங்கள் உங்கள் வீட்டில் மேற்கொள்ள வேண்டும். அந்த அதிசக்தி வாய்ந்த 44 நிமிடங்கள் இதுதான். சரி இந்த வழிபாட்டை எப்படி மேற்கொள்ளலாம்.

பூஜை அறையில் குலதெய்வத்தை நினைத்து விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, வெற்றிலை பாக்கு பூ வாழைப்பழம், 11 ரூபாய் தட்சனை வைத்து மனம் உருக வேண்டுதல் வைக்க வேண்டும். இந்த தாம்பூலத்தை உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு, இந்த பிரபஞ்சத்திடம் உங்களுக்கு என்ன வரம் வேண்டுமோ, அதை நீங்கள் கேட்கலாம்.

- Advertisement -

கடன் தீர வேண்டுமா, லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் கிடைக்க வேண்டுமா, நல்ல வேலை கிடைக்க வேண்டுமா, நல்ல வாழ்க்கை துணை அமைய வேண்டுமா, மன நிம்மதி வேண்டுமா, பிள்ளைகளுக்கு நல்ல கல்வி ஆரோக்கியம் தேவையா, என்ன கேட்டாலும் இந்த பிரபஞ்சம் உங்களுக்கு கொடுக்கும். மொத்த வேண்டுதலையும் வைத்து குழப்பிக் கொள்வதை விட, இப்போது உங்களுக்கு தற்சமயம் உடனடியாக தீர்க்கக் கூடிய பிரச்சனை என்ன அந்த ஒரு வேண்டுதலை மட்டும் இறைவனிடம் வைத்து இந்த வழிபாட்டு முறையை மேற்கொள்ளலாம்.

வழிபாட்டை முடித்துவிட்டு வாழைப்பழத்தை வீட்டில் இருப்பவர்கள் பிரசாதமாக சாப்பிடலாம். 11 ரூபாயை மஞ்சள் துணியில் முடிந்து பணம் வைக்கும் பெட்டியில் வைக்கலாம். 44 நிமிடம் முழுவதும் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. இதற்கு இடைப்பட்ட நேரத்தில் 10 நிமிடம் நம்பிக்கையோடு இந்த வழிபாட்டை செய்தாலும் நிச்சயம் கை மேல் பலன் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: தீர்க்க முடியாத பிரச்சினைகள் தீர முக்கண் தீப வழிபாடு

வீட்டிற்குள்ளேயே இந்த வழிபாட்டை செய்துவிட்டு, முடியும் என்பவர்கள் மட்டும் அந்த சந்திர பகவானின் தரிசனத்தை பெறுங்கள். அந்த சந்திர ஒளியில் சிறிது நேரம் அமர்ந்திருங்கள். நிச்சயம் நீங்கள் நினைத்த நல்லது மட்டுமல்ல, நீங்கள் நினைக்காத நல்லதை கூட இந்த பிரபஞ்சம் உங்களுக்கு செய்து கொடுக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்