- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபண பிரச்சனையை தீர்க்கும் குபேர சனீஸ்வரர்

பண பிரச்சனையை தீர்க்கும் குபேர சனீஸ்வரர்

- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகள் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கக்கூடிய கிரகங்களுள் மிகவும் முக்கியமான கிரகமாக திகழக் கூடியவர் தான் சனீஸ்வர பகவான். ஒருவருடைய ஜாதகத்தில் சனிஸ்வர பகவானின் பார்வை பட்டுவிட்டாலே அவருடைய வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும் என்று கூட கூறலாம். ஒவ்வொருவரின் கர்ம வினைகளுக்கு ஏற்றார் போல் பலனை வாரி கொடுக்கக் கூடிய வள்ளலாகவே அவர் திகழ்கிறார். பலரும் சனி திசை நடக்கும் பொழுதுதான் பணம் தொடர்பான பலவிதமான பிரச்சனைகளில் மாட்டிக் கொண்டு தவிப்பார்கள். அப்படிப்பட்ட பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்கு சனீஸ்வர பகவானே வழிபாடு செய்வதைவிட குபேர சனீஸ்வரரை வழிபாடு செய்யும்பொழுது அதன் பலன் இன்னும் அதிகமாகவே இருக்கும். அந்த வகையில் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் குபேர சனீஸ்வரரை எப்படி வழிபாடு செய்ய வேண்டும்? எங்கு வழிபாடு செய்ய வேண்டும்? என்பதை பற்றி நான் பார்க்கப் போகிறோம்.

சனீஸ்வர பகவானை பல பெயர்களைக் கொண்டு பல ஆலயங்களில் வழிபாடு செய்வதை பார்த்திருக்கிறோம். பொதுவாகவே சனீஸ்வர பகவானை நாம் வழிபாடு செய்யும்பொழுது அவரால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறையும். அவருடைய திசை நடக்கக்கூடிய நேரத்தில் ஏற்படக்கூடிய கஷ்டங்களில் இருந்து விடுபட முடியும் என்றும் கூறப்படுகிறது. அவர் கொடுக்கக்கூடிய கஷ்டங்களில் மிகப்பெரிய கஷ்டமாக திகழ்வது பணம் தொடர்பான கஷ்டம் தான். அப்படிப்பட்ட பணம் தொடர்பான கஷ்டத்தை தீர்ப்பதற்கு உதவக் கூடிய சனீஸ்வரராக தான் குபேர சனீஸ்வரர் திகழ்கிறார்.

- Advertisement -

அப்படிப்பட்ட குபேர சனீஸ்வரர் என்பவர் சிவகாசியில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் வழியில் குகன் பாறை என்னும் இடத்தில் வீற்றிருக்க கூடியவராக திகழ்கிறார். இவர் வீற்றிருக்கக்கூடிய ஆலயம் இரண்டாவது காசியாகவே கருதப்படுகிறது. அங்கு காசி விஸ்வநாதரும் அன்னபூரணி அம்மாளும் வீற்றிருக்கிறார்கள். அந்த ஆலயத்தில் இருக்கக்கூடிய சனீஸ்வரரை தான் குபேர சனீஸ்வரர் என்று கூறுகிறோம். இந்த ஆலயத்திற்கு தொடர்ச்சியாக மூன்று பிரதோஷங்கள் யார் ஒருவர் சென்று வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு இருக்க கூடிய திருமண தடைகள் முற்றிலும் நீங்கும் என்றும், விரைவிலேயே திருமண யோகம் உண்டாகும் என்றும், நினைத்த மாதிரி திருமண வரன் அமையும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் அந்த ஆலயத்தில் வீற்றிருக்கக் கூடிய சனீஸ்வர பகவானை வியாழக்கிழமை அன்று மாலை நேரத்தில் அதாவது குபேர வழிபாடு செய்யக்கூடிய 5:30 மணியிலிருந்து 7:30 மணிக்குள் சென்று தீபமேற்றி வழிபாடு செய்வதன் மூலம் சனீஸ்வர பகவானால் பணம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. இதற்காக நம்மால் சங்கரன்கோவில் வரை செல்ல முடியாது மிகவும் தூரமாக இருக்கிறது என்று நினைக்கக் கூடியவர்கள், அவர்கள் வீட்டின் அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு வியாழக்கிழமை அன்று மாலை நேரத்தில் சென்று அங்கு இருக்கக்கூடிய சனீஸ்வர பகவானுக்கு 2 நெய் தீபங்களை ஏற்ற வேண்டும்.

- Advertisement -

அவ்வாறு ஏற்றும் பொழுது “ஓம் குபேர சனீஸ்வராய நமஹ” என்னும் மந்திரத்தை மூன்று முறை கூறிக் கொண்டே ஏற்ற வேண்டும். இப்படி ஏற்றுவதன் மூலம் குபேர சனீஸ்வரரின் அருளை பெற முடியும். அதோடு நம்முடைய வாழ்க்கையில் இதுவரை பணம் தொடர்பாக நாம் எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்தோமோ அந்த கஷ்டங்கள் அனைத்தும் படிப்படியாக விலக ஆரம்பிக்கும். சங்கரன்கோவிலுக்கு செல்ல இயலாதவர்கள் இந்த வழிமுறையை பின்பற்றி குபேர சனீஸ்வரரின் அருளை பெறலாம்.

இதையும் படிக்கலாமே: பாதுகாப்பு கவசமாக திகழும் ருத்ர மந்திரம்

வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த ஆலயத்திற்கு சென்று அங்கு இருக்கக்கூடிய காசி விஸ்வநாதரையும் அன்னபூரணி அம்மாளையும் தரிசிப்பதோடு குபேர சனீஸ்வரன் வழிபாடு செய்பவர்களுக்கு சனீஸ்வர பகவானால் ஏற்பட்ட பண பிரச்சனைகள் தீரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்