- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபூஜைகளற்ற வைகாசி விசாக வழிமுறை

பூஜைகளற்ற வைகாசி விசாக வழிமுறை

- Advertisement -

வைகாசி மாதம் என்பது மிகவும் சிறப்பு மிகுந்த மாதம். முருக கடவுளை வணங்கக்கூடிய மாதம் என்று கூறுவோம். இதற்கு முக்கியமான காரணம் வைகாசி மாசத்தில் வரக்கூடிய விசாக நட்சத்திரம் தான். இந்த விசாக நட்சத்திரத்தில் தான் முருகப்பெருமான் அவதரித்தார் என்பதால் வைகாசி விசாகத்தில் முருகனை வழிபாடு செய்யக்கூடிய ஒவ்வொரு நபர்களும் தவறாமல் வழிபாடு செய்ய வேண்டும். பலரும் வைகாசி விசாக நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள். ஒரு மாத கால விரதம், 15 நாட்கள், 6 நாட்கள், 9 நாட்கள் என்று மாலை அணிந்து விரதம் இருந்து முருகப்பெருமானின் ஆலயத்திற்கு சென்று முருகப்பெருமானை வழிபாடு செய்வார்கள். ஒரு சிலர் காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும், தீர்த்த குடம் எடுத்தும் வழிபாடு செய்வார்கள்.

இன்னும் சிலரோ அருகில் இருக்கக்கூடிய முருகப்பெருமானின் ஆலயத்திற்கு சென்று அந்த பூஜையில் கலந்துகொண்டு தங்களால் இயன்ற பூஜையை பின்பற்றி வழிபாடு செய்வார்கள். இன்னும் சிலரோ வீட்டிலேயே முருகப்பெருமானுக்கு பூஜைகள் செய்து வழிபாடு செய்யும் வழக்கத்தையும் வைத்திருப்பார்கள். இப்படி பலரும் பல விதங்களில் முருகப்பெருமானை வைகாசி விசாக நாளில் வழிபாடு செய்வது உண்டு. என்னால் அந்த அளவிற்கு சிறப்பாக முருகப்பெருமானை வழிபாடு செய்ய இயலாது, விரதம் இருக்க முடியாது, பூஜை செய்ய இயலாது என்று நினைப்பவர்கள் இந்த எளிமையான வழிமுறையை பின்பற்றினால் போதும் முருகப்பெருமானின் அருளைப் பெற்று விடலாம். அந்த வழிமுறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

வைகாசி விசாக வழிமுறை

இந்த வழிமுறையை பின்பற்றுபவர்கள் முழு மனதோடு முருகப்பெருமானை அன்றைய தினம் முழுவதும் நினைத்திருக்க வேண்டும். விரதம் இருக்கத் தேவையில்லை, ஆலயத்திற்கு செல்ல வேண்டாம், பூஜை புனஸ்காரங்களில் ஈடுபடவும் வேண்டாம். அன்றைய தினம் பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு அந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் வீட்டு பூஜை அறையில் முருகப்பெருமானை நினைத்து தீபம் ஏற்ற வேண்டும். அன்றைய தினம் முருகப் பெருமானுக்கு உகந்த நிறமான பச்சை நிறத்தில் ஆடை அணிந்திருக்க வேண்டும்.

அருகில் இருக்கக்கூடிய முருகன் ஆலயத்தில் முருகப்பெருமானுக்கு மலர்களை வாங்கி தர வேண்டும். தங்களால் வாங்கித் தர இயலவில்லை என்றாலும் பிறர் மூலமாகவது மலர்களை வாங்கி தருவது முருகப்பெருமானின் அருளை பெற்று தரும். இயன்றவர்கள் அன்றைய தினம் பிறருக்கு அன்னதானம் செய்ய வேண்டும். அன்னதானம் செய்யும் அளவிற்கு வசதியில்லை என்பவர்கள் நீர் மோர் தானமாக தர வேண்டும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: வைகாசி விசாகம் 2025

இந்த எளிமையான வழிமுறைகளில் ஏதாவது ஒன்றை மட்டுமாவது வைகாசி விசாக நாளில் முழுமனதோடு முருகப் பெருமானை நினைத்து செய்பவர்களுக்கு முருகப்பெருமானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்