பலரும் பணத்தை சம்பாதிப்பதற்காக பல விதங்களில் முயற்சி செய்கிறார்கள். எவ்வளவு முயற்சி செய்தும் ஒரு சிலரால் பணவரவை அவர்கள் நினைத்த மாதிரி பெற முடியாமல் இருக்கும். இன்னும் சிலரோ தங்களுடைய பணத்தை பிறரிடம் கொடுத்துவிட்டு அதை திரும்ப வாங்க முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பார்கள். இப்படி பணம் தொடர்பான எந்த பிரச்சினையாக இருந்தாலும் அந்த பிரச்சினை தீர்வதற்கு ஆனி மாதத்தில் நாம் செய்ய வேண்டிய ஒரு பண வரவிற்குரிய பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
ஆனி மாதம் பணவரவு ஏற்பட
ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு விதமான கிரகங்களின் ஆதிக்கம் என்பது இருக்கும். எந்த கிரகத்தின் ஆதிக்கம் எப்படி இருக்கிறது? எந்த கிரகம் நீச்சமடைந்திருக்கிறது? என்பதை பொறுத்துதான் அந்த மாதத்தில் நாம் மேற்கொள்ளக்கூடிய பரிகாரங்களும் இருக்கின்றன. அந்த வகையில் ஆனி மாதம் முழுவதும் நாம் செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரம் நம்முடைய வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பணவரவு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்றே கூறலாம்.
இந்த பரிகாரத்தை ஒவ்வொரு நாளும் காலையில் வீட்டு நிலை வாசல் கதவை திறக்கும் பொழுது செய்ய வேண்டும். இதற்கு கருப்பு மிளகு மற்றும் சோம்பு இவை இரண்டின் பொடிகள் வேண்டும். அதை சரிசமமாக எடுத்து கலந்து வைத்துக் கொள்ளுங்கள். காலையில் எப்பொழுது நீங்கள் நிலை வாசலை திறக்கிறீர்களோ அப்பொழுது கலந்து வைத்திருக்கும் இந்த பொடியில் இருந்து ஒரு சிட்டிகை பொடியை மட்டும் எடுத்து வலது உள்ளங்கையில் வைத்துக் கொண்டு கதவை திறக்க வேண்டும். கதவை திறந்து அந்த பொடியை வீட்டிற்கு வெளியே அதாவது நிலை வாசலுக்கு வெளியே ஊதிவிட வேண்டும்.
நாம் எப்பொழுது அந்த பொடியை கையில் எடுக்கிறோமோ அதிலிருந்து இந்த பொடியை ஊதிவிடும் வரை ஒரு மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும். இப்படி அந்த மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு இந்த பொடியை நாம் ஊதி விடும்பொழுது அந்த மந்திரத்தின் பலனாலும் இந்த பொடியின் பலனாலும் நம் வீட்டை தேடி பணவரவு என்பது வரும். கொடுத்த இடத்திலிருந்து பணம் வரும். இவர்களிடமிருந்து இனிமேல் பணத்தையே வாங்க முடியாது என்று முடிவு கட்டி இருப்போம், அவர்களை நம்மை தேடி வந்து பணத்தை தரும் அளவிற்கு இந்த பரிகாரம் நமக்கு உதவி செய்யும்.
மந்திரம்
“குப்த தன தாராய நமஹ”
இதையும் படிக்கலாமே: எதிர்பாராமல் வந்த பண கஷ்டம் சரியாக பரிகாரம்
தினமும் காலையில் நிலை வாசலை திறக்கும் பொழுது இன்று நமக்கு பணவரவு உண்டாகும் என்ற நம்பிக்கையுடன் இந்த மந்திரத்தை கூறி இந்த பரிகாரத்தை செய்பவர்களுக்கு அவர்கள் நினைத்தது போலவே பணவரவு ஏற்படும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.