அபிஜித் நட்சத்திரம் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த நட்சத்திரமாக கருதப்படுகிறது. அந்த நட்சத்திரம் வரக்கூடிய 24 நிமிடங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்த நிமிடங்களாக கருதப்படுகிறது. அந்த நேரத்தில் நாம் எதை வேண்டினாலும் அது நமக்கு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. தீயவர்கள் அதை பயன்படுத்தக்கூடாது என்ற நல்ல நோக்கத்துடன் கிருஷ்ணர் இந்த நட்சத்திரத்தை தன்னுடைய மயில் இறகில் மறைத்து வைத்தார் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட அபிஜித் நட்சத்திரம் வரக்கூடிய நேரத்தில் கடன் பிரச்சினை தீர்வதற்காக சொல்ல வேண்டிய பெருமாளின் திருநாமத்தை பற்றி நான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
அபிஜித் நட்சத்திர திருநாமம்
பெருமாளுக்கு ஆயிரம் திருநாமங்கள் இருக்கிறது என்று விஷ்ணு சகஸ்ர நாமத்தில் கூறப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு திருநாமத்திற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் கிடைக்குமாம். அந்த திருநாமங்களை தொடர்ச்சியாக முழு நம்பிக்கையோடு கூறும் பொழுது அந்த பலன்களை நம்மால் பெற முடியும் என்றும் கூறப்படுகிறது. அவ்வளவு சிறப்பு வாய்ந்த பெருமாளின் திருநாமங்களில் கடன் பிரச்சினை முற்றிலும் தீர்வதற்கும் அபிஜித் நட்சத்திர நேரத்தில் கூறுவதற்கும் உகந்த ஒரு திருநாமம் இருக்கிறது. அந்த திருநாமத்தை பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.
ஜூலை மாதம் 12ஆம் தேதி காலை 6 24 மணியிலிருந்து 6: 48 மணி வரை அஜித் நட்சத்திரம் இருக்கிறது என்று கூறப்படுகிறது. இந்த நேரமானது சனி ஹோரையாக கருதப்படுகிறது. அதனால் சனிக்கிழமையில் சனி ஹோரையில் அபிஜித் நட்சத்திர நேரத்தில் நாம் இந்த ஒரு வழிபாட்டை செய்யும் பொழுது சனீஸ்வர பகவானால் ஏற்பட்ட கடன் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் நம்மை விட்டு நீங்கும் என்றும் பணவரவில் இருக்கக்கூடிய தடைகள் விலகும் என்றும் கூறப்படுகிறது.
அபிஜித் நட்சத்திரம் வரக்கூடிய நேரத்தில் வலது உள்ளங்கையில் ஒரே ஒரு ஜாதிக்காயை வைத்துக் கொள்ள வேண்டும். ஜாதிக்காய் என்பது மிகவும் ஆகர்சன சக்தி கொண்டதாக கருதப்படுகிறது. பணம் தொடர்பான பலவிதமான பரிகாரங்களுக்கு ஜாதிக்காயை பயன்படுத்துவதுண்டு. இது அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். ஒரே ஒரு ஜாதிக்காயை மட்டும் வலது கையில் வைத்து மூடி கொள்ளுங்கள்.
பிறகு பின்வரும் பெருமாளின் இந்த ஒரு திருநாமத்தை குறைந்தபட்சம் 27 முறையிலிருந்து அதிகபட்சம் 108 முறை வரை கூறலாம். ஆனால் கண்டிப்பான முறையில் இந்த அபிஜித் நட்சத்திர நேரத்தில் தான் இந்த திருநாமத்தை நாம் கூற வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அப்படி கூறி முடித்துவிட்டு கையில் இருக்கக்கூடிய ஜாதிக்காயை பணம் வைக்கும் இடத்தில் வைக்கலாம் அல்லது கடன் தொடர்பாக ஏதாவது பத்திரம் வைத்திருக்கிறோம் என்றாலோ அல்லது அடமான சீட்டை வைத்திருக்கிறோம் என்றாலோ அதனுடன் இந்த ஜாதிக்காயை வைத்து விடலாம்.
ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய அபிஜித் நட்சத்திர நேரத்தில் இந்த வழிபாட்டை நாம் தொடர்ச்சியாக செய்யும் பொழுது விரைவிலேயே கடன் பிரச்சினை முற்றிலும் தீரும். பெருமாளிடம் வேண்டுதல் வைக்கும் பொழுது கடன் தீர வேண்டும் என்று கூறாமல் பணவரவு அதிகரிக்க வேண்டும் என்று வேண்ட வேண்டும்.
திருநாமம்
“ஓம் புரந்தராய நம”
இதையும் படிக்கலாமே: கோவில் பிரசாத பூக்கள்
மிகவும் எளிமையான இந்த பெருமாளின் திருநாமத்தை யார் ஒருவர் முழு நம்பிக்கையோடு அபிஜித் நட்சத்திரம் நேரத்தில் கூறி பெருமாளை வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு இருக்கக்கூடிய கடன் பிரச்சனை முற்றிலும் தீரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.