- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடனை அடைக்கும் சித்தர் மந்திரம்

கடனை அடைக்கும் சித்தர் மந்திரம்

- Advertisement -

எல்லோர் வாழ்க்கையிலும் வறுமை கடன் என்ற இருள் சூழ்ந்துதான் இருக்கிறது. கலியுகத்தில் கடன் இல்லாமல் வாழ முடியாது என்பது விதி. இந்த கடன் சுமையிலிருந்து வெளிவர வேண்டும் என்றால், செவ்வாய் பகவானின் அருள் நமக்கு கிடைக்க வேண்டும். அதற்கு முருகப்பெருமானின் அருளை நாம் பரிபூரணமாக பெற வேண்டும். முருகனும் சிவனும் வேறு கிடையாது.

முருகப்பெருமானே வந்து உங்களுக்கு இன்று வாக்கு கொடுத்ததாக நினைத்துக் கொண்டு, இந்த ஒரு எளிமையான பரிகாரத்தை செய்து பாருங்கள். விடியும் பொழுது நிச்சயம் உங்கள் வாழ்க்கை கஷ்டத்திற்கு ஒரு தீர்வு கிடைக்கும். வாழ்க்கையில் இருக்கும் இருளும் விலகும். இந்த விடியல் வெறும் இருளை நீக்க மட்டும் அல்ல. உங்களுடைய கடன் கஷ்டங்களை நீக்கவும் தான். நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்வோம். கடன் இல்லாமல் வாழும் பாக்கியம் பெறுவோம்.

- Advertisement -

இன்று செவ்வாய்க்கிழமை முருக பக்தர்கள் அனைவரும் உறங்க செல்வதற்கு முன்பு நிச்சயம் முருகனை மனதார நினைத்து வழிபாடு செய்வீர்கள். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. கூடவே, கையில் ஒரு கைப்பிடி அளவு துவரம் பரப்பையும் எடுத்துக் கொள்ளுங்கள். செவ்வாய் பகவானுக்கு உரிய தானியம் அல்லவா. கடனை தீர்க்க இந்த துவரம் பருப்பு உதவி செய்யும்.

கையில் துவரம் பருப்பை வைத்துக்கொண்டு இந்த சித்தரின் பெயரை, பின் சொல்லக்கூடிய இந்த சித்தரின் மந்திரத்தை 27 முறை சொல்லிவிட்டு, அந்த துவரம் பருப்பை கிண்ணத்தில் போட்டு பூஜை அறையில் முருகரின் திருவுருவப்படத்திற்கு முன்பாக வைத்துவிட்டு தூங்க செல்லுங்கள்.

- Advertisement -

மறுநாள் காலை எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, முதல் வேலையாக அந்த துவரம் பருப்பை கொண்டு போய் காக்கை குருவிகளுக்கு இரையாக மொட்டை மாடியில் போடுங்கள், அல்லது மரத்தடியில் போட்டு விடுங்கள். இவ்வளவுதாங்க பரிகாரம். இன்று இரவு கையில் துவரம் பருப்பை வைத்துக்கொண்டு, சொல்ல வேண்டிய மந்திரம் இதோ.

சித்தர் மந்திரம்

ஓம் சிவாய சுந்திராநந்தர் சித்தரே நமஹ!

- Advertisement -

சுந்திராநந்தர் சித்தர். 18 சித்தர்களில் இவரும் ஒருவர். இவர் மதுரையில் வாழ்ந்தவர். சட்டை முனி நாத சித்தரின் சீடனாக இவரை சொல்கிறார்கள். இவரையும் சிவனது ஸ்வரூபமாகத்தான் காண்கின்றோம். இன்று முருகனின் வாக்குப்படி இந்த சித்தரை மனதில் நினைத்துக் கொண்டு தூங்குபவர்களுக்கு இந்த சித்தரின் தரிசனம் கிடைத்தால் கூட ஆச்சரியம் இல்லை. அந்த சித்தரும் சிவரூபம் தான். முருகன் ரூபம் தான்.

இதையும் படிக்கலாமே: பீடை நீங்க சித்தர் வழிபாடு

உங்கள் பிரச்சனைகளை தீர்க்க இது ஒரு எளிமையான பரிகாரமாக இருக்கும். இறை வழிபாட்டை விட சித்தர்களை நாம் வழிபாடு செய்யும்போது, பலன் அதிவிரைவாக கிடைக்கும். சித்தர் வழிபாடு செய்பவர்களுக்கு அது நன்றாகவே தெரியும். இன்று இரவு மனப்பூர்வமாக ஆத்மார்த்தமாக இந்த சித்தரை அழையுங்கள். உங்கள் வாழ்க்கைக்கு நிச்சயம் நல்லதொரு வழியை காட்டிக் கொடுப்பார் என்ற தகவலுடன் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்