நாளை 6-7-2025 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து ஆனி மாதத்தின் வளர்பிறை ஏகாதசி திதியானது வரவிருக்கிறது. இந்த நாளில் பெருமாள் வழிபாடு செய்வது அதி சிறப்பான பலனை தரும். ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து வரும் இந்த ஏகாதசி திதி, நம்முடைய வருமானத்தில் இருக்கக்கூடிய தடைகளை நீக்கும். ஞாயிறு என்று சொல்லப்படக் கூடிய சூரிய பகவான் தான், நல்ல வேலை கிடைக்க காரணமாக இருக்கிறார்.
நல்ல தொழில் அமைய காரணமாக இருக்கிறார். ஆரோக்கியமாக செயல்படவும் சூரிய பகவான் தான் காரணமாக இருக்கிறார். சூரிய பகவானுக்கு உரிய கிழமையில், வரும் இந்த ஏகாதசி அன்று பெருமாள் வழிபாடு செய்தால் நம்முடைய வருமானத்தில் இருக்கும் தடைகள் விலகும். செய்யும் வேலையில் வருமானம் அதிகரிக்கும். செய்யும் வேலையை திறமையாக செய்யலாம்.
வியாபாரத்தில் சிறந்து விளங்கலாம். ஆரோக்கியத்தோடு வாழலாம். இந்த ஏகாதசி அன்று யாருக்கேனும் 1 கிலோ கோதுமை வாங்கி தானம் கொடுப்பது சிறப்பான பலனை கொடுக்கும். இது முதல் விஷயம். இயலாதவர்களுக்கு, ஒரு ஏழை குடும்பத்திற்கு இந்த தானத்தை நீங்கள் செய்யுங்கள். வேலை சம்பந்தப்பட்ட பிரச்சனை தொழில் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உடனே விலகும்.
இது தவிர நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து சுத்தபத்தமாக குளித்து விடுங்கள். கட்டாயமாக சூரியன் நமஸ்காரம் நாளைய தினம் செய்து கொள்ள வேண்டும். பிறகு பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, பெருமாளை மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள்.
பெருமாளுக்கு துளசி இலைகளை வாங்கி போடுவது, அதிசிறப்பான பலனை கொடுக்கும். பிறகு பெருமாளுக்கு உரிய இந்த அதிசக்தி வாய்ந்த மந்திரத்தை ஒரு முறை படித்து விடுங்கள். திருமாளின் பாதத்தை ஒட்டுமொத்தமாக சரண் அடைந்து, முழு சரணாகதியோடு அடி மனதில் இருந்து, அடி வயிற்றிலிருந்து இந்த மந்திரத்தை படிக்க வேண்டும். உங்களுடைய துன்பங்கள் அந்த நிமிடத்தோடு முடிந்து விட்டது என்று முடிவு கட்டிக் கொள்ளலாம்.
பெருமாள் மந்திரம்
அரியே, அரியே, அனைத்தும் அரியே
அறியேன் அறியே அரிதிருமாலை அறிதல்
வேண்டி அடியேன் சரணம் திருமால் நெறிவாழி
திருத்தொண்டர் செயல் வாழி
ஓம் நமோ நாராயணாயா
எளிமையான தமிழ் வரிகளைக் கொண்ட நான்கு வரி மந்திரம் இதுதான். இந்த வழிபாட்டை முடித்துவிட்டு உங்களுடைய அன்றாட வேலைகளை துவங்கலாம். நாளைய தினம் அசைவம் சாப்பிடக்கூடாது. நாளை முழுவதும் ஏகாதசி திதி உள்ளது. வாய்ப்பு உள்ளவர்கள் வீட்டின் அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி இலைகளை வாங்கி கொடுங்கள்.
இதையும் படிக்கலாமே: கழுத்தை நெறுக்கும் கடனில் இருந்து தப்பிக்க எளிய பரிகாரம்
பெருமாள் கோவிலில் இருக்கும் தாயாருக்கு வாசம் நிறைந்த மல்லிகை பூ வாங்கி கொடுத்து, வழிபாட்டை நிறைவு செய்து கொண்டு, அங்கு கோவிலில் தரும் துளசி தீர்த்தத்தை பருகுவது அதிக அற்புதமான நன்மைகளை நமக்கு கொடுக்கும். கோவிலிலிருந்து கொஞ்சம் தீர்த்தம் கிடைத்தால் வாங்கி வந்து, நம்முடைய வீட்டிலும் பீரோவிலும் தெளித்து விடலாம். நாளைய தினம் ஏகாதசி நாளில் செய்ய வேண்டிய பெருமாள் வழிபாட்டை பற்றிய அறிய தகவலை உங்களோடு பகிர்ந்து கொண்டதில் மனநிறையுடன் இன்றைய ஆன்மீகம் பதிவை நிறைவு செய்து கொள்வோம்.