வாழ்க்கையில் வரக்கூடிய முக்கால்வாசி பிரச்சனைகளுக்கு காரணமாக இருப்பது இந்த பணம்தான். அந்தப் பண கஷ்டம் எனும் சங்கடத்திலிருந்து நாம் வெளிவர வேண்டும் என்றால் நாளைய தினம் வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வரும் சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகரை எப்படி வழிபாடு செய்வது.
பணத்துக்கு அதிபதியான சுக்கிர பகவான் கொடுக்கும் சங்கடத்திலிருந்து விடுபட நாளைய தினம் செய்ய வேண்டிய பூஜை என்ன, எந்த ஒரு மணி நேரத்தில் இந்த பூஜையை செய்தால் நம்முடைய பண கஷ்டத்திற்கு உடனடியாக ஒரு தீர்வு கிடைக்கும் ஆன்மீகம் சார்ந்த எளிமையான சில பரிகாரங்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.
வெள்ளிக்கிழமை சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
நாளை 16-5-2025 வெள்ளிக்கிழமையில் வரும் சங்கடஹர சதுர்த்தி. நாளை காலையிலேயே குளித்து முடித்துவிட்டு விரதம் இருக்க முடியும் என்பவர்கள் விரதம் இருந்து விநாயகரை வழிபாடு செய்யலாம். முடியாதவர்கள் விரதம் இல்லாமலும் விநாயகரை கும்பிடலாம் தவறு ஒன்றும் கிடையாது.
நாளை மாலை வீட்டின் பக்கத்தில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு சென்று பிள்ளையாருக்கு கொஞ்சம் அருகம்புல் வாங்கி கொடுத்து ஒரு சிதரு தேங்காய் உடைத்து பிள்ளையாரை மூன்று முறை வளம் வந்து, கோவிலில் விளக்கு போட்டு, உங்கள் வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டை முதலில் நிறைவு செய்ய வேண்டும். பிறகு சுக்கிர பகவானை சரி செய்ய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.
நாளை வெள்ளிக்கிழமை இரவு 8 டு 9 சுக்கிர ஹோரை. இந்த நேரத்தில் சங்கடஹர சதுர்த்தி திதியும் சேர்ந்து இருக்கிறது. பூஜை அறையில் விநாயகர், குலதெய்வத்தையும் மனதில் நினைத்து விளக்கு ஏற்றி வையுங்கள். வெற்றிலை பாக்கு, செவ்வாழைப்பழம் பூ, விநாயகருக்கு, ஒரு டம்ளர் பால் நெய்வேத்தியமாக வைத்து விடுங்கள்.
கட்டாயமாக சுக்கிர பகவானை நினைத்து ஒரே ஒரு நெல்லிக்காயை கிண்ணத்தில் போட்டு மகாலட்சுமியின் முன்பு வைக்க வேண்டும். அதன் பிறகு உங்களுக்கு இருக்கும் பணக்கஷ்டம் என்ன. அந்த பணக்கஷ்டத்தை இறைவனிடம் முறையிட்டு அந்த பிரச்சனைக்கு தீர்வு தர வேண்டும், குறிப்பிட்ட அந்த சங்கடம் நிவர்த்தியாக வேண்டும் என்று விநாயகரையும் மகாலட்சுமியையும், சுக்கிர பகவானையும் மனமுருக வேண்டி கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்துவிட்டு, அந்த நெல்லிக்காயை வீட்டில் இருப்பவர்கள் சாப்பிட வேண்டும்.
இதுதான் பரிகாரம். இந்த பரிகாரத்தை சரியாக நாளைய தினம் 8 டு 9 சுக்கிர ஹோரையில் செய்து முடித்திருக்க வேண்டும். சுக்கிர ஹோரையிலேயே அந்த நெல்லிக்காயை வீட்டில் இருப்பவர்கள் சாப்பிட்டு விட வேண்டும். இந்த வழிபாட்டை மட்டும் செய்து பாருங்கள். உங்கள் பண கஷ்டம் எல்லாம் ஒவ்வொன்றாக பட்டு பட்டு சரியாகிவிடும்.
இதையும் படிக்கலாமே: விரைய செலவு குறைந்து சேமிப்பு உயர
பணம் கொஞ்சம் கொஞ்சமாக உங்களை தேடி வர தொடங்கும் சீக்கிரத்தில் நீங்களும் பல கோடிக்கு அதிபதியாகும் வாய்ப்பு கிடைக்கும். பிறகு சந்தோஷத்திற்கு எந்த குறையும் உங்களுக்கு வராது. எல்லாவற்றையும் அந்த விநாயகப் பெருமான் பார்த்துக் கொள்வார் என்ற தகவலுடன் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.