- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகடுமையான பண நெருக்கடியில் இருந்து விடுபட பரிகாரம்

கடுமையான பண நெருக்கடியில் இருந்து விடுபட பரிகாரம்

- Advertisement -

வியாபாரம் செய்யக்கூடிய இடத்திலும் சரி, அல்லது வீட்டிலும் சரி சில சமயங்களில் எதிர்பாராத சூழ்நிலையில் கடுமையான பணத்தட்டுப்பாடு வந்துவிடும். ஏதோ ஒரு சூழ்நிலை கையில் பணம் இல்லை. ஏதோ ஒரு வகையில் பணம் சொத்து நகை நஷ்டமாகிவிட்டது. இந்த பண தட்டுப்பாட்டில் இருந்து நாங்கள் தப்பிக்க வேண்டும் அதிலும் உடனடியாக இதற்கு எங்களுக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்பவர்கள் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை தொடர்ந்து படியுங்கள்.

பணத்தட்டுப்பாடில் இருந்து உங்களை உடனடியாக மீட்டு தரக்கூடிய எளிய தாந்த்ரீகம் சொல்லும் ஒரு ஆன்மீக பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஒரு வெள்ளிக்கிழமை, புதன்கிழமை, வியாழக்கிழமை, இப்படிப்பட்ட கிழமைகளில் இந்த பரிகாரத்தை செய்யலாம். முதலில் காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்து விடுங்கள்.

- Advertisement -

ராகு காலம் எமகண்டம் இல்லாத நேரமாக தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். குலதெய்வத்தை மனதார நினைத்து, வீட்டில் விளக்கு ஏற்றி வையுங்கள். இதுவே உங்கள் வியாபார ஸ்தலம், தொழிற்சாலை, அலுவலகம் இதுபோல இடத்தில் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் என்றால் அந்த இடத்தில் பூஜை செய்யும் பூஜை அலமாரியில் ஒரு விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். இது முதல் விஷயம். குலதெய்வத்தின் ஆசிர்வாதம் உங்களுக்கு முழுமையாக கிடைக்க வேண்டும்.

பண நெருக்கடியில் இருந்து தப்பிக்க பரிகாரம்

ஒரு மண்பானை எடுத்துக் கொள்ளுங்கள். சிவப்பு நிற துணியில், செப்பு காசு அல்லது வெள்ளி காசு இந்த இரண்டில் ஏதாவது ஒரு காசை அதில் வைத்து முடிச்சு போட்டு, இந்த முடிச்சை மண் பானைக்குள் வைத்து விட வேண்டும். அந்த மண்பானை முழுவதும் அரிசி கோதுமை இரண்டையும் சம அளவில் கொட்டி விடுங்கள்.

- Advertisement -

இதற்கு மேலே ஒரு மஞ்சள் துணி போட்டு மூடி வைக்கலாம் தவறு கிடையாது. ஆனால் கேரி பேக், பேப்பர், கவர் எதுவும் போட்டு மூடாதிங்க. இந்த குடுவையை உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு எங்களுக்கு இருக்கும் பணத்தடை, பணகஷ்டம் முழுமையாக சீக்கிரமாக எங்களை விட்டு விலக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து, இதை அப்படியே கொண்டு போய் உங்கள் வீட்டின் வடமேற்கு மூலையில் வைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: எதிர்மறை ஆற்றல்களும் தீய சக்திகளும் விலக

தினமும் விளக்கு ஏற்றும் போது இந்த பானைக்கு ஒரு ஊதுவத்தி மட்டும் காண்பித்தால் போதும். உங்கள் வீட்டில் இருக்கும் கடுமையான பணகஷ்டம், பணத்தடை, பணம் நெருக்கடியானது விலகும் என்பது நம்பிக்கை. இது எளிமையான தாந்திரீக பரிகாரம். உங்களுடைய பணப் பிரச்சனை தீர்ந்ததும், இந்த பானையை அப்படியே கொண்டு போய் ஓடும் நீரில் விட்டு விடலாம். நல்லது நினைப்பவர்களுக்கு நல்லது மட்டுமே நடக்கும் என்ற இந்த தகவலுடன், ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்