மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று கிருஷ்ணர் கூறியிருக்கிறார். அதேபோல் விரதங்களில் ஏகாதசி விரதம் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த விரதமாக கருதப்படுகிறது. ஒவ்வொரு மாதத்திலும் வளர்பிறையிலும் தேய்பிறையிலும் ஏகாதசி திதி என்பது வரும். அந்த நாளில் பெருமாளை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்பவர்களுக்கு பெருமாளின் அருளால் அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும். ஒருவேளை விரதம் இருந்து வழிபாடு செய்ய இயலவில்லை என்பவர்கள் பெருமாள் ஆலயத்திற்கு சென்றாவது வழிபாடு செய்ய வேண்டும். அப்படி நாம் பெருமாளை வழிபாடு செய்வதற்குரிய ஏகாதசி திதி என்பது ஜூன் மாதம் ஆறாம் தேதி வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வளர்பிறை ஏகாதசியாக வருகிறது.
அன்றைய நாளில் நாம் பெருமாளை வழிபாடு செய்ய நம்முடைய செல்வ செழிப்பு வளர்ந்து கொண்டே போகும், பண தேவைகள் பூர்த்தியாகும் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் அன்றைய தினம் மகாலட்சுமிக்குரிய தினமாகவும் சுக்கிர பகவானுக்குரிய தினமாகவும் இருக்கிறது. ஏகாதசி என்பது பெருமாளுக்குரிய திதியாக இருக்கிறது. அதனால் இந்த நாளில் நாம் வழிபாடு செய்யும் பொழுது பெருமாள், மகாலட்சுமி, சுக்கிரர் என்று அனைவரின் அருளையும் பெற்று செல்வ செழிப்புடன் வாழ முடியும். அப்படிப்பட்ட நாளில் நாம் செய்ய வேண்டிய தீப வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஏகாதசி வழிபாடு
இந்த வழிபாட்டை நாம் மாலை நேரத்தில் 6 மணியில் இருந்து இரவு 11 மணிக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். அதிலும் குறிப்பாக 8 மணியில் இருந்து 9 மணிக்குள் வரக்கூடிய சுக்கிர ஹோரையில் செய்யும் பொழுது நமக்கு அதிக அளவில் பலன் கிடைக்கும் என்று கூறவேண்டும். இதற்கு வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய பெருமாளின் படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். அவருக்கு முன்பாக மூன்று அகல் விளக்கில் நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு வடக்கு அல்லது கிழக்கு பார்த்தவாறு தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள்.
பெருமாளுக்கு நெய்வேத்தியமாக ஏதாவது ஒரு இனிப்பு பொருளை வைக்க வேண்டும். அதிலும் குறிப்பாக மஞ்சள் நிறத்தில் இருக்கக்கூடிய லட்டு, சர்க்கரை பொங்கல் போன்றவற்றை வைப்பது கூடுதல் சிறப்பை தரும் பெருமாளுக்கு வாசனை மிகுந்த மலர்கள் மற்றும் துளசியை சாற்றி பெருமாளை முழுமனதோடு வழிபாடு செய்து விட்டு பின்வரும் இந்த மந்திரத்தை மூன்று முறை கூற வேண்டும். மந்திரத்தை கூறி முடித்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்துவிடலாம். இந்த மந்திரத்தை இரவு நேரத்தில் வரக்கூடிய சுக்கிர ஹோரையில் நாம் கூறுவதன் மூலம் பெருமாளின் அருளால் நம்முடைய பணத்தேவைகள் பூர்த்தியடையும், கடன் பிரச்சனை தீரும், பணத்தால் ஏற்பட்டிருக்க கூடிய எப்பேர்ப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் அந்த பிரச்சினைகள் தீரும்.
மந்திரம்
“ஓம் நிரஞ்சனாய வித்மஹே!
நிராபாஸாய தீமஹி!
தந்நோ ஸ்ரீனிவாச ப்ரசோதயாத்!!”
இதையும் படிக்கலாமே:666 தேவதை வசிய நாள்
முழு மனதோடு பெருமாளை நினைத்து ஏகாதசி நாளன்று விரதம் இருந்தோ இருக்காமலோ இந்த மந்திரத்தை முழுமனதோடு கூறி வழிபாடு செய்பவர்களுக்கு பணம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீரும். செல்வ செழிப்புடன் வாழ முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.