- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகாலையில் செய்யக்கூடாதவை

காலையில் செய்யக்கூடாதவை

- Advertisement -

காலையில் எழுந்ததுமே செய்யக்கூடிய இந்த ஐந்து விஷயங்களால் அன்றைய நாள் முழுவதுமே சுறுசுறுப்பாக இயங்குவதில்லை! காலையில் விழித்தவுடன் நாம் செய்யும் விஷயங்கள் தான் அந்த நாளின் உற்சாகத்தை தீர்மானிக்கிறது. உங்களுடைய நாள் இனிமையாக இருக்க எந்த ஐந்து விஷயங்களை செய்யக்கூடாது? என்ன செய்ய வேண்டும்? என்னும் ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தொடர்ந்து இந்த பதிவின் மூலம் பகிர்ந்து கொள்கிறோம்.

காலையில் எழுந்ததுமே கண்ணை கசக்கி கொண்டு அப்படியே சிறிது நேரம் படுத்திருக்கக் கூடாது. இது உடலில் இருக்கக்கூடிய சோம்பேறித்தனத்தை இன்னும் கொஞ்சம் அதிகரிக்கும். எந்திரிக்கத்தான் வேண்டுமா? இன்னும் கொஞ்ச நேரம் படுத்து இருப்போமா? என்று தோன்ற ஆரம்பிக்கும். இந்த தவறை ஒருபோதும் காலையில் செய்யாதீர்கள். அடுத்ததாக காலையில் கண் விழித்ததுமே, முதலில் நாம் தேடுவது மொபைல் போனை தான். கண் விழித்ததும் பார்க்கவே கூடாத ஒரு விஷயம் என்றால், அது மொபைல் போன். அதற்குள் ஈடுபாடு போய்விட்டால், மற்ற விஷயங்களில் நமக்கு கவனம் இருக்காது. இதனால் அன்றைய நாளின் முக்கிய வேலைகளை தள்ளிப் போடுகிறோம்.

- Advertisement -

காலையில் எழுந்ததும் முந்தைய காலம் அல்லது முந்தைய நாட்களின் கோபம், வெறுப்பு, ஏமாற்றம் போன்றவற்றை அசை போட்டு பார்க்க கூடாது. தேவையற்ற நெகட்டிவ் எண்ணங்களை எழுந்ததும் மனதில் விதைத்து விட்டால், அன்றைய நாள் முழுவதும் கண்டிப்பாக நீங்கள் சுறுசுறுப்பாக உணர மாட்டீர்கள். எதிர்மறை விஷயங்களை விட, நேர்மறை விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது.

காலையில் கண்விழித்ததுமே சிறிது நேரம் கை, கால்களை அசைத்துக் கொண்டிருப்பது, பிறகு எந்திரிக்கலாம் என்று சும்மாவே படுத்திருப்பது, கால் மேல் கால் போட்டு ஆட்டுவது போன்ற விஷயங்களை செய்பவர்களுக்கும் அன்றைய நாள் சுறுசுறுப்பாக இருப்பதில்லை. எந்த ஒரு விஷயத்தையும் நேரத்திற்கு செய்தால் தான் அதற்கு உரிய பலன்கள் கிடைக்கிறது. நீங்கள் செய்யும் இந்த சிறு சிறு விஷயங்களால் ஒரு நாளை இனிமையாக களிக்க முடியாமல் வீணாக்குகிறீர்கள்.

- Advertisement -

காலையில் எழுந்ததும் சுறுசுறுப்பாக எல்லாவற்றையும் செய்தாலும், முக்கியமான ஒரு விஷயத்தை செய்யாமல் இருக்கக் கூடாது. இறைவழிபாடு இல்லாமல் துவங்கும் எந்த ஒரு நாளும், முழுமை பெறுவதில்லை. காலை வேலைகளை முடித்துவிட்டு மனதார சிறிது நேரம் இறைவனை பிரார்த்தனை செய்துவிட்டு, பின்னர் நீங்கள் உங்களுடைய அந்த நாளை துவங்கலாம். இதனால் தன்னம்பிக்கையும், புது உற்சாகமும் உங்களை காலையிலேயே தொற்றிக் கொள்ளும்.

இதையும் படிக்கலாமே:
கடனை தீர்க்கும் வாராகி மந்திரம்

அதை விடுத்து மேற்கொண்ட விஷயங்களை செய்து கொண்டிருந்தால் உடலில் சோர்வு ஏற்படும். சோம்பல் உங்களைத் தேடி வந்து துரத்தும். உடல் எடை கூடும். அமைதியானது பறிபோகும் வாய்ப்பு அதிகம். மனநிலையில் தடுமாற்றங்கள் ஏற்படும். அன்றைய நாள் முழுவதும் ஏதோ ஒன்று தவறாக நடக்கப்போவதாகவே உங்களுக்கு தோன்றும். இந்த விஷயங்கள் எல்லாம் நடக்காமல் இருக்க, காலையில் சீக்கிரமாகவே எழுந்து கொள்ள வேண்டும். விழித்ததும் தாமதிக்காமல் எழுந்து நின்று பல் துலக்க சென்று விட வேண்டும். அதன் பின்பு குளித்து சுத்தபத்தமாக இறைவனை பிரார்த்தனை செய்துவிட்டு, உங்கள் வேலையை தொடங்கினால், அன்றைய நாள் முழுவதும் எவ்வளவு இடையூறுகள் ஏற்பட்டாலும், நீங்கள் சுறுசுறுப்பாக, இனிமையுடன் வேலை செய்வீர்கள். மனோ வலிமை அதிகரிக்கும். காலையில் விழித்ததும் என்ன செய்யக்கூடாது? என்ன செய்ய வேண்டும்? என்பதை திட்டமிட்டு செயல்படுங்கள், வெற்றி உங்கள் பக்கம் வந்து சேரும்.

சற்று முன்