- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகவலைகளைப் போக்கும் தேய்பிறை சஷ்டி வழிபாடு

கவலைகளைப் போக்கும் தேய்பிறை சஷ்டி வழிபாடு

- Advertisement -

முருகப்பெருமானை வழிபாடு செய்யக்கூடிய சிறப்பு மிகுந்த நாட்களில் ஒன்றாக திகழ்வதுதான் சஷ்டி திதி. சஷ்டி திதியை வளர்பிறை சஷ்டி என்றும் தேய்பிறை சஷ்டி என்றும் கூறுவது உண்டு. வளர்பிறையில் வரக்கூடிய சஷ்டியில் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு அனைத்து விதமான வளங்களும் பெருகும். அதே போல் தேய்பிறை சஷ்டியில் விரதம் இருந்து வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களுடைய கஷ்டங்கள் அனைத்தும் தேய்ந்து போகும். அந்த வகையில் ஆனி மாதத்தின் கடைசி நாளும் ஜூலை மாதத்தின் 16ஆம் தேதியும் புதன்கிழமையும் சேர்ந்து வரக்கூடிய நாளில் தேய்பிறை சஷ்டி வருகிறது. புதன்கிழமையோடு வரக்கூடிய இந்த தேய்பிறை சஷ்டி நாள் அன்று எந்த முறையில் முருகப் பெருமானை வீட்டில் வழிபாடு செய்தால் நம்முடைய கவலைகள் அனைத்தும் நீங்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

தேய்பிறை சஷ்டி வழிபாடு

முருகப் பெருமானுக்கும் அவருடைய மாமன் என்று கூறக்கூடிய பெருமாளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஒரு சிலர் பெருமாளும் முருகனும் ஒன்றுதான் என்று கூட கூறுவார்கள். இன்னும் சிலரோ முருகன் என்ற சொல்லில் முதலில் வரக்கூடிய மு என்பது முகுந்தனை குறிக்கிறது என்றும் முகுந்தன் என்பவர் பெருமாள் என்பதால் முருகன் என்று சொன்னாலே பெருமாளின் அருளையும் நம்மால் சேர்த்து பெற முடியும் என்று கூறுவார்கள். அந்த வகையில் இந்த முறை தேய்பிறை சஷ்டி என்பது பெருமாளுக்கு உரிய புதன்கிழமை வருகிறது. இது கூடுதல் சிறப்பை தரும். இந்த நாளில் நாம் செய்யக்கூடிய எளிமையான வழிபாடு முருகனின் பரிபூரண அருளைப் பெறச் செய்து நம்முடைய கவலைகளை தீர்த்து வைக்கும்.

- Advertisement -

தேய்பிறை சஷ்டி நாளன்று காலையிலேயே பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துக் கொள்ளுங்கள். தங்களிடம் பச்சை நிற ஆடை இருக்கும் பட்சத்தில் அந்த ஆடையை உடுத்திக் கொள்வது என்பது மிகவும் சிறப்பு. ஏனென்றால் பச்சை என்பது புதன் பகவானுக்குரிய நிறமாகவும் அதேசமயம் முருகனுக்கு உரிய நிறமாகவும் கருதப்படுகிறது. வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய முருகப்பெருமானின் படத்தை சுத்தம் செய்து ஆறு என்ற எண்ணிக்கையில் முருகனுக்கு சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். முருகப்பெருமானுக்கு பச்சை பயிரை வேகவைத்து அதில் உப்பு சேர்க்காமல், தாளிக்காமல் நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். முருகப்பெருமானின் பாதத்திற்கு முன்பாக ஒரு தாம்பாள தட்டை வைத்து அதில் ஒன்று அல்லது ஆறு எண்ணிக்கையில் அகல் விளக்கை வைத்து நெய் ஊற்றி பச்சை நிற திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

முருகப்பெருமானுக்கு மரிக்கொழுந்தை வாங்கி வந்து அலங்காரம் செய்து முருகப்பெருமானின் திருநாமங்களை கூறி மரிக்கொழுந்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். மரிக்கொழுந்து கிடைக்கவில்லை என்பவர்கள் சிவப்பு நிற மலர்களையோ அல்லது வாசனை மிகுந்த மலர்களையோ பயன்படுத்தலாம். முடிந்தவரை மரிக்கொழுந்தை பயன்படுத்த மறவாதீர்கள். இந்த முறையில் நாம் மரிக்கொழுந்தை பயன்படுத்தி அர்ச்சனை செய்த பிறகு நாம் என்ன பிரச்சனை தீர வேண்டும் என்று வேண்டுகிறோமோ அதை கண்டிப்பான முறையில் முருகப்பெருமான் தீர்த்து வைப்பார். கடைசியாக கற்பூர தீப தூப ஆரத்தி காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். இயன்றவர்கள் அருகில் இருக்கக்கூடிய முருகன் ஆலயத்திற்கு சென்று முருகப் பெருமானை வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: முருகன் அருள் 12 ராசிகள்

மாமனுக்கு உகந்த புதன்கிழமை அன்று மருமகனுக்கு உகந்த திதியான சஷ்டி திதி வருவது பல விதங்களில் வாழ்க்கையில் அற்புதங்களை நிகழ்த்தும். இயன்றவர்கள் இந்த முறையில் முருகப் பெருமானை வழிபாடு செய்து தங்களுடைய கஷ்டங்களை தீர்த்துக் கொள்ளலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்