ஒவ்வொருவருக்கும் குடும்பம் என்ற ஒன்று இருக்கும். கணவன், மனைவி, குழந்தைகள், பெற்றோர், உடன்பிறந்தவர்கள் என்று பலர் இருப்பார்கள். இவர்கள் அனைவரும் சேர்ந்துதான் குடும்பம் என்று கருதப்படுகிறது. இப்படி இருக்கக்கூடிய குடும்பத்தில் யாராவது ஒருவர் பிறரிடம் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டே இருக்கிறார் என்றாலோ அல்லது மனவருத்தத்துடன் காணப்படுகிறார் என்றாலோ அந்த குடும்பமே நிம்மதி இழந்து, சந்தோஷம் இழந்து இருக்கும். அப்படிப்பட்ட நிலையை மாற்றி குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிப்பதற்கு ஏற்ற வேண்டிய ஒரு தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
குடும்பத்தில் சண்டை என்றால் கணவன் மனைவிக்கிடையே பிரச்சனை இருக்கலாம் அல்லது பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் நடுவே பிரச்சினைகள் வரலாம் அல்லது மாமனார் மாமியார் மருமகள் மருமகன் போன்றவர்களுடன் பிரச்சனைகள் வரலாம் உடன் பிறந்தவர்களுடன் பிரச்சினைகள் வரலாம். இப்படி பல உறவுகளுக்கு இடையே பலவிதமான பிரச்சனைகள் ஏற்படும். எவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அந்த பிரச்சனை ஒரு சில நேரத்திலேயே சரியாகி திரும்பவும் சுமூகமான நிலைக்கு மாறினால் தான் அந்த குடும்பத்தில் நிம்மதி நிலைத்திருக்கும். அதை தவிர்த்து விட்டு எப்பொழுதும் ஏதாவது ஒரு காரணத்திற்காக சண்டைகள் வந்து கொண்டே இருந்தாலும் கணவன் மனைவிக்கு இடையே சண்டை வந்து பிரிந்து செல்லும் அளவிற்கு சூழ்நிலைகள் உருவானாலும் இந்த ஒரு எளிமையான வழிபாட்டை செய்யலாம்.
இந்த வழிபாட்டை வெள்ளிக்கிழமை அன்றுதான் செய்ய வேண்டும். இதற்காக நாம் பெரிதும் எந்தவித செலவும் செய்ய வேண்டியது இல்லை. வீட்டில் ஒரே ஒரு தீபத்தை ஏற்றி வைக்க வேண்டும் அவ்வளவுதான். இந்த தீபத்தை ஏற்றுவதற்கு நாம் நம்முடைய வீட்டில் எந்த எண்ணையை பயன்படுத்துவோமோ அந்த எண்ணையவே பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த தீபத்தை ஏற்றுவதற்குரிய திரியை மட்டும் தான் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
அந்த வகையில் புதன் கிழமை அல்லது வியாழக்கிழமை அன்று அருகில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு முருகன் ஆலயத்திற்கு செல்லுங்கள். அருகில் முருகன் ஆலயம் இல்லை ஆனால் முருகன் சன்னதி இருக்கக்கூடிய ஆலயம் இருக்கிறது என்றாலும் பரவாயில்லை. முருகன் இருக்கக்கூடிய கருவறையில் கண்டிப்பான முறையில் தீபம் என்பது எரிந்து கொண்டு இருக்கும். அங்கு இருக்கக்கூடிய ஐயரிடம் கூறி ஏற்கனவே தீபம் ஏற்றிய பழைய எரிந்த திரி இருக்கும் அல்லவா? அந்த திரியில் இருந்து ஒரே ஒரு திரியை மட்டும் வாங்கி வரவேண்டும்.
வெள்ளிக்கிழமை அன்று ஆலயத்தில் எரிந்த திரியுடன் புதிதாக ஒரு பஞ்சு திரியை போட்டு ஒரே ஒரு தீபத்தை காலையிலேயே ஏற்றி வைத்து குடும்பத்தில் இருக்கக்கூடிய சண்டை சச்சரவுகள் அனைத்தும் நீங்க வேண்டும், ஒற்றுமை மேலோங்க வேண்டும் என்று வழிபாடு செய்ய வேண்டும். அன்றைய நாள் முழுவதும் அந்த தீபம் எரியட்டும். இப்படி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் முருகன் ஆலயத்தில் இருந்து எரிந்த திரியை வாங்கி வந்து வீட்டில் தீபம் ஏற்றும் பொழுது முருகப்பெருமானின் அருளால் குடும்பத்தில் இருக்கக்கூடிய அனைத்து விதமான சண்டை சச்சரவுகளும், மனக்கசப்புகளும் நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.
இதையும் படிக்கலாமே: அதிகம் யோசிக்கும் ராசிகள்
எளிமையான இந்த தீப வழிபாட்டை முழுமனதோடு முருகப்பெருமானை நினைத்து ஏற்றுபவர்களுக்கு முருகனின் அருளால் குடும்பத்தில் எந்தவித சண்டை சச்சரவுகளும் இருக்காது என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.