- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகுபேரரை வசியம் செய்யும் தீபம்

குபேரரை வசியம் செய்யும் தீபம்

- Advertisement -

செல்வ செழிப்பிற்கு அதிபதியாக திகழக்கூடியவள் மகாலட்சுமி தாயார். மகாலட்சுமி தாயார் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் கூட அதை தடுத்து நிறுத்தும் வல்லமை படைத்தவராக குபேரர் திகழ்கிறார் என்று புராணங்களில் கூறப்படுகிறது. அதனால் நாம் மகாலட்சுமியை வழிபாடு செய்வதை போலவே குபேரரையும் வழிபாடு செய்தால் தான் செல்வ செழிப்புடன் வாழ முடியும். அப்படிப்பட்ட குபேரரை வழிபாடு செய்வதற்கு உகந்த நாளாக கருதப்படுவது வியாழக்கிழமை. அதிலும் அன்றைய தினத்தில் மாலை நேரம் என்பது குபேரருக்கு உகந்த நேரமாக கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக அந்த சமயத்தில் குபேரரை வசியம் செய்வதற்கு ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

குபேரரை வசியம் செய்யும் தீபம்

பொதுவாக வியாழக்கிழமை என்பது குருபகவானுக்குரிய கிழமை என்றாலும் அது குபேரரை வழிபாடு செய்வதற்குரிய கிழமையாக கருதப்படுகிறது. மாலை 5 மணியிலிருந்து குபேரருக்குரிய நேரம் என்பது தொடங்கிவிடும் என்பதால் பலரும் குபேர பூஜை செய்வதற்கு வியாழக்கிழமை மாலை நேரத்தையே தேர்வு செய்வார்கள். குபேர பூஜை செய்வதற்கென்று பலவிதமான வழிமுறைகள் இருக்கின்றன. அந்த வழிமுறைகளை முறையாக நாம் பின்பற்றி ஒரு குறிப்பிட்ட வியாழக்கிழமைகள் தொடர்ச்சியாக செய்வதன் மூலம் குபேரரின் அருளை பெற முடியும். இவற்றை மேற்கொண்டு குபேரரை வழிபாடு செய்வதை விட ஒரே ஒரு தீபத்தை ஏற்றி வைத்து குபேரரை நாம் வசியம் செய்து விடலாம். அந்த தீபத்தை ஏற்றக்கூடிய முறையை பற்றி இப்பொழுது தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

இந்த தீபத்தை ஜூன் மாதம் 12ஆம் தேதி வியாழக்கிழமை அன்று மாலை 6:40 மணியிலிருந்து 7:15 மணி வரை ஏற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு ஒரு தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் மேல் வாசனை மிகுந்த மலர்களை பரப்பிக் கொள்ளுங்கள். அதற்கு மேல் உங்கள் வீட்டில் குபேர விளக்கு இருக்கும் பட்சத்தில் அந்த விளக்கை வைத்து குபேரருக்குரிய பச்சை நிற திரியை போட்டு நெய் ஊற்றி தீபம் ஏற்றலாம். குபேர விளக்கு இல்லை என்பவர்கள் சாதாரண அகல் விளக்கில் கூட நெய் ஊற்றி பச்சை நிற திரி போட்டு தீபம் ஏற்றலாம். வீட்டில் பச்சை நிறத்தில் திரி இல்லை என்பவர்கள் சாதாரண பஞ்ச திரியை கூட இதற்கு பயன்படுத்தலாம்.

இந்த தீபம் வடக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும். வடக்கு என்பது குபேரருக்குரிய திசை என்பதால் அந்த திசையை பார்த்து தீபம் எரிய வேண்டும். பிறகு அந்த தீபத்தை பார்த்தவாறு “ஓம் குபேரரே வசி வசி” என்னும் மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். இந்த சமயத்தில் குபேரருக்கு ஏதாவது ஒரு இனிப்பு பொருளை நெய்வேத்தியமாக வைத்து வழிபாடு செய்வது என்பது சிறப்பு. மந்திரத்தை உச்சரித்து முடித்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்துவிடலாம். ஏழு பதினைந்து மணிக்கு மேல் அந்த தீபத்தையும் நாம் குளிர வைத்து விடலாம்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க செய்ய வேண்டிய தானம்

மிகவும் எளிமையான இந்த குபேர வசிய தீபத்தை முழுமனதோடு குபேரரை நம்பி ஜூன் 12-ம் தேதி ஏற்றுபவர்களுக்கு குபேர வசியம் உண்டாவதோடு கோடீஸ்வர யோகமும் கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்