- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval27-05-2025 புன்னாக கௌரி விரதம் 2025

27-05-2025 புன்னாக கௌரி விரதம் 2025

- Advertisement -

வைகாசி மாதம் வளர்பிறை பிரதமை திதி அன்று, இந்த புன்னாக கௌரி விரதம் ஆனது அனுஷ்டிக்கப்படும். பல வகைகளில் கௌரி விரதம் இருக்கிறது. அதில் சக்தி வாய்ந்த ஒரு விரதமாக இந்த நாள் கருதப்படுகிறது. புன்னை மரத்திற்கு அடியில் ஒரு மரப்பலகையின் மீது அம்பாளை கலசரூபத்திலோ அல்லது அம்பாளை அலங்கரித்து அமர வைத்து, புன்னை மரத்து இலைகள், புன்னை மரத்து பூக்களைப் போட்டு இந்த விரதத்தை பெண்கள் அனுஷ்டிப்பார்கள்.

இதற்குத்தான் இந்த விரதத்திற்கு பெயர் புன்னாக கௌரி விரதம் என்று வந்தது. ஆனால் இப்போது புன்னை மரத்தை தேடுவதற்கு எல்லாம் வாய்ப்பு இல்லை. இப்படிப்பட்ட வழிபாடுகளையும் நம்மால் மேற்கொள்ள முடியாது. இருந்தாலும் கௌரி தாயை நினைத்து வீட்டில் இருக்கும் பெண்கள் இன்றைய தினம் சுலபமாக வழிபாட்டை மேற்கொண்டால், குடும்பத்தில் நிம்மதி நிலை குலைந்து போகாமல் இருக்கும்.

- Advertisement -

வீட்டில் இருக்கும் பிரச்சினைகளுக்கும் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை இருக்கும். கணவருடைய ஆயுள் கூடும். குடும்பத்தில் பொருளாதார நிலை உயரும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இத்தனை நன்மைகளையும் இன்று நீங்கள் பெற வேண்டும் என்றால் அம்பாளை எப்படி வழிபாடு செய்வது. சிவன் கோவிலில் இருக்கும் அம்மன் தான் கௌரி.

இன்று உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று சிவபெருமானுக்கு ஒரு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, அம்மனுக்கு வாசனை நிறைந்த பூக்கள் வாங்கி கொடுத்து, குங்கும அர்ச்சனை செய்யலாம். அங்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு, குங்குமம் தானமாக கொடுக்கலாம்.

- Advertisement -

வளையல்கள் தானமாக கொடுத்து, உங்களுடைய பிரார்த்தனையை வைக்கலாம். எதுவுமே செய்ய முடியாது என்றால் அம்பாளுக்கு விளக்கு ஏற்றி மனப்பூர்வமாக அம்மனை பிரார்த்தனை செய்து கொண்டாலும், அந்த கௌரி தாயின் பரிபூரண ஆசி உங்களுக்கு கிடைக்கும்.

கோவிலுக்கும் உங்களால் செல்ல முடியாது என்றால், வீட்டில் இருக்கும் அம்மனின் திரு உருவப்படத்திற்கு முன்பு ஒரு விளக்கு ஏற்றி, குடும்ப நன்மைக்காக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அம்பாளுக்கு இனிப்பாக ஏதாவது ஒரு நெய்வேதியம் வைத்து, இந்த வழிபாட்டை மேற்கொள்வது சிறப்பு. மிக மிக எளிமையான வழிபாடு.

- Advertisement -

செவ்வாய்க்கிழமையோடு இந்த விரத நாள் வந்திருப்பது அதி சிறப்பு வாய்ந்தது. வீட்டு பக்கத்தில் துர்க்கை அம்மன் கோவில் இருந்தால் கூட அந்த அம்பாளுக்கு விளக்கு போட்டு இந்த வழிபாட்டை நீங்கள் மேற்கொள்ளலாம். வீட்டில் திருமணமாகாத பெண்கள் யாரேனும் இருந்தால், அவர்களை இன்று அம்பாள் வழிபாடு செய்யச் சொல்லுங்கள்.

இதையும் படிக்கலாமே: 27-05-2025 இன்று சனீஸ்வர ஜெயந்தி

சீக்கிரம் அவர்களுக்கு நல்ல வாழ்க்கை துணை அமையும். கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் பிரிந்து இருந்து, இந்த நாளில் அம்பாளை வழிபாடு செய்தாலும், கணவன் மனைவி ஒன்று சேர நிறையவே வாய்ப்புகள் இருக்கிறது. நோய்நொடி இல்லாத வாழ்க்கை வாழ, மன நிம்மதியான வாழ்க்கையை வாழ, இந்த எளிமையான வழிபாடு அனைவருக்கும் பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்