- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஎப்பொழுதும் பணம் கையில் இருக்க

எப்பொழுதும் பணம் கையில் இருக்க

- Advertisement -

பணம் தொடர்பாக நாம் எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் அந்த செயலில் வெற்றி பெற வேண்டும் என்றால் அதற்கு மகாலட்சுமியின் அருள் என்பது பரிபூரணமாக வேண்டும். அப்படி மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கு பலவிதமான வழிபாட்டு முறைகள் இருந்தாலும் வெள்ளிக்கிழமையில் செய்யக்கூடிய வழிபாட்டிற்கு அதிகளவு பலன்கள் இருக்கிறது. ஏனென்றால் வெள்ளிக்கிழமை தான் சுக்கிர பகவானுக்குரிய கிழமையாகவும் திகழ்கிறது. அதிலும் குறிப்பாக வளர்பிறையில் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று நாம் பூஜை செய்வதன் மூலம் செல்வங்கள் அதிகரித்துக் கொண்டே செல்லும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட வளர்பிறை வெள்ளிக்கிழமையும் ஆசாட நவராத்திரியும் சேர்ந்து வரக்கூடிய நாளில் மகாலட்சுமி தாயாரை எப்படி வழிபாடு செய்தால் எப்பொழுதும் பணம் கையில் இருக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பணம் கையில் இருக்க வழிபாடு

செல்வ செழிப்புடன் சிறப்பாக வாழ வேண்டும் என்று ஆசைப்படாத நபர்களே இருக்க மாட்டார்கள். அப்படி ஆசைப்படக்கூடிய ஒவ்வொரு நபரும் கண்டிப்பான முறையில் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்ய வேண்டும். எவ்வளவு பணத்தை சம்பாதித்தாலும் அது கையில் தங்காமல் ஏதாவது ஒரு ரூபத்தில் செலவாகிக் கொண்டே இருக்கும் பட்சத்தில் அவர்கள் ஏழ்மை நிலையில் இருக்கிறார்கள் என்று தான் பொருள் படும். அப்படிப்பட்ட ஏழ்மை நிலை நீங்க வேண்டும் என்றால் அவர்களுக்கு அதிர்ஷ்டம் வர வேண்டும். அதிர்ஷ்டம் வந்தாலே எப்பொழுதும் கையில் பணம் தங்கும். அப்படிப்பட்ட அதிர்ஷ்டத்தை தரக்கூடிய ஒரு வழிப்பாட்டு முறையை தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை அமாவாசை முடிந்து வரக்கூடிய முதல் வெள்ளிக்கிழமை அன்று தொடங்கி தொடர்ச்சியாக 21 வெள்ளிக்கிழமைகள் நாம் செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக இப்பொழுது ஆஷாட நவராத்திரி நடந்து கொண்டு இருக்கிறது. இந்த ஆஷாட நவராத்திரி வரக்கூடிய வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று இந்த வழிபாட்டை செய்ய ஆரம்பித்தோம் என்றால் இந்த வழிபாட்டின் பலன் நமக்கு பல மடங்கு கிடைக்கும். அந்த வகையில் ஜூன் மாதம் 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மாலை 6:00 மணிக்கு இந்த வழிபாட்டை செய்ய வேண்டும்.

அனைவரின் இல்லத்திலும் மகாலட்சுமி தாயாரின் படம் அல்லது விக்ரகம் இருக்கும். மகாலட்சுமி தாயாருக்கு முன்பாக இரண்டு அகல்விளக்கில் சுத்தமான நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள். பிறகு மகாலட்சுமி தாயாருக்கு நெய்வேத்தியமாக வெள்ளை நிறத்தில் இருக்கக்கூடிய ஒரு இனிப்பு பொருளையும், கடலை பருப்பை பயன்படுத்தி செய்யக்கூடிய ஒரு மஞ்சள் நிற இனிப்பு பொருளையும் செய்து நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். சந்தன வாசம் வரக்கூடிய ஊதுபத்தி குறைந்தபட்சம் ஐந்து பொருத்தி வைக்க வேண்டும். பிறகு 108 முறை பின்வரும் இந்த ஸ்லோகத்தை கூறுபவர்களுக்கு அவர்களுக்கு இருக்கக்கூடிய அனைத்து விதமான துரதிஷ்டமும் நீங்கி அதிர்ஷ்டம் சேருவதோடு எப்பொழுதும் அவர்கள் கையில் பணம் தங்கும்.

- Advertisement -

ஸ்லோகம்

“துர்கே ஸ்ம்ர்தா ஹரஸி பீதிம்-அஷேஸ்ஸ-ஜன்தோஹ் ஸ்வஸ்தைஹ் ஸ்ம்ர்தா மதிம்-அதீவ ஶுபம் ததாஸி | தாரித்ரய-துஹ்க-பய-ஹாரின்னி கா த்வத்-அன்யா சர்வோ
பகார-கரணாய சதா- [ஆ] ரத்ர சித்தா”

இதையும் படிக்கலாமே: பூஜை அறையில் செய்யக்கூடாதவை

எளிமையான வழிப்பாடாக இருந்தாலும் இந்த வழிபாட்டிற்குரிய பலன் என்பது அபரிவிதமாக இருக்கும். தொடர்ச்சியாக 21 வாரங்கள் நாம் இந்த வழிபாட்டை செய்து முடிப்பதற்குள்ளாகவே நமக்கு இருக்கக்கூடிய பண கஷ்டங்கள் அனைத்தும் நீங்குவதோடு அதிர்ஷ்டம் நம்மை தேடி வரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்