- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஜூன் மாதம் மைத்ரேய முகூர்த்தம் 2025

ஜூன் மாதம் மைத்ரேய முகூர்த்தம் 2025

- Advertisement -

எந்த ஒரு வழிபாடாக இருந்தாலும் சரி, எந்த ஒரு பரிகாரமாக இருந்தாலும் சரி, எதற்காக செய்கின்றோம்? அந்த இறைவனை நெருங்க வேண்டும் என்பதற்காகத்தான் வழிபாட்டு முறைகளும், பரிகாரங்களும் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த மைத்ரேய முகூர்த்த நேரமும், இறைவனோடு நம்மை நெருக்கமாக நேரடியாக தொடர்பு படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் வழிபாட்டு முறைதான்.

மாதம் தோறும் ஒரு முறை மைத்ரேய முகூர்த்தம் வரும். அதுவும் 24 நிமிடம் மட்டும்தான் வரும். இது நம்மில் பல பேருக்கு தெரிந்திருக்கும். இந்த ஜூன் மாதம் மைத்ரேய முகூர்த்தம் எந்த நாளில் வருகிறது. எந்த நேரத்தில் வருகிறது. ஆன்மீகம் சார்ந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

ஜூன் 2025 மைத்ரேய முகூர்த்தம்

ஜூன் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12:09 மணி முதல் 12:33 மணி வரை இருக்கிறது. ஆணி முதல் தேதியே இந்த மைத்ரேயே முகூர்த்தம் வந்திருப்பது சிறப்பு. அனைவரும் தூங்கிய பிறகு, இந்த பூமியில் இருக்கக்கூடிய ஓசைகள் எல்லாம் அடங்கிய பிறகு, அமைதியான ஒரு நேரத்தில், இந்த மைத்ரேய முகூர்த்தம் வந்திருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இரவு தூங்கிவிடுவோம்.

நள்ளிரவில் இந்த குறிப்பிட்ட நேரத்தில் கண்விழ்க்க கஷ்டமாக இருக்கும் என்பவர்கள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டாம்., இந்த பிரபஞ்சம் அமைதியாக இருக்கும் நேரத்தில், இறைவனோடு தொடர்பு கொள்ள ஒரு வாய்ப்பு வேண்டும். நாம் நினைத்த வேண்டுதலை எல்லாம் இறைவனின் செவிகளிலேயே சொல்ல வேண்டும், என்று நினைப்பவர்கள் இந்த மைத்ரேய முகூர்த்த நேரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

நீங்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு எப்பவும் போல தூங்கி விடலாம். ஒரு அலாரம் வைத்து 12:00 மணிக்கு எழுந்து முகம் கை கால்களை கழுவிக்கொண்டு, இரண்டு நெய் தீபங்கள் ஏற்றி கிருஷ்ண பரமாத்மாவை மனதார நினைத்து, உங்களுடைய வேண்டுதலை 20 நிமிடம் பிரபஞ்சத்திடம் சொல்லி வேண்டி பாருங்கள். உங்களுடைய வேண்டுதல் நிச்சயம் பலிக்கும்.

ஏதாவது ஒரு வேண்டுதலை மட்டும்தான் பிரபஞ்சத்திடம் சொல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. பலவகையான வேண்டுதலை வைக்கும் போது அதில் சில குழப்பங்கள் வரலாம். இந்த மைத்ரேய முகூர்த்தத்தில் ஒரு வேண்டுதலை இறைவனிடம் சொல்கிறீர்கள். அது பலிக்கும் வரை, அடுத்தடுத்து வரக்கூடிய மைத்ரேய முகூர்த்த நேரத்தில் கூட அதே வேண்டுதலை இறைவனிடம் சொன்னால், அந்த வேண்டுதல் எவ்வளவு பெரிய வேண்டுதலாக இருந்தாலும், நிச்சயம் பலிப்பதற்கு இறைவனின் ஆசிர்வாதம் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: இன்று 12-6-2025 பிரபஞ்ச வசிய நாள்

சில சந்தர்ப்ப சூழ்நிலைகளில் அந்த கடவுளுக்கே சோதனை வந்தபோது, ஜெயிக்க வேண்டும் என்பதற்காக பயன்படுத்திய சக்தி வாய்ந்த நேரம் தான் இந்த மைத்ரேய முகூர்த்த நேரம். கடவுளுக்கே உதவி செய்த இந்த மைத்ரேய முகூர்த்தம், கடவுளின் பக்தனுக்கு உதவி செய்யாதா. இந்த பதிவில் அதிசக்தி வாய்ந்த இந்த நேரத்தை உங்களோடு பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சியுடன் இன்றைய ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்