அன்றாட வாழ்க்கையில் மனிதர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் ஏராளம். ஒரு பிரச்சனை போனால் இன்னொரு பிரச்சனை வரிசை கட்டி நிற்கிறது. பிரச்சனையே இல்லாத வாழ்க்கையை கொடு கடவுளே என்று வேண்டாதீர்கள். அது இந்த உலகமே அழிந்தாலும் நிச்சயம் நடக்காது. நடக்காத ஒரு விஷயத்தை கடவுளிடம் கேட்டும் ஒரு பிரயோஜனமும் இல்லை. பிரச்சனைகள் சூழ்ந்தது தான் வாழ்க்கை.
பிரச்சினையில் இருந்து விடுபடக்கூடிய தைரியம் எனக்கு வேண்டும். பிரச்சனைகளிலிருந்து விடுபடக்கூடிய வழியை எனக்கு காட்டு கடவுளே என்று கும்பிட்டாலே, உங்களுடைய பிரச்சனையில் பாதி முடிந்துவிடும். அன்றாட பிரச்சினைகளை தீர்க்கக் கூடிய ஒரு எளிமையான விநாயகர் வழிபாட்டை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
கோவிலில் மரத்தடியில் எல்லாம் ஒருமுக விநாயகர் தான் நமக்கு காட்சி தருகின்றார். ஆனால் அன்றாட பிரச்சனைகள் பஞ்சாக பறந்து போக வேண்டும் என்றால், நாம் வழிபட வேண்டிய விநாயகர் பஞ்சமுக விநாயகர். ஐந்து முக கொண்ட பஞ்சமுக விநாயகரது வழிபாட்டை தினம் தோறும் எப்படி செய்வது. இந்த விநாயகர் முன்பு உச்சரிக்க வேண்டிய மந்திரம் என்ன, ஆன்மீகம் சார்ந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா. இந்த பஞ்சமுக விநாயகரை கைபேசியில் புகைப்படமாக வைத்து வழிபாடு செய்தால் கூட போதும். திருவுருவப்படம் வாங்கி பூஜை அறையில் மாட்ட வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது.
பஞ்சமுக ஆஞ்சநேயரை மனதில் நினைத்து ஒரு டம்ளர் தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு சிட்டிகை சர்க்கரை, இரண்டு அருகம் புல் அந்த தண்ணீரில் போட்டு, அந்த கிளாஸ் தண்ணீரை உங்கள் கையில் வைத்துக்கொண்டு விநாயகரை நினைத்து இந்த மந்திரத்தை 9 முறை சொல்லி அந்த தண்ணீரை குடித்து விடுங்கள்.
விநாயகர் மந்திரம்
கஜமுகனே நமஹ!
நீங்கள் தண்ணீர் முன்பு சொல்ல வேண்டிய மந்திரம் இதுதான் தண்ணீர் முன்பு எந்த மந்திரத்தை சொன்னாலும் அந்த மந்திரத்தின் சக்தி அந்த நீரில் இறங்கி விடும். பிறகு அந்த தண்ணீர் தீர்த்தமாக மாறி. தினமும் இந்த மந்திரத்தை 9 முறை சொன்னால் உங்களுடைய உடம்புக்குள் அந்த யானை பலம் வந்துவிடும். பிரச்சனைகளை சுலபமாக எதிர்கொண்டு சமாளித்துக் கொள்வீர்கள். இந்த வழிபாட்டை தினமும் காலை 7:11 மணியிலிருந்து 8:11 மணிக்குள் செய்து முடித்து விட வேண்டும்.
இந்த ஒரு மணி நேரத்திற்குள் இடைப்பட்ட காலத்தில் இந்த வழிபாட்டை முடித்துவிட்டு உங்களுடைய அன்றாட வேலையை துவங்கினாலே, அந்த நாள் இனிமையான நாளாக அமையும். அந்த நாளில் வரும் பிரச்சனைகள் உங்களுக்கு பெரிசாக பாதிப்புகளை கொடுக்காது என்பது நம்பிக்கை. அது மட்டுமல்லாமல் உங்களுடைய வாழ்க்கையில் தொடர் வெற்றியை பெறுவதற்கும் இந்த விநாயகர் அருள் ஆசியை வழங்கிடுவார்.
பொதுவாகவே இந்த பெரிய பெரிய தெய்வங்களை வழிபடுவதற்கு முன்பு சிறு தெய்வங்களை வழிபாடு செய்ய வேண்டும். அதாவது விநாயகருக்கு முன்னால் வாகனமாக எலி இருக்கும், விநாயகர் கோவிலுக்கு செல்வதற்கு முன்பு அந்த மூஷிக வாகனனை ஒரு முறை வணங்கி விடுங்கள். சிவன் கோவிலுக்கு செல்வதற்கு முன்பு நந்தி தேவருக்கு வணக்கம் சொல்லுங்கள். முருகர் கோவிலுக்கு செல்வதற்கு முன்பு வாசலில் இருக்கும் மயிலுக்கு நன்றி சொல்லுங்கள்.
இதையும் படிக்கலாமே: வருமானம் விரைவில் அதிகரிக்க எளிய பரிகாரம்
இதுபோல கடவுளுக்கு வாகனமாக இருக்கக்கூடிய இந்த சிறு தெய்வங்களை முதலில் நாம் வழிபாடு செய்யும் போது, கடவுளிடமிருந்து நமக்கு அருளாசி சுலபமாக கிடைக்கும் என்று சொல்லுவார்கள். அது போல தான் விநாயகரை வணங்க வேண்டும் என்றால் கஜமுகன், யானையை வணங்க வேண்டும். எலி விநாயகரது வாகனமாக இருந்தாலும், கஜமுகனை நாம் வழிபாடு செய்யும் போது நம்முடைய மனபலம் அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த எளிமையான ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் பின்பற்றி பலன் பெறவும்.