எந்த ஒரு காரியத்தை செய்வதாக இருந்தாலும் அந்த காரியத்தில் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் முழு முதல் கடவுளான விநாயகர் பெருமானை தான் வழிபாடு செய்வார்கள். விநாயகப் பெருமானை வழிபாடு செய்துவிட்டு நாம் ஏதாவது ஒரு காரியத்தை செய்யும் பொழுது நவகிரகங்களால் ஏற்படக்கூடிய தடைகளை அவர் விலக்கி அந்த காரியத்தில் வெற்றியைப் பெறச் செய்வார் என்று புராணங்களில் கூறப்படுகிறது. அவ்வளவு சிறப்பு வாய்ந்த விநாயகப் பெருமானிடம் நம்முடைய வாழ்க்கையில் வெற்றிகளை அடைவதற்கு அவருடைய சுழியைப் போட்டு எப்படி வழிபாடு செய்வது என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
பலரும் தாங்கள் எழுதத் தொடங்கும் பொழுது முதலில் பிள்ளையார் சுழி போட்டு பிறகுதான் ஆரம்பிப்பார்கள். அதேபோல் சுப நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி அது சம்பந்தமாக ஏதாவது பத்திரிகை எழுதும் பொழுது கூட பிள்ளையார் சுழி போட்டு தான் பத்திரிக்கை எழுதுவார்கள். சாதாரணமாக ஒரு மளிகை சாமான் வாங்குவதற்காக நாம் எழுதும் பொழுது கூட முதலில் பிள்ளையார் சுழிதான் போடுவோம். இதன் மூலம் விநாயகரை நம்முடன் இருக்கிறார், நாம் எழுதக்கூடிய அந்த விஷயம் நல்லபடியாக நடந்திடும் என்பது பொருள்படும். அப்படிப்பட்ட பிள்ளையார் சுழியை சங்கடஹர சதுர்த்தி நாளன்று எப்படி போட்டால் நம்முடைய வாழ்க்கையில் வெற்றிகள் உண்டாகும் என்றுதான் தெரிந்து கொள்ள போகிறோம்.
பலரும் பல விதங்களில் பிள்ளையார் சுழி போடுவார்கள். பிள்ளையார் சுழி என்பது உ போட்டு அதற்கு கீழ் இரண்டு கோடுகளை போட்டு அதற்கு கீழ் ஒரு புள்ளியை வைப்பது தான் முறையான பிள்ளையார் சுழி என்று கூறப்படுகிறது. இந்த பிள்ளையார் சுழியை சங்கடஹர சதுர்த்தி நாளன்று சுத்தமான மஞ்சளில் பன்னீரை ஊற்றி குழைத்து நம்முடைய வலது கை மோதிர விரலை பயன்படுத்தி போட வேண்டும். முதலில் இடது கை உள்ளங்கையில் ஒரு பிள்ளையார் சுழியை போட்டுக் கொள்ளுங்கள். பிறகு ஒரு வெள்ளை நிற பேப்பரை எடுத்து அதில் பிள்ளையார் சுழியை போட வேண்டும். 11 முறையோ அல்லது 27 முறையோ பிள்ளையார் சுழியை போட வேண்டும்.
பிறகு அதே மோதிர விரலை நம்முடைய புருவ மத்தியில் வைத்து விநாயகப் பெருமானிடம் வெற்றிகள் வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். இப்படி செய்வதன் மூலம் உடலில் இருக்கக்கூடிய அனைத்து சக்கரங்களையும் அடக்கி ஆளக்கூடிய விநாயகர் பெருமான் நமக்கு அபரிவிதமான சக்தியை கொடுத்து நம்முடைய வாழ்க்கையில் வெற்றியை பெறச் செய்வார். பிள்ளையார் சுழி போட்ட பேப்பரை மடித்து விநாயகப் பெருமானின் படத்திற்கு அடியில் வைத்து விடுங்கள். அன்றைய நாள் முழுவதும் அது அப்படியே இருக்கட்டும். அடுத்த நாள் அந்த பேப்பரை எடுத்து பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட விநாயகரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே: குடும்பத்தலைவி செய்ய வேண்டியது
எளிமையான வழிப்பாடாக இருந்தாலும் இந்த வழிபாட்டிற்கு அதீத சக்தி இருக்கிறது. முழு மனதோடு விநாயகப் பெருமானை நினைத்துக் கொண்டு பிள்ளையார் சுழி போட்டு வழிபடுபவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் என்றென்றும் வெற்றிகள் ஏற்படும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.