- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவேண்டுதலை நிறைவேற்றும் மஞ்சள் தேங்காய்

வேண்டுதலை நிறைவேற்றும் மஞ்சள் தேங்காய்

- Advertisement -

நம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு பிரச்சனை தீர வேண்டும் என்பதற்காகவும், எந்த காரியம் நடந்தால் அந்த பிரச்சினை தீருமோ அந்த காரியம் விரைவில் நடைபெற வேண்டும் என்பதற்காகவும், தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவோம். எவ்வளவு முயற்சி செய்தும் எந்த காரியமும் நடைபெறவில்லை என்பவர்கள் தெய்வத்திடம் வேண்டுதலாக அந்த காரியம் நடைபெற வேண்டும் என்று முன்வைப்பார்கள். அப்படி செய்யக்கூடிய வழிபாடுகளில் ஒரு வழிபாடாக தான் விநாயகருக்கு மஞ்சள் தேங்காய் வைக்கும் வழிபாடு திகழ்கிறது. அந்த வழிபாட்டை எப்படி செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

வேண்டுதலை நிறைவேற்றும் பரிகாரம்

எந்த ஒரு காரியத்தில் தடைகள் ஏற்பட்டாலும் சுபகாரியங்கள் நல்லபடியாக நடைபெற வேண்டும் என்று நினைத்தாலும் முழு முதற் கடவுளான விநாயகர் பெருமானை கண்டிப்பான முறையில் நாம் வழிபட வேண்டும். அவரின் அருள் இருந்தால்தான் நாம் செய்யக்கூடிய எந்த முயற்சியாக இருந்தாலும் அதில் வெற்றிகள் உண்டாகும். குடும்பத்தில் பிரச்சினையா விநாயகரை வழிபாடு செய்யுங்கள். மனக்கஷ்டமாக இருக்கிறதா விநாயகரை வழிபாடு செய்யுங்கள். காரிய தடைகள் விலக வேண்டுமா விநாயகரை வழிபாடு செய்யுங்கள். சுப காரியங்கள் விரைவில் நடைபெற வேண்டுமா விநாயகரை வழிபாடு செய்யுங்கள். பிள்ளைகள் சொல்பேச்சை கேட்காமல் இருக்கிறார்களா விநாயகரை வழிபாடு செய்யுங்கள். இப்படி அனைத்து விதமான வேண்டுதல்களையும் நிறைவேற்றி தரக்கூடிய ஒரு அற்புதமான விநாயகர் வழிபாட்டை தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை என்றைக்கு வேண்டுமானாலும் செய்யலாம். செய்யக்கூடிய நாளில் தங்களின் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் இல்லாதவாறு பார்த்துக் கொண்டால் போதும். என்றைக்கு இந்த வழிபாட்டை நாம் செய்கிறோமோ அதற்கு முதல் நாளே நல்ல நிலையில் இருக்கக்கூடிய ஒரு தேங்காயை கடையிலிருந்து வாங்கி வீட்டிற்கு கொண்டு வர வேண்டும். அதன் குடும்பியை முற்றிலுமாக நீக்கிவிட்டு சுத்தமான தண்ணீரில் கழுவிக்கொள்ளுங்கள். சுத்தமான மஞ்சளில் பன்னீரை ஊற்றி நன்றாக குலைத்து தேங்காய் முழுவதும் தடவ வேண்டும். இவ்வாறு தேங்காய் முழுவதும் மஞ்சளை தடவி விட்டு அந்த தேங்காயை அப்படியே வீட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள். அன்று முழுவதும் பூஜை அறையிலேயே அந்த தேங்காய் இருக்கட்டும்.

மறுநாள் காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் குலதெய்வத்தை நினைத்து தீபம் ஏற்றி வைத்துவிட்டு அந்த மஞ்சள் தேங்காயை எடுத்துக்கொண்டு அருகில் இருக்கக்கூடிய விநாயகர் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பொழுது விநாயகருக்காக மலர்களையோ அருகம்புல் மாலையையோ வாங்கிக்கொண்டு செல்லலாம். விநாயகருக்கு மலர்களையோ அல்லது அருகம்புல் மாலையையோ சாற்றி விட்டு அவருக்கு முன்பாக இரண்டு நெய் தீபம் அல்லது தேங்காய் எண்ணெய் தீபத்தை ஏற்றலாம். தீபம் ஏற்ற இயலாது என்பவர்கள் ஒரு கற்பூரத்தை மட்டுமாவது ஏற்றி வைத்துவிட்டு தங்களுடைய இரண்டு கைகளிலும் அந்த மஞ்சள் தேங்காயை வைத்துக் கொண்டு விநாயகப் பெருமானை மூன்று முறை வலம் வர வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு வலம் வந்த பிறகு விநாயகரிடம் எந்த வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதில் ஒரு வேண்டுதலை மட்டும் முன்வைத்து முழு மனதோடு வழிபாடு செய்ய வேண்டும். வழிபாடு செய்து முடித்துவிட்டு அந்த தேங்காயை விநாயகரின் பாதத்தில் வைத்து விட வேண்டும். இப்படி நாம் செய்வதன் மூலம் விநாயகரின் அருளால் நம்முடைய வேண்டுதல் நிறைவேறும். ஒரு மஞ்சள் தேங்காய்க்கு ஒரு வேண்டுதலை தான் முன்வைக்க வேண்டும். அதேபோல் ஒரு முறை ஒரு தேங்காயை தான் விநாயகரின் பாதத்தில் வைக்க வேண்டும். நமக்கு பல வேண்டுதல்கள் இருந்தாலும் ஒவ்வொரு வேண்டுதலுக்காக ஒவ்வொரு முறை ஒவ்வொரு தேங்காய் வைக்க வேண்டுமே தவிர்த்து விட்டு ஒரே தேங்காயில் பல வேண்டுதல்களை வைப்பது அல்லது பல வேண்டுதல்களுக்காக பல தேங்காய்களை வைப்பதோ வழிபாட்டை முழுமை அடையச் செய்யாது.

இதையும் படிக்கலாமே: காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா

மிகவும் எளிமையான விநாயகரின் மஞ்சள் தேங்காய் வழிபாட்டை முழு மனதோடு யார் ஒருவர் செய்கிறார்களோ அவர்கள் முன்வைத்த வேண்டுதல் விநாயகரின் அருளால் விரைவிலேயே நடைபெறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்