- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval18-05-2025 திருவோண நட்சத்திர வழிபாடு

18-05-2025 திருவோண நட்சத்திர வழிபாடு

- Advertisement -

நாளை 18-5-2025 ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து திருவோண நட்சத்திரமும் பிறக்கவிருக்கிறது. நாளைய தினம் சஷ்டிகிதியும் இருக்கிறது. நாளை பெருமாளுக்கு, முருகருக்கு, சூரிய பகவானுக்கு உகந்த நாள். பித்ரு காரகனான சூரிய பகவானுக்கு உகந்த நாளில், திருவோண நட்சத்திரம் வந்திருப்பதால், இந்த நாளில் இறைவழிபாடு செய்து, நாம் செய்த பாவங்களுக்கு எல்லாம் மன்னிப்பு கேட்டுக் கொண்டால், அதற்கு உண்டான பலன் உடனடியாக கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

முன்னோர்கள் சாபம், பித்ரு தோஷம் வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லை என்பவர்களும் இந்த பரிகாரத்தை நாளைய தினம் செய்யலாம். கர்ம வினையால் செய்த பாவத்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லை என்பவர்கள் இந்த 1 மணி நேரத்தை நாளைய தினம் தவற விடாதீங்க.

- Advertisement -

நாளை மே 18ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4:17 மணிக்கு திருவோண நட்சத்திரம் பிறக்கவிருக்கிறது. திருவோணம் நட்சத்திரம் இருக்கும் சூரிய ஹோரையில் வழிபாட்டை செய்வது தான் சிறப்பு. ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 டு 2 சூரியஹோரை இருக்கிறது. ஆனால் திருவோணம் நட்சத்திரம் நமக்கு கிடையாது.

ஆகவே ஞாயிற்றுக்கிழமை இரவு 8 – 9 மணிக்குள் திருவோண நட்சத்திரமும் சூரிய ஹோரையும் நமக்கு சேர்ந்து வந்திருக்கிறது. ஆகவே இந்த வழிபாட்டை மேற்கொள்ள உகந்த நேரம் என்றால் அது நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 டு 9 தான். மிக மிக எளிமையான முறையில் பின் சொல்ல கூடிய வழிபாட்டை செய்தால். உங்களுக்கு நிச்சயம் வாழ்க்கையில் நல்லதொரு முன்னேற்றம் கிடைக்கும்.

- Advertisement -

திருவோண நட்சத்திரம் சிறப்பு வழிபாடு

நாளை இரவு 8 மணியில் இருந்து 9 மணிக்குள் பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். குலதெய்வத்தை மனதார வேண்டி, முதலில் உத்தரவு வாங்கிக் கொள்ளுங்கள். பெருமாளுக்கு துளசி இலைகளால் அலங்காரம் செய்யுங்கள். முருகப்பெருமானின் திருவுருவப்படத்திற்கு சிவப்பு நிற பூக்களை சாத்தி விடுங்கள்.

அதன் பின்பு உங்களுடைய உள்ளங்கைகளில் ஒரு கைப்பிடி அளவு கோதுமையும், ஒரு துளசி இலையையும் ஒன்றாக சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். கோதுமைக்கு நடுவே துளசி லேசாக புதைத்து உள்ளங்கைகளை இருக்க மூடி கொள்ளுங்கள். பெருமாளையும் முருகரையும் குலதெய்வத்தையும் மனதார வேண்டி உங்களுடைய பிரச்சினைகள் தீர வேண்டும் என்றும், அறியாமல் செய்த பாவத்திற்கு மன்னிப்பு கிடைக்க வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்யுங்கள்.

- Advertisement -

நம்பிக்கையோடு இந்த ஒரு மணி நேரத்தில் குறைந்தபட்சம் 10 நிமிடம் ஆவது இறைவனை மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும். உங்களுக்கு வாழ்க்கையில் என்னென்ன கஷ்டம் இருக்கோ அதை எல்லாவற்றையும் இறைவனிடம் சொல்லி விடுங்கள். உள்ளங்கைகளில் துளசியும் கோதுமையும் கட்டாயம் இருக்க வேண்டும். துளசி பெருமாளுக்கு உரிய பொருள்.

கோதுமை சூரிய பகவானுக்கு உரிய பொருள். இந்த இரண்டு பொருட்களையும் நாளைய தினம் உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு ஏற்றி வைத்திருக்கும் விளக்கிற்கு முன்பு பிரார்த்தனை செய்தால் போதும். உங்களுடைய பிரச்சினைகள் எல்லாம் சம்ஹாரம் செய்யப்படும். அந்த வேலையை முருக பெருமான் பார்த்துக் கொள்வார். காரணம் நாளை சஷ்டி திதியும் இருக்கிறது.

முன்னோர்களுக்கு அறிந்தோ அறியாமலோ ஏதேனும் பாவம் செய்திருந்தால் அந்த பாவங்களுக்கும் மன்னிப்பு கேட்டுக் கொள்ளுங்கள். திதி தர்ப்பணம் வழிபாட்டில் ஏதேனும் குறைபாடுகள் செய்திருந்தால் அதற்கு உண்டான மன்னிப்பையும் வழங்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

வாழ்வில் நம்மை பின் தொடரும் ஒட்டு மொத்த பிரச்சனைக்கும் தீர்வைத் தரும் இத்தனை அற்புதம் வாய்ந்த நாளை நாம் தவறவிடலாமா. இறை வழிபாட்டிற்கு உகந்த இந்த ஒரு மணி நேரத்தை யாரும் தவற விடாதீங்க. சரி வழிபாட்டை முடித்துவிட்டு அந்த ஒரு கைப்பிடி கோதுமையையும் துளசி இலையையும் என்ன செய்வது. வழிபாட்டை முடித்துவிட்டு அதை ஒரு கிண்ணத்தில் போட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

மறுநாள் காலை குளித்து முடித்துவிட்டு, கோதுமையை ஒரு மரத்தடித்து கீழே அப்படியே தூவி விடுங்கள். வாயில்லா ஜீவன்கள் சாப்பிட்டுக் கொள்ளும். துளசி இலையையும் அப்படியே கால்படாத இடத்தில் நீங்கள் போட்டுக் கொள்ளலாம். பசு மாட்டிற்கும் அந்த கோதுமையை கொடுக்கலாம் தவறு கிடையாது.

இதையும் படிக்கலாமே: கடன் தீர்க்கும் வாராஹி மாலை பாடல் வரிகள்

இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் உங்களுடைய பாவங்கள் குறைக்கப்பட்டு, முன்னோர்கள் சாபங்கள் நீக்கப்பட்டு, ஜாதக கட்டத்தில் இருக்கும் தோஷங்களும் நீக்கப்பட்டு, உங்கள் வாழ்க்கையில் ஒரு புத்துயிர் கிடைக்கும். இந்த நாளுக்கு, அந்த நேரத்திற்கு அத்தனை மதிப்பு. அதை மட்டும் தவற விட்டு விடாதீர்கள். ஆன்மீகம் சார்ந்த இந்த அறிய தகவலை உங்களோடு பகிர்ந்து கொண்டதில் சந்தோஷத்துடன் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

சற்று முன்