- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalசுக்ர தோஷம் நீங்கவும் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையவும்

சுக்ர தோஷம் நீங்கவும் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையவும்

- Advertisement -

ஒருவர் தன்னுடைய அன்றாட வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றால் அவருக்கு சுக்கிர பகவானின் அருள் என்பது வேண்டும். அவர் பணத்தை சம்பாதிக்கிறாரோ இல்லையோ நன்றாக மகிழ்ச்சியாக சிறப்பான முறையில் வாழ்க்கையை நடத்துவதற்கு சுக்கிரனின் அருள் இருந்தால் போதும். அப்படி சுக்கிரனின் அருள் இல்லாத பட்சத்தில் அவரால் எவ்வளவு சம்பாதித்தாலும் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ முடியாது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த சுக்கிர பகவானின் அருளைப் பெறவும் அவரால் ஏற்பட்ட தோஷம் நீங்கவும் செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

சுக்ர தோஷம் நீங்க மகிழ்ச்சியான வாழ்க்கை அமைய வழிபாடு

சுக்கிரனால் ஏற்பட்ட தோஷம் நீங்க வேண்டும் என்று நினைப்பவர்களும், சுக்கிரனின் அருளை பெற வேண்டும் என்று நினைப்பவர்களும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவ வேண்டும் என்று ஆசைப்படுபவர்களும் மறவாமல் ஒவ்வொரு வாரமும் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர பகவானை வழிபாடு செய்ய வேண்டும். இதற்கு பலரும் அருகில் நவகிரகங்கள் இருக்கக்கூடிய ஆலயத்திற்கு சென்று அங்கு இருக்கக்கூடிய சுக்கிர பகவானை வழிபாடு செய்வார்கள். அதைவிட மிகவும் எளிமையான ஒரு வழிப்பாட்டு முறை இருக்கிறது அதை தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அதிலும் முதல் வெள்ளிக்கிழமை என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. முதல் வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர பகவானுக்குரிய பரிகாரத்தையும் மகாலட்சுமி தாயாருக்குரிய வழிபாட்டையும் செய்யும்பொழுது அந்த மாதம் முழுவதுமே நமக்கு சிறப்பான மாதமாக அமையும் என்றே கூறலாம். அந்த வகையில் ஆனி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான இன்று நிலை வாசலில் இந்த பொருட்களை வைத்து வழிபாடு செய்வதன் மூலம் சுக்கிரதோஷம் முற்றிலும் நம்மை விட்டு நீங்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

இதற்கு நமக்கு இரண்டே இரண்டு பொருட்கள் வேண்டும். சுக்கிர பகவானின் அம்சம் பொருந்திய வெள்ளை மொச்சை, அடுத்ததாக ஒரு குண்டு மஞ்சள். ஒரு சிறிய அகல் விளக்கை எடுத்து அதில் வீட்டில் பயன்படுத்தக்கூடிய மொச்சையை ஒரு ஸ்பூன் அளவிற்காவது அதில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதற்காக புதிதாக கடையில் இருந்து மொச்சை வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதேபோல் மற்றொரு அகல் விளக்கை எடுத்து அதில் ஒரு குண்டு மஞ்சளை வைக்க வேண்டும். அகல் விளக்கு இல்லை என்றால் கிண்ணத்தில் கூட வைத்துக் கொள்ளலாம். முடிந்த அளவிற்கு நாம் பயன்படுத்தக்கூடிய பொருட்கள் நிறைவாக இருப்பதைப் போல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இதை காலையிலேயே பூஜை அறையில் வைத்து முழு மனதோடு சுக்கிரனின் தோஷம் முற்றிலும் விலக வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும். இதோடு வீட்டில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிறைய வேண்டும் என்றும் வழிபாடு செய்து கொள்ள வேண்டும். இப்படி வழிபாடு செய்து முடித்த பிறகு அந்த பொருட்கள் அப்படியே பூஜை அறையில் இருக்கட்டும். சரியாக இரவு 8 மணியில் இருந்து 9 மணிக்குள் வரக்கூடிய சுக்கிர ஹோரையில் இந்த வழிபாட்டை செய்வது என்பது சிறப்பு. ஒருவேளை அந்த நேரத்தில் செய்ய இயலாது என்பவர்கள் மாலை 6 மணியில் இருந்து இரவு 12 மணிக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம்.

இப்படி செய்து முடித்த பிறகு இரவு உறங்கச் செல்வோம் அல்லவா? அப்பொழுது கதவை தாழ்பாள் போடுவதற்கு முன்பாக இந்த இரண்டு பொருட்களையும் எடுத்து வீட்டு நிலை வாசலில் வைத்து விட வேண்டும். பிறகு கதவை சாற்றிவிட்டு நாம் உறங்கலாம். மறுநாள் காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு நிலை வாசலை திறந்து வெளியே வைத்திருந்த மொச்சையை எடுத்து பறவைகளுக்கு தானமாக போட்டு விட வேண்டும். மஞ்சளை பெண்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த முறையில் ஆனி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை செய்யக்கூடிய பரிகாரம் நம்முடைய குடும்பத்தில் அனைத்து விதமான மகிழ்ச்சிகளையும் கொண்டு வந்து சேர்ப்பதோடு சுக்கிரதோஷத்தையும் நீக்கும்.

இதையும் படிக்கலாமே: செல்வம் சேர ஆனி முதல் வெள்ளி வழிபாடு

சுக்ரனின் அருளை பரிபூரணமாக பெறவும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழவும் முழு மனதோடு வெள்ளிக்கிழமை அன்று இந்த முறையில் பரிகாரம் செய்யலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்