- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதங்கம் சேர குபேர பரிகாரம்

தங்கம் சேர குபேர பரிகாரம்

- Advertisement -

தங்கம் பெண்களால் அதிகம் விரும்பப்படும் உலோகம் மட்டுமல்ல, அது ஒரு முதலீடாகவும், சொத்தாகவும் நம் பாரம்பரியத்தில் ஒன்றோடு ஒன்றாக கலந்திருக்க கூடிய அற்புத பொருளாகவும் பார்க்கப்படுகிறது. ஆன்மீகத்துடனும், பக்தியுடனும் ஒன்றிணைந்து இருக்கும் இந்த தங்கத்தை வீட்டில் அதிகரிப்பதற்கு யாருக்கும் தெரியாத அற்புத குபேர பரிகாரத்தை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தான் இப்பதிவில் பகிர்ந்து கொள்கிறோம்.

குபேர பகவான் நவநிதிகளுக்கும் அதிபதியாக இருக்கின்றார். அன்னை மகாலட்சுமி தேவி குபேரனுக்கு கொடுத்த பொறுப்புகளை அவர் என்றும் சரியாக செய்து வந்தார். குபேரன் மகாலட்சுமியை வழிபட்டு செல்வந்தராக எப்போதும் தன்னிடத்தில் நிறைய தங்கங்களை வைத்துள்ளார். எல்லோருக்கும் தங்கத்தை போட்டு பார்க்கக்கூடிய பாக்கியம் கிடைப்பதில்லை. கைக்கு எட்டிய தங்கத்தை கூட சிலரால் நீண்ட காலம் தக்க வைத்து அதனைப் போட்டு அழகு பார்க்க முடியாமல் அடகு கடைக்கு செல்வது உண்டு. தங்க நகைகளை அணிவதற்கு பெண்களுக்கு கொடுப்பினை வேண்டும். இந்த கொடுப்பினை கொடுக்கக்கூடிய அற்புத பரிகாரமாகவும் இப்பரிகாரம் செயல்படுகிறது.

- Advertisement -

தங்கம் வீட்டில் மளமளவென்று சேர்ந்து மகாலட்சுமி அருள் பெறுவதற்கு, வியாழன் கிழமையில் குபேரனுக்கு பரிகாரத்தை செய்வது நல்லது. குபேரனுக்கு உகந்த வியாழன் கிழமையில் அதிகாலையிலேயே எழுந்து நீராடி சுத்த பத்தமாக வீட்டை துடைத்து, பூஜை அறையை சுத்தம் செய்து வையுங்கள். மகாலட்சுமியை அலங்கரித்து இரண்டு குத்து விளக்குகளில் சுத்தமான நெய் ஊற்றி தீபம் ஏற்றி வையுங்கள். பின்னர் ஒரு வெள்ளி பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். வெள்ளி சுக்கிர அம்சம் கொண்டது. வெள்ளி அதிர்ஷ்டத்திற்கு உரியது. வெள்ளிப் பொருட்கள் அதிகம் இருக்கும் வீடுகளில் தான் தங்கமும் அதிகமாக இருக்கும்.

வெள்ளி கிண்ணத்தில் ஒரு எலுமிச்சை பழம் ஒன்றை வையுங்கள். அதனுடன் ஒரு கொத்து வேப்பிலையை வைக்க வேண்டும். ஏழு வெள்ளைப் பூக்களை வைக்க வேண்டும். வெள்ளை நிறத்தில் எந்த பூக்கள் கிடைத்தாலும், அதை வைக்கலாம். வாசம் மிகுந்த மல்லிப்பூவை வைப்பது மேலும் சிறப்பிற்கு உரியது. பின்னர் இதனுடன் ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை வையுங்கள். கடைசியாக உங்களிடம் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு தங்க நகையை வையுங்கள். இந்த பாத்திரத்தை பூஜை அறையில் வைத்து மகாலட்சுமிக்கு பூஜை செய்ய வேண்டும். தீபம் ஏற்றி, தூபம் காண்பித்து, கற்கண்டு நைவேத்தியம் படைத்து, கீழ் வரும் இந்த மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். ஒரு மந்திரத்தை 108 முறை சொல்வதால் அதன் அதிர்வலைகள் மூலம் மனித மனமானது ஒருமுகப்படுகிறது. தெய்வீக சக்தியை ஈர்க்கக்கூடிய தன்மையும் இந்த அதிர்வலைக்கு உண்டு.

- Advertisement -

மகாலட்சுமி மந்திரம்:
ஓம் மகாலட்சுமியை நமஹ!!

இதையும் படிக்கலாமே:
சனி மகா பிரதோஷம் இரவு சொல்ல வேண்டிய மந்திரம்.

108 முறை இம்மந்திரத்தை சொல்லி முடித்த பின்பு வீட்டில் வட கிழக்கு மூலையில் குபேரன் அமர்ந்திருக்கும் இடத்தில், இந்த பாத்திரத்தை கொண்டு போய் வையுங்கள். தொடர்ந்து ஏழு வாரங்கள் இது போல குபேர பரிகாரம் செய்ய வேண்டும். மகாலட்சுமி மந்திரத்தை சொல்லி, இப்பரிகாரத்தை செய்த பின்பு வடகிழக்கு மூலையில் கிண்ணத்தை கொண்டு போய் வைக்க வேண்டும். மறுவாரம் இப்பரிகாரத்தை செய்யும் பொழுது, அந்தக் கிண்ணத்தில் இருக்கக்கூடிய எலுமிச்சை பழம், வேப்பிலை, பூக்கள் ஆகியவற்றை மட்டும் யாருடைய கால்களிலும் படாதவாறு செடிகளில் போட்டு விடுங்கள். மீண்டும் புதிதாக வைத்து பூஜை செய்யுங்கள். ஏழு வாரம் இதே போல செய்ய நீங்கள் எதிர்பாராத அளவிற்கு நல்ல மாற்றம் உங்கள் வீட்டில் தெரிய ஆரம்பிக்கும். தங்க நகைகள் அதிகம் சேர்வதற்கு உரிய அருளை மகாலட்சுமியும், குபேரனும் உங்களுக்கு அருள்வார்கள் என்பது நம்பிக்கை.

சற்று முன்