- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகிரக தோஷம் நீங்கி மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ

கிரக தோஷம் நீங்கி மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ

- Advertisement -

முழு முதற் கடவுளாக திகழக்கூடியவர் விநாயகப் பெருமான் என்றும் எந்த ஒரு தெய்வத்தை வழிபாடு செய்வதாக இருந்தாலும் அந்த தெய்வ வழிபாட்டிற்கு முன்பாக விநாயகப் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும் என்றும் நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அனைத்து இடங்களிலும் முதலிடத்தை பிடிக்கக்கூடிய விநாயகரை வளர்பிறை சதுர்த்தி அன்று நாம் வழிபாடு செய்யும்பொழுது அனைத்து விதமான வளங்களையும் நம்மால் பெற முடியும். அதிலும் குறிப்பாக கிரக தோஷம் நீங்குவதற்கும், சிறப்பான வாழ்க்கை வாழ்வதற்கும் வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வரும் வளர்பிறை சதுர்த்தி அன்று செய்ய வேண்டிய வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ

விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்கு அனைத்து நாட்களும் உகந்த நாட்கள் தான் என்றாலும் அதிலும் சில குறிப்பிட்ட நாட்களில் மறவாமல் விநாயகப் பெருமானை வழிபாடு செய்தோம் என்றால் அவரால் நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்கள் உண்டாகும். அப்படி அவருக்குரிய சிறப்பு மிகுந்த நாட்களில் ஒன்றாக திகழ்வதுதான் சதுர்த்தி திதி வரக்கூடிய நாட்கள். அதிலும் வளர்பிறை, தேய்பிறை என்று இரண்டு சதுர்த்திகள் வரும்.

- Advertisement -

பலரும் தேய்பிறை சதுர்த்தியான சங்கர ஹர சதுர்த்தி நாளன்று தான் விரதம் இருந்து விநாயகப் பெருமானை வழிபாடு செய்வார்கள். அப்படி செய்வதன் மூலம் கஷ்டங்கள் தீரும் என்றும் கூறப்படுகிறது. அதே சமயம் வளர்பிறை சதுர்த்தி நாளென்றும் நாம் விநாயகர் பெருமானை வழிபாடு செய்ய நம் வாழ்க்கையில் அனைத்து விதமான வளங்களும் உண்டாகும். அதிலும் இந்த முறை வளர்பிறை சதுர்த்தி என்பது வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வருகிறது. இந்த நாளை நாம் முறையாக பயன்படுத்தினால் நவகிரகங்களால் ஏற்பட்ட தோஷங்கள் அனைத்தும் விலகும்.

மே மாதம் 30ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வளர்பிறை சதுர்த்தி வருகிறது. அன்றைய நாளில் அருகில் இருக்கக்கூடிய விநாயகர் ஆலயத்திற்கு சென்று அவருக்கு இரண்டு நல்லெண்ணெய் தீபத்தை ஏற்றி வைத்து அருகம்புல் மாலை சாற்றி தங்களின் பெயரிலும் தங்கள் குடும்பத்தாரின் பெயரிலும் அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு அவருடைய ஆலயத்தில் தீபம் ஏற்றுவதற்காக சுத்தமான நல்லெண்ணையை வாங்கித் தர வேண்டும். இப்படி தருவதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய எப்பேர்பட்ட கிரக தோஷமாக இருந்தாலும் அது நீங்கும்.

- Advertisement -

இதோடு மட்டுமல்லாமல் நம் வீட்டில் இருக்கக்கூடிய விநாயகர் சிலைக்கோ அல்லது படத்திற்கு அருகம்புல் மாலை சாற்றி அவல் மற்றும் வெல்லத்தை நெய்வேத்தியமாக வைத்து “ஓம் கம் கணபதயே நமஹ” என்னும் கணபதியின் மந்திரத்தை 108 முறை கூறி வழிபாடு செய்பவர்களுக்கு இதுவரை பட்ட கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்த பிறகு நெய்வேத்தியமாக வைத்த அவலை வீட்டில் இருக்கக் கூடிய அனைவரும் பிரசாதமாக உண்ணலாம். இயன்றவர்கள் அன்றைய தினத்தில் அன்னதானம் செய்வது கூடுதல் சிறப்பை தரும்.

இதையும் படிக்கலாமே:செல்வ வளத்தை அதிகரிக்கும் மந்திரமும் எண்ணும்

விக்னங்களை தீர்க்கும் விநாயகப் பெருமானை வளர்பிறை சதுர்த்தி நாளில் வழிபட்டு கிரக தோஷங்களை முற்றிலும் நீக்கி மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்