உப்பு லிங்க வழிபாடு என்பது மகாசக்தி பெற்ற சிறப்பு வாய்ந்த ஒரு வழிபாடாகும். இந்த வழிபாட்டின் மூலம் கிடைக்கும் பலன்கள் பல புராணங்களிலும், ஆன்மீக நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆகமங்கள், மற்றும் பாரம்பரிய வழிபாட்டு மரபுகள் அடிப்படையில் இவை நம்பப்படுகிறது. உப்பு கொண்டு செய்யப்பட்ட லிங்கத்தை வீட்டில் வைத்து வழிபடுவதால் கிடைக்கக்கூடிய பலன்கள் மற்றும் வழிபடும் முறைகளை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தொடர்ந்து இந்த பதிவின் மூலம் பகிர்ந்து கொள்கிறோம்.
ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 4 அதிசய லிங்கங்களில் உப்பு லிங்கமும் ஒன்றாகும். ஒருமுறை சீதாதேவி மணலால் உருவாக்கிய ராமநாதசுவாமி லிங்கம், அபிஷேகத்தின் போது கரையாமல் இருந்தது குறித்து சிலருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அப்போது, பாஸ்கர ராயர் என்பவர் தண்ணீரில் எளிதில் கரையும் உப்பில் ஒரு லிங்கத்தை உருவாக்கி, அதற்கு அபிஷேகம் செய்தார். அந்த லிங்கமும் கரையவில்லை! இதன் மூலம் சீதாதேவி உருவாக்கிய லிங்கம் கரையாதது ஆச்சரியமில்லை என்று நிரூபிக்கப்பட்டது. இந்த உப்பு லிங்கத்தை இன்றும் ராமேஸ்வரம் கோவிலில் ராமநாதர் சன்னிதிக்கு பின்புறம் காணலாம்.
உப்பினால் செய்யப்பட்ட சிவலிங்க வழிபாட்டு பலன்கள்:
உப்பு லிங்கத்தை வழிபட்டால் சகல நோய்களும் குணமாகும் என்பது நம்பிக்கை. இந்த லிங்கத்தை வஜ்ராயுத லிங்கம் என்றும் அழைக்கிறார்கள். உப்புச் சிவலிங்கம் மீது கங்கா ஜலத்துடன் அபிஷேகம் செய்தால், உடல் நோய்கள் விலகும், மன அமைதி பெறலாம், நீரிழிவு, மன அழுத்தம் போன்றவை குறையும் என நம்பப்படுகிறது. வீடுகளில் எதிர்மறை சக்திகளின் தாக்கம் இருக்கும் போது, உப்பு கலந்த நீரை வீட்டின் மையப்பகுதியில் வைப்பதன் மூலம் தீய சக்திகள் நீங்கும் என்று நம்பப்படுகிறது. இது உப்பு லிங்க வழிபாட்டின் ஒரு அங்கமாக பார்க்கப்படுகிறது. உப்பு நெகட்டிவ் எனர்ஜியை உறிஞ்சும் தன்மை கொண்டது, அதனால் கண் திருஷ்டிகள், சாபம், சக்தி குறைபாடு போன்றவை விலகும்.
பொதுவாக, கடலில் இருந்து கிடைக்கும் உப்பில் மகாலட்சுமியின் சக்தி இருப்பதாக நம்பப்படுகிறது. எனவே, உப்பு லிங்க வழிபாடு மகாலட்சுமியின் அருளைப் பெற்று, செல்வ வளத்தை பெருக்கும் என்று கூறப்படுகிறது. உப்பு, மஞ்சள் மற்றும் திரிகடுகம் ஆகியவற்றை கலந்து செய்யப்பட்ட லவண சிவலிங்கத்தை வணங்கினால், எல்லோரையும் வசீகரிக்கும் வசீகர சக்தி உண்டாவதாக கூறப்படுகிறது.
அன்ன லிங்கத்தை வழிபட்டு பிரார்த்தனை செய்தால், நீண்ட ஆயுளைப் பெறலாம் என்று சொல்வார்கள். இந்த வகையில், உப்பு லிங்கமும், சிவபெருமானின் அம்சம் என்பதால், ஆயுள் விருத்திக்கும் உதவும். உப்பு என்பது சுத்திகரிக்கும் சக்தி கொண்டதாக கருதப்படுகிறது. இது தோஷங்களில் இருந்து நிவாரணம் கொடுக்கும். அதனால் உப்பினால் உருவாக்கப்பட்ட லிங்கத்தை பூஜை செய்வதன் மூலம் வாஸ்து தோஷம், கிரக தோஷம், பித்ரு தோஷம் போன்ற நெகட்டிவ் சக்திகளை நீக்க உதவுகிறது என நம்பப்படுகிறது. உப்பு பூமியில் உள்ள அதிர்வுகளை மாற்றும் சக்தி கொண்டது என்பதால், அந்த லிங்கத்துடன் பூஜை செய்தால் வீட்டின் வாஸ்து சக்தியும் சமநிலைப்படும்.
இதையும் படிக்கலாமே:
பணம் சம்பந்தப்பட்ட சங்கடங்கள் தீர்க்கும் பரிகாரம்
உப்பு லிங்க வழிபாட்டு முறைகள்:
உப்பு லிங்கம் நீரில் கரைந்து போகும், ஆகவே தினசரி பஞ்சாமிர்தம் அல்லது கெட்டியான தயிர் கொண்டு அபிஷேகம் செய்யலாம். உப்பு லிங்கம் வழிபாடு செய்ய வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பது முக்கியம். சிலர் ஒரு நாள் அல்லது ஒரு வாரம் பூஜை செய்து அதை வெளியே கரைத்து விடுவார்கள். உப்பு லிங்கத்தை நீண்ட நாள் வைத்திருக்க இயலாது (கரையும்). வைக்குமிடத்தில் ஈரப்பதம் இருந்தால் விரைவில் கரையும் எனவே, சுத்தமாக பராமரிக்க வேண்டியது அவசியம்.