2025 ஜூலை 13-ஆம் தேதியான இன்று சனி வக்ர பெயர்ச்சி இனிதே நடைபெற்றது. இன்று காலை 9:36 மணி அளவில் இந்த சனி வக்ர பெயர்ச்சியானது நடந்தது குறிப்பிடத்தக்கது. கிரகங்கள் முன்னோக்கி நகர்ந்தால் அது சாதாரணமாக சொல்லப்படும் சனி பெயர்ச்சி. அதுவே சனி கிரகம் பின்னோக்கி நகரும் பட்சத்தில் அதை சனி வக்ர பெயர்ச்சி என்று சொல்வார்கள். 12 ராசிக்காரர்களுக்கும் இந்த சனி வக்கிரப் பெயர்ச்சியில் ஏற்படப் போகும் நன்மை தீமைகளை துல்லியமாக தெரிந்து கொள்ள, இந்த ஜோதிடம் சார்ந்த பதிவினை தொடர்ந்து படிக்கலாம். இந்த ஜோதிடம் சார்ந்த கணிப்பு அடுத்த 138 நாட்களுக்கு உங்கள் வாழ்க்கையில் நீடிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த சனி வக்ர பெயர்ச்சி வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த தடைகளை விளக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு அவமரியாதை ஏற்பட்டு இருந்தால், அதிலிருந்து நீங்கள் விடுபடுவீர்கள். உங்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை அனைவரும் புரிந்து கொள்வார்கள். உங்களுடைய நல்ல மனது அனைவருக்கும் தெரியவரும். வேலையில் ப்ரமோஷன் இடம் மாற்றம் அனைத்தும் நல்லபடியாக கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த சனி வக்கிர பெயர்ச்சியானது குடும்பத்தில் சந்தோஷத்தை கொடுக்கும். நீண்ட நாள் திருமண தடை விலகும். குழந்தை பாக்கியம் வேண்டி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. சுப செலவுகள் வீட்டில் உண்டாக்கும். தடைப்பட்ட அத்தனை நன்மைகளும் குடும்பத்தில் நடக்கும். ஆனால் நீங்கள் வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. உடல் உபாதைகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வக்ர சனி பெயர்ச்சியானது கடன் தொல்லையிலிருந்து விடுதலை கொடுக்கும். நிதிநிலைமை சீராக வரும். வருமானத் தடை சரியாகும். நீண்ட நாள் வசூல் ஆகாத பணம் உங்கள் கையை வந்து சேரும். கோர்ட் கேஸ் வழக்குகள் இனி வரக்கூடிய காலகட்டத்தில் உங்களுக்கு சாதகமாக அமையும் வாய்ப்புகள் இருக்கிறது. வருமானம் அதிகமாக வரும். இந்த சமயத்தில் சேமிப்பை உயர்த்துவது நல்லது. வீண் செலவை குறைக்க நீங்கள்தான் போராட வேண்டும். பணம் தண்ணீராக செலவாக வாய்ப்புகள் உள்ளது.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு நிறைய நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வர போகிறது. அடுத்த 138 நாட்களுக்குள் உங்களுடைய வாழ்க்கையில் மிகப் பெரிய நல்ல மாற்றங்கள் ஏற்படும். ஆனால் எல்லா விஷயத்திற்கும் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். எந்த விஷயத்திலும் அவசரப்படக்கூடாது. கடவுள் உங்கள் மனக்குழப்பத்திற்கும் உங்களுடைய கேள்விக்கும் அடுத்த ஒரு சில நாட்களில் நல்ல பதிலை கொடுப்பான். கவலையே படாதீங்க. நிச்சயம் நல்லது நடக்கும். உறவுகள் நண்பர்கள் என்று உங்கள் மனதை புண்படுத்தியவர்கள் எல்லாம் உங்களிடமே வந்து திரும்பவும் மன்னிப்பு கேட்டு பேசுவார்கள். நம்ப முடியாத அதிசயங்கள் நடக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இனி வரக்கூடிய காலகட்டத்தில் அதிகமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். எவ்வளவுக்கு எவ்வளவு உழைப்பை முதலீடாக போடுகிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு நல்ல பெயரும் வருமானமும் உங்களுக்கு கிடைக்கும். வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். தேவையில்லாத முன் கோபம் வந்து உங்களை பிரச்சனையில் சிக்க செய்ய வாய்ப்புகள் இருக்கிறது. பொறுமையாக நடக்க வேண்டும். மேலதிகாரிகளை பகைத்து கொள்ள வேண்டாம். குடும்ப உறவுகளோடு ஈகோ பார்த்து சண்டை போடக்கூடாது ஜாக்கிரதை.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த சனி வக்கிர பெயர்ச்சி ஆனது அளவில்லா சந்தோஷத்தையும் அதிர்ஷ்டத்தையும் கொடுக்கப் போகின்றது. உங்களுடைய நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். நஷ்டமான தொழிலை கூட லாபகரமாக மாற்ற நிறைய உதவிகள் கிடைக்கும். பார்ட்னர்ரோடு நல்ல உறவு ஏற்படும். எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவார்கள். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். வாழ்க்கையில் முன்னேற தேவையான, நீங்கள் மேற்கொள்ளும் அத்தனை முயற்சிகளும் வெற்றியைத் தரும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இனி வரக்கூடிய காலகட்டத்தில் புது மனிதர்களோடு பேசினாலும் சரி, புது உறவுகள் உங்கள் வீட்டில் வந்து சேர்ந்தாலும் சரி, அவர்களுடன் கவனமாக பழக வேண்டும். புதுசாக வரும் யாராவது ஒருவர் உங்களை ஏமாற்ற வாய்ப்புகள் இருக்கிறது. அதற்காக எல்லோரையும் சந்தேக கண்ணோடு பார்க்காதீங்க. உங்களுக்கு நம்பிக்கையானவர்கள் உங்களோடு இருப்பவர்களால் பிரச்சனை இல்லை. புதுசாக வந்து சேருபவர்களால் பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உள்ளது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வக்ர சனி பெயர்ச்சியானது நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். இத்தனை நாள் முயற்சி செய்து தோல்வி அடைந்த வேலைகளை இனி வரக்கூடிய காலகட்டத்தில் கையில் எடுங்கள். இனி உங்களுக்கு ஏறு முகம் தான். எந்த விஷயத்திலும் இன்று நிதானமாக சிந்தித்து செயல்பட்டால் நிச்சயம் நல்லது நடக்கும். எந்த விஷயத்திலும் அவசர முடிவு எடுக்க வேண்டாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த சனி வக்ர பெயர்ச்சியானது நிறைய நல்ல அனுபவங்களை கற்றுக் கொடுக்கும். சின்ன சின்ன தோல்விகளும் சின்ன சின்ன பிரச்சனைகளும் வரும். ஆனால் அதில் பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது. பிரச்சனைகளை எதிர்கொள்ள நீங்கள் கற்றுக் கொள்வீர்கள். இதனால் இனி வரக்கூடிய காலகட்டத்தில் கவனமாக நடந்து கொள்ளுங்கள். எதிரிகளின் மீது எப்போதும் ஒரு கண் இருக்க வேண்டும். உங்களுடைய பெயர் கெட்டுப் போகாத அளவுக்கு உங்களுடைய நடவடிக்கைகள் அமைய வேண்டும். மூன்றாவது நபரை பற்றி அவதூறு பேசாதீர்கள். எந்த மனிதர்களைப் பற்றியும் பின்னால் சென்று குறை சொல்லாதீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இனி வரக்கூடிய காலகட்டத்தில் நல்ல காலம் பிறக்கும். வேலையில்லாமல் அவதிப்பட்டு வருபவர்கள், புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். சீக்கிரம் நல்ல இடத்தில் கை நிறைய சம்பளத்தோடு நல்ல வேலை கிடைக்கும். புதியதாக தொழில் தொடங்கலாம். புதிய முதலீட்டிற்கு வங்கி கடன் முயற்சி செய்யலாம். அதிக வட்டிக்கு கடன் வாங்காதீங்க. முன்பின் தெரியாத நபருக்கு கடன் கொடுக்க வேண்டாம். யாரை நம்பியும் ஜாமீன் கையெழுத்தும் போட வேண்டாம். உங்களுடைய நகை சொத்து பத்திரம் எதுவாக இருந்தாலும் அடுத்தவர்களை நம்பி அதை கொடுக்காதீங்க.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வக்ர பெயர்ச்சி சந்தோஷத்தை கொடுக்கப் போகிறது. வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றத்தை கொடுக்கப் போகிறது. ஆனால் உங்களுக்கு வரப்போகும் நல்லதை நீங்களே கெடுத்துக் கொள்ளவும் வாய்ப்புகள் உள்ளது. முன் கோபம் வரக்கூடாது. யாரையும் இழிவாக பேசக்கூடாது. வார்த்தையில் கவனம் தேவை. ஒருவர் இல்லாத போது அவர்களைப் பற்றி ஒருபோதும் புறம் பேசாதீர்கள். பேசுவதைக் குறைத்துக் கொண்டாலே இனி வரக்கூடிய நாட்களில் உங்களுக்கு நல்லது அதிகமாக நடக்க தொடங்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இனிவரும் நாட்களில் நல்லது இனிதே நடக்க துவங்கும். பிரச்சனை கொடுத்துக் கொண்டிருந்த எதிரிகள் எல்லாம் கூட நண்பர்களாக மாறுவார்கள். இனி வரக்கூடிய நாட்களில் குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். சுப செலவுகள் அதிகரிக்கும் உற்றார் உறவினர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்யக்கூடிய அளவுக்கு, உங்களுடைய பொருளாதார நிலை உயரும். சேமிப்பை உயர்த்திக் கொள்வீர்கள். வாழ்க்கையின் எதிர்காலத்தைப் பற்றிய பயம் நீங்கும்.