நம் ஒவ்வொருவரும் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாரித்து பணத்தை சேர்த்து வைத்து, சேர்த்து வைத்த பணத்தை பயன்படுத்தி சொந்தமாக இடம் வாங்க வேண்டும், வீடு வாங்க வேண்டும், சொத்து வாங்க வேண்டும் என்று ஆசைப்படுவோம். கனவும் காண்போம். அப்படி நாம் உழைத்தாலும் பணத்தை சேர்த்து வைத்தாலும் ஒரு சிலரால் சொந்தமாக எந்தவித சொத்தையும் வாங்க முடியாமல் தடைகள் வந்து கொண்டே இருக்கும். புதிதாக வீடு வாங்குவதாக இருந்தாலும் சரி, இடம் வாங்கி வீடு கட்டுவதாக இருந்தாலும் சரி, அதில் பலவிதமான தடைகள் வரும்.
இதே போல் தான் தங்களுடைய அவசிய, அவசர தேவைக்காக தங்களுடைய சொத்துக்களை விற்க வேண்டும் என்று முயலும் பொழுது அந்த சொத்துக்களை விற்க முடியாமல் ஏதாவது ஒரு தடைகள் வரும். இவை அனைத்தையும் நீக்கி சொத்தை வாங்குவதற்கோ விற்பதற்கோ நிலக்கரியை பயன்படுத்தி செய்ய வேண்டிய ஒரு எளிமையான தாந்திர பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
சொத்து வாங்க விற்க நிலக்கரி துண்டு பரிகாரம்
இந்த தாந்த்ரீக பரிகாரத்தை என்றைக்கு வேண்டுமானாலும் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. தங்களுடைய நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் இல்லாத நாளாக பார்த்து செய்ய வேண்டும். இதற்கு நமக்கு ஒரே ஒரு நிலக்கரி துண்டு இருந்தால் போதும். இது அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். இது நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றலை நீக்கக்கூடிய ஒன்றாக திகழ்கிறது. அதனால்தான் பலரும் நிலக்கரியை தங்களுடைய வியாபாரம் செய்யும் இடங்களிலும், வீட்டிலும் வாசலில் கட்டி தொங்கவிட்டு இருப்பார்கள்.
அப்படிப்பட்ட நிலக்கரித்துண்டை வாங்கி ஒரு மஞ்சள் நிற துணியில் கட்டிக் கொள்ளுங்கள். இரவு படுக்கச் செல்லும் பொழுது தலையணைக்கு கீழ் வைத்து படுத்து உறங்க வேண்டும். இப்படி படுத்து உறங்குவதன் மூலம் நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களும் தடைகளும் விலகும். இதன் மூலம் நம்மால் புதிதாக சொத்துக்களை வாங்க முடியும்.
சொத்துக்களை விற்க வேண்டும் அதில் இருக்கக்கூடிய தடைகள் விலக வேண்டும் என்று நினைப்பவர்கள் சொத்து பத்திரத்தை வைத்திருப்போம் அல்லவா? அந்த பத்திரத்திற்கு மேல் இந்த மூட்டையை வைத்து விட வேண்டும். இப்படி பத்திரத்தின் மேல் நிலக்கரியை வைத்து விட்டு அந்த சொத்தை விற்பதற்குரிய முயற்சிகளை நாம் மேற்கொள்ளும் பொழுது அதில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் விலகும். நாம் நினைத்தபடியே சொத்தை நம்மால் விற்கவும் முடியும். நாம் நினைத்த சொத்தை வாங்கிய பிறகும், விற்ற பிறகும் அதற்காக நாம் பயன்படுத்திய இந்த நிலக்கரியை ஓடுகின்ற தண்ணீரில் போட்டு விட வேண்டும்.
இதையும் படிக்கலாமே:வளர்பிறை சஷ்டியில் ஏற்ற வேண்டிய தீபம்
பல கோடி மதிப்புள்ள சொத்தாக இருந்தாலும் அதை வாங்குவதற்கும் விற்பதற்கும் இருக்கக்கூடிய தடைகளை விலக்கக்கூடிய இந்த அற்புதமான தாந்திரீக பரிகாரத்தை முழு மனதோடு செய்து முழு பலனையும் பெறலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.