ஒவ்வொரு மாதம் பிறக்கும் பொழுதும் அந்த மாதம் சிறப்பான மாதமாக அமைய வேண்டும் என்று தான் நாம் ஆசைப்படுவோம். அதற்காகவே சில குறிப்பிட்ட வழிமுறைகளையும் பின்பற்றுவோம். அதிலும் பலரும் தங்களுடைய ராசிக்கேற்றவாறு நட்சத்திரத்திற்கு ஏற்றவாறு வழிபாடுகளையும் மேற்கொள்வார்கள். இதை தவிர்த்து அனைத்து ராசிக்காரர்களும் செய்யவேண்டிய வழிபாட்டு முறையைப் பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஜூன் மாதம் சிறப்பான மாதமாக அமைய
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கிரகங்களும் ஒவ்வொரு இடத்திற்கு மாறும் வழக்கத்தில் இருப்பார்கள். அதனால் அந்த கிரகங்களின் மாற்றத்திற்கு ஏற்றவாறு ஒவ்வொரு ராசிக்காரர்களும் ஒவ்வொரு விதமான தெய்வத்தை வழிபாடு செய்வதன் மூலம் அவர்களுக்கு அந்த மாதத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் இருந்து விடுபட முடியும். அதே சமயம் சிறப்பான ஒரு நல்ல மாதமாக அந்த மாதத்தை மாற்றிக் கொள்ளவும் முடியும். அந்த வகையில் அனைத்து ராசிகளும் செய்ய வேண்டிய பொதுவான வழிபாட்டை பற்றி தான் இப்பொழுது தெரிந்து கொள்ள போகிறோம்.
ஜூன் மாதம் என்பது ஞாயிற்றுக்கிழமையோடு வளர்பிறை சஷ்டி திதியும் சேர்ந்து வரக்கூடிய நாளில் தான் பிறக்கிறது. அதனால் இந்த மாதம் நாம் அனைவரும் முருகப்பெருமானின் ஆலயத்திற்கு இயலும் நாட்களில் எல்லாம் சென்று வழிபாடு செய்ய வேண்டும். ஆலயத்திற்கு செல்ல இயலவில்லை என்பவர்கள் கூட வீட்டிலேயே முருக வழிபாட்டையும் வேல் வழிபாட்டையும் செய்வது என்பது மிகவும் சிறப்பு. அதோடு மட்டுமல்லாமல் சஷ்டி, பிரதோஷம் போன்ற நாட்களில் வீட்டில் தீபம் ஏற்றி வைத்து அந்த தெய்வத்திற்கு உரிய பாடல்களைப் படித்து வழிபாடு செய்வதும் ஒரு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்தும்.
இதோடு நம்முடைய கர்ம வினைகளை தீர்த்துக் கொள்வதற்காக நம்மால் இயலும் நாட்களில் எல்லாம் பசு மாட்டிற்கு கீரையை தானமாக தர வேண்டும். அதேபோல் ஜூன் மாதம் வரக்கூடிய பௌர்ணமி என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அந்த பௌர்ணமி நாளில் பூஜை செய்வதும் நல்ல பலனை தரும். அதோடு மட்டுமல்லாமல் நம்முடைய குலத்தை காக்கக்கூடிய குலதெய்வத்தையும் நாம் வழிபாடு செய்ய வேண்டும்.
ஜூன் மாதம் நம்மால் இயன்ற அளவு அன்னதானம் செய்வது என்பது நமக்கு இருக்கக்கூடிய கடன் பிரச்சினையை தீர்க்கும், நம்முடைய குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தையும், கல்வி வசியத்தையும், அவர்களுடைய எதிர்காலம் சிறப்பாக அமைவதற்கு உரிய வாய்ப்பையும் ஏற்படுத்தும். அதோடு மட்டுமல்லாமல் மனக்குழப்பமும் தீர்வதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. இதோடு சேர்த்து எந்த ஆலயமாக இருந்தாலும் அந்த ஆலயத்திற்கு நெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் இவை மூன்றையும் சரிசமமான அளவு வாங்கி தானமாக தருவதும் நம்முடைய வாழ்க்கையில் ஜூன் மாதத்தை சிறப்பான மாதமாக மாற்ற உதவும்.
இதையும் படிக்கலாமே:வளர்பிறை சஷ்டியில் ஏற்ற வேண்டிய தீபம்
மேல் சொன்ன வழிபாட்டு முறைகளில் ஏதாவது ஒரு வழிப்பாட்டையாவது நாம் ஜூன் மாதம் முழுவதும் தொடர்ச்சியாக செய்து வர இறை அருளால் நமக்கு சிறப்பான மாதமாக ஜூன் மாதம் அமையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.